அஸ்ஸலாமு அலைக்கும் FACE BOOK என்பது ஒரு அருமையான சமூக இனையதளம். இதன் மூலம் நல்லவற்றையும் தீயவற்றையும் செய்ய முடியும். ஆனால் இதில் செய்யப்படுகின்ற பாவத்துக்கும் நன்மைக்கும் வட்டிக்கு மேல் குட்டி போடு்ம். எப்படி என்றால் உதாரணம் நீங்கள் மாத்திறம் ஒரு சினிமா பாடலை பார்கின்றீர்கள் என்றால் அதை ஒரு முறை பார்த்ததுக்கான பாவம் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் அந்த பாவமான சினிமா பாடலை FACE BOOK க்கின் மூலம் மற்ற நண்பர்களுக்கு அனுப்பும் போது அதை உங்களது அனைத்து நண்பர்களும் பார்ப்பார்கள். அப்படி அனைவரும் பார்க்கும் போது அந்த பாவத்தை அவர்களும் சுமக்க வேண்டும். பாவத்தை ஆரம்பித்து வைத்தமைக்காக அவர்கள் அனைவரது பாவத்தையும் நீங்களும் சுமக்க வேண்டும். உங்களிடம் 1000 நண்பர்கள் இருந்தால் அவர்கள் 1000 பேரின் பாவத்தையும் நீஙகள் சுமக்க வேண்டும். அந்த நண்பர்களில் ஒருவர் அவரின் நண்பருக்கு அனுப்பும் போது அந்த நண்பர்களின் பாவத்தையும் நீங்கள் சுமக்க வேண்டும் இப்படி 1000 ரம் 2000 மாக மாறலாம் ஏன் ஆயிரம் லச்சங்களாகவும் மாறலாம். அதை போன்றே நன்மையும் நீங்கள் ஒரு நன்மையான விடயத்தை நண்பர்களுக்கு அனுப்பும் போது அதை இவ்வாரு பார்க்கும் அனைவரது நன்மையும் உங்களுக்கும் கிடைத்து விடும். “நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் யார் ஒரு நன்மையான காரியத்தை ஆரம்பித்து வைத்தால் அந்த நன்மை இருக்கும் காலம் எல்லாம் அந்த நன்மை அவருக்கு கிடைகும் யார் ஒரு தீமையை ஆரம்பித்து வைத்தால் அந்த தீமை இருக்கும் காலம் எல்லாம் அவருக்கு அந்த தீமை கிடைக்கும்” எனும் கருத்து பட கூறினார்கள் எனவே FACE BOOK மூலம் நல்லவற்றை மட்டும் இன்ஸா அல்லாஹ் செய்யுங்கள்.
நரகத்தின் கொடூரம்!
(ஓரிடத்தில் இப்லீஸிடம் அல்லாஹ் கூறுகிறான்:) ஆனால் எவர்கள் உன்னைப் பின்பற்றி வழிகெட்டுப் போகிறார்களோ அவர்களிடம் மட்டும்தான் உனது அதிகாரம் செல்லுபடியாகும். நிச்சயமாக அப்படிப்பட்டவர்கள் அனைவருக்கும் நரகமே என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது! (இப்லீஸை பின்பற்றுவோருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள) அந்நரகத்திற்கு ஏழு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு பிரிவினருக்கென ஒதுக்கப்பட்டுள்ளது' (15 : 42 -44) மேலும் அந்த நரகம் என்னவென்று நீர் அறிவீரா என்ன? அது இருக்கவும் விடாது., விட்டும் வைக்காது! அது சருமத்தைக் கரித்துவிடக்கூடியது' (74 : 26-29) திண்ணமாக ஸக்கூம் - கள்ளி மரம் பாவிகளின் உணவாக இருக்கும். அது எண்ணைக் கசடு போலிருக்கும். சூடேறிய நீர் கொதிப்பது போன்று வயிற்றில் கொதிக்கும்' (44:43-45) நுஃமான் பின் பசீர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகில் வீழ்ந்து கிடப்பவர்களில் மிக லேசான தண்டனையை அனுபவிப்பவன் நெருப்பினால் செய்யப்பட்ட இரண்டு செருப்புககையும் இரண்டு வார்களையும் அணிந்திருப்பான். அவற்றின் வெப்பத்தினால் அவனது மூளை கொதிக்கும்., அடுப்பில் சட்டி கொதிப்பது போன்று! அனைவரை விடவும் லேசான வேதனையை அனுபவிப்பவன் அவனாகவே இருப்பான். ஆயினும் தன்னை விடவும் கடுமையான வேதனையை எவரும் பெற்றிருக்க மாட்டார் எனக் கருதுவான்' (நூல் : முஸ்லிம்) அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகவாசிகளைச் சேர்ந்த ஒரு மனிதனிடம் கேட்கப்படும்: நீ என்ன சொல்கிறாய்? பூமியிலுள்ள பொருள்கள் அனைத்தும் உன்னிடம் இருந்திருந்தால் அவற்றை ஈடாகக்கொடுத்து வேதனையிலிருந்து நீ விடுபடலாம் எனக் கருதுகிறாயா, என்ன? அதற்கு அவன் ஆம் என்பான்! இறைவன் சொல்வான்: இதனை விட எளிதான ஒன்றைத்தானே உன்னிடமிருந்து நான் எதிர்பார்த்தேன்! ஆதத்தின் முதுகில் நீ இருந்தபோது என்னோடு எது ஒன்றையும் நீ இணையாக்கக் கூடாது என்று உன்னிடம் வாக்குறுதி வாங்கினேன். ஆனால் எனக்கு இணைகற்பிப்பதில்தான் நீ பிடிவாதமாக இருந்தாய்' (நூல்:அஹ்மத் - முஸ்லிம் - புகாரி
மரணம்
ஒரு நாள் வரும், அன்று
நீ குளிக்க மாட்டாய்
உன்னை குளிப்பாட்டுவார்கள்.
...நீ உடை அணிய மாட்டாய் !
உனக்கு அணுவிக்கப்படும்.
நீ பள்ளிவாசல் போக மாட்டாய் !
உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள்.
நீ தொழ மாட்டாய் !
உன்னை வைத்து தொழப்படும்.
நீ அல்லா்ஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் !
உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.
அன்று உன்னை தனியாக விட்டு விட்டு
உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள்.
அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள். .
அது தான் மௌவுத் (மரணம் )
"அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது''
ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்
ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.
ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.
நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.
ஃபித்ராவின் நோக்கம்
இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது.
நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817
நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.
கொடுக்கும் நேரம்
மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503, 1509
இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.
பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.
பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.
பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, “பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்” என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.
ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்” என்று நான் கூறினேன். அதற்கு அவன் “எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது” எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, “நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்” என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்” என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து “உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகி றேன்” என்று கூறினேன். “எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்” என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, “உன் கைதி என்ன ஆனான்?” என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். “அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.
“இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டுவதையே குறிக்கிறது. ஃபித்ராவை குறிக்கவில்லை” என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.
ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் ‘ரமளான் ஜகாத்’ என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும்.
இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத் தினார்கள்” என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது.
எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப் பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது.
எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது. திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது.
ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (அல்லது கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ரா வைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.
நபித் தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.
எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது
பெருநாள் தொழுகை
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612
பெருநாள் தொழுகையில் பெண்கள்:
பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வர வேண்டும். அவர்கள் தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம். பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது?” என்றார். அதற்கு, “அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 351, முஸ்லிம் 1616
ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்
பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.
பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரீ 986
தொழுகைக்கு முன் சாப்பிடுதல்
நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள்.
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரீ 953
நோன்புப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: இப்னுகுஸைமா 1426
முன் பின் சுன்னத்துகள் இல்லை
இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின் சுன்னத்துகள் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைக்கு முன்னரும், பின்னரும் எந்தத் தொழுகையையும் தொழுததில்லை.
நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று (திடலுக்குச்) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும், பின்னும் எதையும் தொழவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1431, முஸ்லிம் 1616
பாங்கு இகாமத் இல்லை
இரு பெருநாள் தொழுகைக்கும் பாங்கு, இகாமத் கிடையாது.
இரு பெருநாள் தொழுகையை பாங்கும் இகாமத்தும் இல்லாமல் ஒரு தடவை அல்ல; இரு தடவை அல்ல; பல தடவை நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுள்ளேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி), நூல்: முஸ்லிம் 1610
மிம்பர் இல்லை
வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவது போல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக் கூடாது. தரையில் நின்று தான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வான் பெருநாள் அன்று மிம்பரில் ஏறி பயன் செய்தபோது.
“மர்வானே! நீர் சுன்னத்திற்கு மாற்றம் செய்து விட்டீர்! பெருநாள் தினத்தில் மிம்பரைக் கொண்டு வந்துள்ளீர். இதற்கு முன்னர் இவ்வாறு கொண்டு வரப்படவில்லை…” என்று இடம் பெற்றுள்ளது.
ஆதாரம் : அபூதாவூத் 963, இப்னுமாஜா 1265, அஹ்மத் 10651
நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று ஒரேயொரு உரையை நிகழ்த்தினார்கள் என்பதற்கே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில் அமர்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்குச் செல்வதற்காக) வெளியேறினார்கள். மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம் கூறினார்கள். தரையில் நின்று மக்களை நோக்கி (உரை நிகழ்த்தி)னார்கள். மக்கள் அமர்ந்திருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1278
தக்பீரும் பிரார்த்தனையும்
இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும். மேலும் திடலில் இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவமும் உள்ளது.
பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 971, முஸ்லிம் 1615
அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான் தக்பீர் ஆகும். பெருநாளைக்கு என நபி (ஸல்) அவர்கள் தனியான எந்தத் தக்பீரையும் கற்றுத் தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. மேலும் பெருநாளில் கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் சிறப்பு தக்பீர் சொல்ல வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை. மேலும் பெருநாளில் தக்பீர்களைச் சப்தமிட்டு கூறக் கூடாது.
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7:205
மனைவி என்னும் துணைவி
மனைவியென்னும் மாதரசி நாடும் அன்பை
மகிழ்வுடனே மதித்திடுவோம் அவளின் பங்கை
நினைவிலென்றும் நீங்காது நெஞ்சில் மேவும்
நித்தமவள் வழங்கிவரு மின்பம் யாவும்
சுனைநீராய் வற்றாமல் தியாகம் செய்வாள்;
சுரக்குமன்பால் மறவாமல் நியாயம் செய்வோம்!
பனைமரமாய் நற்பலன்கள் தருவாள் என்றும்
பகுத்தறிவைப் பயன்படுத்திச் செய்வோம் நன்றி
சலவையையும் சளைக்காமல் செய்வாள்;ஊணும்
சமைத்திடுவாள்; இல்லத்தில் தூய்மை காணும்
நிலவினைப்போல் வெளிச்சமாக்கி வைத்துக் காத்து
நிற்குமவள் செயலுக்குச் சொல்வோம் வாழ்த்து
புலமையுடன் கூரறிவும் பெற்ற இல்லாள்
புத்தியுடன் கணவனுக்கு வழியும் சொல்வாள்
கலவரமாய் முகத்தினில் ரேகைப் பார்த்து
கவலைகளும் போக்கிடுவாள் அன்பை ஈந்து
இல்லாளை மதிப்போர்க்கு வாழ்க்கை இன்பம்
இல்லாத சந்தேகம் கொண்டால் துன்பம்
பொல்லாதப் பழிகளையும் நம்ப வேண்டா
பொய்சொல்லி ஆபத்தில் சிக்க வேண்டா
நல்லோராய்க் குழந்தைகள் வளர வேண்டி
நாடோறும் கஷ்டங்கள் யாவும் தாண்டி
சொல்லொண்ணாப் பொறுமையினை நெகிழ்ந்து யோசி
சொர்க்கமெனக் கொண்டாடி மகிழ்ந்து நேசி
“கவியன்பன்” கலாம், அதிராம்படினம்
யாப்பிலக்கணம்: காய், காய், மா, தேமா(அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும்
எண்சீர் கழிநெடிலடி விருத்தம்
எனது கவிதை மலர்கள் பூத்துள்ள வலைப்பூத்தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/
சிறுமியின் கற்பைக் காப்பாற்றிய குர்-ஆன் வசனங்கள்
ஜெத்தா: சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தேறியுள்ளது. இங்கு அதிகமாக திருமணங்கள் பெரும் ஹால்களில் வாடகைக்கு பிடித்து நடத்தப்படும். அது போல் ஒரு திருமண வைபவத்தில் பெண்கள் பகுதிக்கு ஒரு சவுதி காமுகன் வந்துள்ளான். 10 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தனியாக நிற்கவும் ‘என் காரில் மாப்பிள்ளைக்கு அன்பளிப்பு உள்ளது. எனது கார் வரை வர முடியுமா பெண்ணே!’ என்று அவன் கேட்டுள்ளான். திருமணத்துக்கு வந்த உறவினர் என்று நினைத்து அவனுடன் உதவி செய்ய அந்த பெண் சென்றுள்ளாள். வாகனத்துக்கு பக்கத்தில் சென்றவுடன் ‘காரில் ஏறு! பரிசுப் பொருள் வீட்டில் இருக்கிறது. எடுத்துக் கொண்டு வந்து விடலாம்’ என்று சொல்லிக் கொண்டே பின் சீட்டில் அந்த பெண்ணை தள்ளி, வண்டியையும் எடுத்து விட்டான். சாப்பாடு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்ததால் இங்கு நடந்த இந்த களேபரங்கள் பெண்ணின் குடும்பத்தின் கவனத்துக்கு வரவில்லை.
வெளியேற முயற்ச்சித்த அந்த பெண்ணை ‘சத்தம் போடாதே!’ என்று மிரட்டவும் செய்துள்ளான். ‘உனது தகப்பனாரை எனக்குத் தெரியும். நான் போனில் பேசிக் கொள்கிறேன்’ என்று சொல்லவும் சற்று அமைதியாகியிருக்கிறாள் அந்த பெண். அவனின் வீடும் வருகிறது. வீட்டினுள் வந்த அவன் அந்த பெண்ணை அழைத்து சென்று ஒரு அறையில் பூட்டியிருக்கிறான். 10 வயதே ஆன அந்த பெண் என்ன நடக்கிறது என்பதை யூகிப்பதற்குள் எல்லாம் நடந்திருக்கிறது.
பிறகு ஹாலில் அமர்ந்த அவன் சீசா குடிக்க ஆரம்பித்துள்ளான். அரபுகள் நீண்ட குழாய் மூலமாக புகையை இழுத்து விடுவது ஒரு வழக்கம். இதற்கு சீசா குடித்தல் என்று சொல்வார்கள். படங்களில் கூட பார்த்திருக்கலாம். சிலர் இதில் போதை மருந்துகளையும் கலந்து குடிப்பது உண்டு. அரசுக்கு தெரிந்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்.
வீட்டில் யாரும் இல்லாததும் அவனுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது. சீசா குடித்து முடிந்தவுடன் அந்த பெண்ணின் அருகே நெருங்கி வந்துள்ளான். நடக்கப் போவதை உணர்ந்து கொண்ட அந்த பெண் தனக்கு தெரிந்த குர்ஆன் வசனங்களை மளமளவென்று வேகமாக ஓத ஆரம்பிக்கிறாள். இதனால் கோபம் உண்டான அவன் ‘குர்ஆன் ஓதுவதை நிறுத்து’ என்று கூறி முகத்தில் அடித்திருக்கிறான். இதே போல் பலமுறை முயற்சி செய்தும் ஒவ்வொரு முறையும் அந்த பெண் குர்ஆனை ஓதுவதும் அவன் அடிப்பதுமாக இரவு முழுதும் நடந்திருக்கிறது.
“Every time he came closer to me, I started reciting Quran and he would withdraw” she said.
அவனும் அரபி மொழி பேசுபவன். அந்த வசனங்கள் என்ன சொல்கிறது என்பது விளங்கியதால் அந்த பெண்ணிடம் அவன் நெருங்க மனது இடம் தரவில்லை. இதுபோல் பலமுறை முயற்ச்சித்தும் முடியாமல் போக முடிவில் தனது தவறை உணருகிறான். காலையும் நெருங்கியது. அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு எங்கு பிடித்தானோ அந்த இடத்திலேயே அந்த பெண்ணை இறக்கி விட்டு தலைமறைவாகியிருக்கிறான்.
திருமண மண்டபத்தில் காலை நேரமாகையால் யாரும் இல்லை. பிறகு வழியில் சென்ற ஒருவரை நிறுத்தி தனது தகப்பனின் செல் நம்பரை அந்த பெண் கொடுத்துள்ளாள். அந்த நல்ல மனிதர் அந்த பெண்ணின் தகப்பனோடு பேசி அவரை வரவழைத்தார். தனது மகளை கண்டவுடன் தந்தை அழுதது நெகிழ்ச்சியாக இருந்தது.
-நன்றி: அரப் நியூஸ்
21-06-2011
இங்கு நாம் ஒன்றை யோசிக்க வேண்டும். நமது நாட்டை விட இது போன்ற தவறுகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கக் கூடிய நாடுதான் சவுதி. இருந்தும் துணிந்து ஒரு பெண்ணை கடத்தி சென்றவனை சமயோஜிதமாக குர்ஆன் வசனங்களை கொண்டு அவனை ஒரு வழிக்கு கொண்டு வந்துள்ளாள் அந்த பெண். இத்தகைய மன உறுதி ஒரு சில பேருக்குத்தான் வரும். அது இறைவனின் வார்த்தை என்பதை இருவரும் உணர்ந்ததால்தான் ஒரு பெரும் தவறு நடக்கவிருந்தது தவிர்க்கப்பட்டது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
இந்த சம்பவத்தை இன்று நான் படித்த போது முகமது நபி முன்னொரு காலத்தில் நடந்த ஒரு சமபவத்தை சொன்னது உடன் ஞாபகம் வந்தது. அதையும் பகிருகிறேன்.
2272. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் ‘நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!” என்று தமக்குள் கூறினர்.
அவர்களில் ஒருவர் ‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!
மற்றொருவர், ‘இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, ‘முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!” என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமேவிட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை விலகியது: ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.
மூன்றாமவர், ‘இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!” என்று கூறினார். ‘நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!” என்று கூறினேன். அதற்கவர் ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!” என்றார். ‘நான் உம்மை கேலி செய்யவில்லை!” என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். ‘இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்
நம் உடலில் அதிசயம்: “தன்னை அறிந்தால் தன்னைப் படைத்தவனை அறிவாய்”
உங்களுக்கு உள்ளாகவும் (பல அத்தாட்சிகள் இருக்கின்றன அவைகளை) நீங்கள் ஆழ்ந்து கவனித்துப் பார்க்க வேண்டாமா?’ (51:21)
‘நாம்தாம் அவர்களைப் படைத்தோம்; நாம்தாம் அவர்களுடைய அமைப்பையும் உறுதிப்படுத்தினோம்’ (76:28)
‘திட்டமாக நாம் மனிதனை மிக்க மேலான வடிவத்தில் படைத்தோம்’ (95:04)
இந்த வசனங்கள் மனிதனாகிய நம்முடைய படைப்பு நம்முடைய அமைப்பு, நம்முடைய அவயங்களின் மீது அல்லாஹ் தன் முத்திரையை பதித்திருப்பதை, இது போன்ற வசனங்கள் குர்ஆன் நெடுக காணமுடிகிறது. தன்னை அறிந்து கொண்டவன் அல்லாஹ்வை அறிந்து கொண்டான்:
இந்த கட்டுரை மூலம் ஒரு சில அவயங்களின் புள்ளி விபரங்களையும், சில அவயங்களின் பணிகளையும் மிகச் சொற்பமாகவே சுட்டிக் காட்டியுள்ளேன். அதுவும் 100 புள்ளிகளில். ஒவ்வொரு அவயத்தின் படைப்பின் நுட்பத்தை நவீன விஞ்ஞானத்தின் மூலம் காணும் போது படைத்த அல்லாஹ்வே புகழுக்குரியவன், என நம் வாய்முணு முணுக்கிறது அத்தனை ஆச்சரியங்களையும் எழுதி முடித்துவிட முடியாது.
உதாரணத்திற்கு, நமது மூளையைப் பற்றி நவீன விஞ்ஞானம் அறிந்து கொண்டது மிகமிக சொற்பமானது தான் இன்னும் தெரியாத புரியாத விளங்கிக் கொள்ள முடியாத விநோதங்கள் ஏராளம், ஏராளம்.
அல்லாஹ்! நீயே மகத்துவமானவன்; நீயே சிறந்த படைப்பாளன்: நீயே சிறந்த பாதுகாவலனும் கூட..
1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது.
2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்.
3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடதுகால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்.
4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல்படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்;கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது ரூஹ் பிரிந்தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை.
5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும். பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இதுதவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்றுமுன்னாடியே (குறை பிரசவம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்.
6. பகலில் 8 மில்லிமீட்டர் சுறுங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும் போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசை காரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத்தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது.
7. நம் இரத்தத்தில்; சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்துவிடும். புது சிவப்பணுக்கள் உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்.
8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன.
9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விரலில் நகம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கைவிரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக வளர்கிறது.
10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம், இந்தப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்
மரணம் பயம் அல்ல; அஃது ஒரு பயணம்
இரவும் பகலும் மாறும்
இறைவன் வகுத்த நியதி
வரவும் செலவும் சேரும்
வணிகக் கணக்கின் நியதி
இரவு மட்டு மிருந்தால்
இயங்க மறுக்கு முலகம்
வரவு மட்டு மிருந்தால்
வணிக வளர்ச்சி விலகும்
உறவும் பிரிவு மிணைந்து
ஊடல்; காதல் கலந்து
பிறப்பின் முடிவி லுறவைப்
பிரியு முயிரும் பறந்து
இறப்பின் மூலம் சென்று
இறையைக் காண; மீண்டும்
பிறந்து மறுமை வாழ்வும்
பின்னால் தொடர வேண்டும்
கோவை கலவரம்:
திமுக அரசு முஸ்லிம்களுக்கு செய்த துரோகம் கோவையில் 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படவும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் அழிக்கப்படவும், காவல்துறையின் கருப்பு ஆடுகளுக்கும் பாசிச சங்பரிவார் கூட்டணிக்கும் கலைஞர் அரசு தந்த ஆதரவுப் போக்கே காரணம் என்பதை அனைவரும் அறிவோம். கோவையில் 19 முஸ்லிம்களின் அநியாயப் படுகொலைகளுக்கு கலைஞர் அரசே முழுக்க முழுக்க காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் சொந்தப் பகையை தீர்க்க ஒரு வன்முறைக் கும்பல் ஒரு காவல்துறை அதிகாரியை அமைச்சர்களுக்கு கண் எதிரிலேயே கொடூரமாகக் கொன்று தீர்த்தது. அது மிகப்பெரிய கொடூர நிகழ்வாக இருந்தும் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிக்காக ஒட்டுமொத்த காவல்துறையே கொலை செய்த குடும்பத்தைச் சேர்ந்த சமுதாயத்தை பழிதீர்க்கப் புறப்படவில்லை. ஆனால் 1997 நவம்பரில் கோவையில் காவலர் செல்வராஜ் ஒரு கும்பலால் கொல்லப்படுகிறார். கொலையாளிகள் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என திட்டமிட்டு வேட்டையாடியது கலைஞரின் காவல்துறை. ஒரே நாளில் ஒரு படுகொலை நிகழ்வை மட்டும் காரணம் காட்டி ஒட்டுமொத்த சமுதாயமே கோவையில் வேட்டையாடப்பட்டது திடீரென்று நிகழ்ந்த ஒன்றாகக் கருதிட முடியாது. 1997 நவம்பரில் நிகழ்ந்த படுகொலைகள் மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது குறித்து திட்டமிடல்கள் குறித்து உளவுத்துறையை தம் கையில் வைத்திருக்கும் கலைஞருக்கு தெரிந்தே இருக்க வேண்டும். இருந்தும் அவர் முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறினார். இது கோவை விவகாரத்தில் அவர் செய்த முதல் குற்றம். குதறப்பட்ட மக்களின் கதறல்களை அவர் பொருட்படுத்தவில்லை. ஆறுதல் கூறக்கூட அவர் செல்லவில்லை. ஆனால் அதே காலகட்டத்தில் அருகிலுள்ள கோபிச்செட்டிபாளையத்துக்கு கலைஞர் சென்றார். அந்தப் பகுதியில் மர்ம நோயால் மரணமடைந்த ஆடுகளை பார்வையிடச் சென்றார். ஆடுகளுக்கு காட்டிய கருணையை, ஆறுதல்களைக் கூட கோவையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கவில்லை. அது மட்டுமின்றி கோவை படுகொலைக்காக இதுவரை பகிரங்க வருத்தமோ மன்னிப்போ கேட்காதவர் தான் கலைஞர். ஏறக்குறைய 200 பேரை கோவையில் 1998 பிப்ரவரியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடர்புபடுத்தி சிறைக்கொட்டடியில் தள்ளி கொடுமைகள் புரிய காரணமானார். ஆனால் 1997 நவம்பர் படுகொலைகளுக்கு காரணமாக கொலையாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படவில்லை. கோவையில் முஸ்லிம்களை கருவறுக்க முழு பங்கு வகித்த காவல்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்காததோடு அவர்களுக்குப் பதவி உயர்வுகளை வழங்கி, நீதியை ஏளனம் செய்தார் கலைஞர்.
குர்ஆனில் பிழையா? ஜைனுல் ஆபிதீனுக்கு ஏற்பட்ட பிழையா?
ஒரு மலையை இடம் பெயரச் செய்யும் பணியை விட குர்ஆனை ஒன்று சேர்க்கும் பணியை சிரமமாகக் கருதி மிகுந்த சிரத்தையுடன் தொகுத்து இந்த சமுதாயத்திற்கு விட்டுச் சென்றது முந்தைய சமுதாயம்!
குர்ஆன் இன்றளவும் அன்று அருளப்பட்ட அதே மொழி வழக்கில் ஏடுகளில் பாதுகாக்கப் படுவது அல்லாஹ்வின் வேதம் என்ற அற்புதமான உண்மைக்கு ஓர் எடுத்துக் காட்டு ஆகும். குர்ஆன் எப்படி உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டிருக்கிறதோ அதே போல் அதே பொலிவுடன் அது எழுத்து வடிவிலும் பாதுகாக்கப்பட்டே இருக்கிறது. இஸ்லாத்தின் எதிரிகளைத் தவிர எவரும் குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருக்கிறது என்று கூறியிருக்கவில்லை. ஆனால்...
ஆரம்பத்தில் ஏகத்துவப் பேச்சாளராக இருந்து காலப்போக்கில் இஸ்லாமின் பெயரால் பல்வேறு கொள்கைகளில் பரிணமித்த சகோ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளன என்ற புதியதோர் சிந்தனையை, முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர் மத்தியில் குர்ஆனின் தனித்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை தான் வெளியிட்ட தர்ஜமாவின் மூலம் அறிமுகப் படுத்தியபோது குர்ஆனைப் படிக்கும் மாணவன் என்ற முறையில் இதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்க முடியவில்லை.
குர்ஆனில் இவர் பிழை என்று குறிப்பிட்ட ஓர் எழுத்தை ஓதக் கூடியவர்கள் சரியாகத்தான இதை ஓதினர் என்று இவர் எழுதியபோது இவரால் பிழை என்று கூறப்பட்ட வார்த்தையை கிட்டத்தட்ட நான் ஓதக்கேட்ட எல்லா காரிகளுமே குர்ஆனில் (இவரது கூற்றுப்படி பிழையாக) உள்ளவாறே ஓதியுள்ளனர். மதரசாக்களிலும் அப்படித்தான் கற்றுக்கொடுக்கப் படுகிறது. (ததஜ மத்ரசாக்களில் எப்படிக் கற்றுக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.) அப்படியானால் உள்ளங்களில் பாதுகாகக்கப்படுவதும் பிழைதானா? என்ற கேள்விக்கு நியாயமான பதிலை சமுதாயத்திற்கு முன் வைக்க இவர் கடமைப் பட்டுள்ளார்.
இன்னொரு காரியம் என்னவென்றால் குர்ஆனில் உள்ள நிறுத்தற்குறிகள் தேவையில்லாமல் போட்டுள்ளார்கள், எந்த இடத்தில் வேண்டுமானாலும் நிறுத்தலாம் என்ற இவரது புதிய கொள்கைக் குளறுபடி. குர்ஆன் எப்படி ஜிப்ரீல் (அலை) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ஓதிக் கொடுத்தார்களோ, அந்த ஓதுதல் முறையில் எப்படி நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு ஓதிக் கொடுத்தார்களோ அதைப் பின்பற்றி எப்படி ஸஹாபாக்கள் பிந்தைய தலை முறைக்குக்கு ஓதிக் கொடுத்தார்களோ அதே முறையில் வாழையடி வாழையாக இந்த சமுதாயம் தொடர்ந்து வருகிறது என்பதும் குர்ஆனுக்கே உள்ள தனித்தன்மைகளுள் ஒன்றாகும்.
அதில் எந்த இடத்தில் நிறுத்த வேண்டும், எந்த இடத்தில் சேர்த்து ஓத அனுமதி உள்ளது, எந்த இடத்தில் நிறுத்த அனுமதியில்லை என்ற விவரங்கள் அனைத்தும் உள்ளடங்கியிருந்தது. அதே அடிப்படையில் ஓத வேண்டும், அதில் சமுதாயம் தவறிழைத்து விடக் கூடாது என்ற நமது முந்தைய இமாம்களின் கனிவான அக்கரைதான் நிறுத்தற் குறியீடுகள் போடப்பட்டதன் பின்னணி.
மூலப்பிரதியில் நிறுத்தற்குறிகள் இல்லை எனவே குறியீடு என்பதை இமாலயத் தவறாக எடுத்துக் காட்டிய ஜைனுல் ஆபிதீன் ஜபர் ஜேர் ளம்மு சுக்கூன் என்பதும் சமுதாயம் ஓதுவதில் தவறிழைத்து விடக்கூடாது என்பதற்காக பின்னாளில் இடப்பட்டதுதான் என்ற உண்மையையும் அதன் பின்னணியையும் மறைத்து இதற்கு ஒரு தவறான வியாக்கியானம் கொடுத்தது சமுதாயத்திற்குச் செய்த மிகப்பெரிய மோசடியாகும்.
நிறுத்தற்குறி அவசியம் இல்லை என்றால் இவர்களது மதரசாவில் ஜபர் ஜேர் கற்றுக் கொடுப்பதும் தவறானது தானே? இனி நிறுத்தற்குறி அவசியம் இல்லை என்றால் சில இடங்களில் நிறுத்துவது அல்லது சேர்த்து ஓதுவது தவறான வெறுக்கத்தக்க அல்லது இணைவைக்கும் பொருள்களைக் கொண்டுவர இடமுள்ளது என்று அறியாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சில விளக்கக் குறிப்புகளை வாரிக் கொட்டியிருக்கிறார் தனது தர்ஜமாவில். இதை ஒவ்வொன்றாக வெளிக் கொண்டு வர யா அல்லாஹ் அருள்புரிவாயாக.
கேள்வி: ஒரு தாய்க்கு தன் மக்களிடத்தில் இருக்கும் கருணையைக் காட்டிலும் பல மடங்கு கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்? அதிலும் தீயவர்கள் பலர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழும் போது நல்லவர்கள் பலர் நோயால் அவதியுறுவதுடன் அதற்கு மருத்துவம் செய்யுவும் உரிய வசதியின்றி வாடுவது ஏன்? பதில்: மனிதர்களுக்கு நோய் ஏற்படுவது ஒரு பாதகமான அம்சம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மனித வாழ்க்கையில் பாதகமான அம்சங்கள் பல உள்ளன. வறுமை, அழகின்மை, உடல் வலுவின்மை, குழந்தைப் பேறு இன்மை. வலிமையானவர்களின் அடக்கு முறைகளுக்கு ஆளாகுதல், தீர்க்க முடியாத கடன், பொருத்தமில்லாத வாழ்க்கைத் துணை, தறுதலைப் பிள்ளைகள், நெருக்கமானவர்களின் மரணம், உடல் ஊனம், நினைவாற்றல் குறைவு, சிந்தனைத்திறன் குறைவு, இப்படி ஆயிரமாயிரம் பாதங்கள் உள்ளன. நீங்கள் நோயை மட்டும் பாதகமாகக் கருதுகிறீர்கள். மேலே சுட்டிக்காட்டியது போன்ற ஏதேனும் பாதகமான அம்சங்கள் சிலவற்றைப் பெற்றே மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். எந்தப் பாதகமும் இல்லாத ஒருவரும் உலகில் கிடையாது. நமக்கு இறைவன் வறுமை மற்றும் நோயைக் கொடுத்திருக்கலாம். ஆனால் செல்வமும் ஆரோக்கியமும் உள்ளவருக்கு எந்தக் குறைவும் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவருக்கு பொறுத்தமில்லாத மனைவியையோ, மக்களையோ இறைவன் கொடுத்திருப்பான். அல்லது வேறு ஏதேனும் குறைகளைக் கொடுத்திருப்பான். நீங்கள் நோயை நினைத்து கவலைப்படுவது போலவே அவர் குடும்பத்தை நினைத்து கவலைப்படுவார். மனதை உறுத்துகிற அழுத்தம் இல்லாததால் நீங்கள் படுத்தவுடன் தூங்கி விடுவீர்கள். நீங்கள் யாரைப் பார்த்து பொறாமைப்படுகிறீர்களோ அவரால் பஞ்சு மெத்தையிலும் தூங்க முடியாது. இந்த உலகம் சீராக இயங்க வேண்டுமானால் குறைகளையும் நிறைகளையும் பலருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். எல்லோருக்கும் ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தால் யாரும் வேலைக்குப் போகமாட்டோம் நமது நிலத்தை நாமே உழுது பயிரிட சக்தி பெறவும் மாட்டோம் அனைவரும் சோத்துக்கு இல்லாமல் செத்திருப்போம். எல்லோரிடமும் கோடி ரூபாய் இருந்தால் என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள். அனைவரும் அழிவது தான் நடக்கும். இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறையையும் நிறையையும் இறைவன் வழங்கி கருணை புரிந்துள்ளான். நோயாளியைக் கொண்டு மருத்துவரின் வாழ்க்கை ஓடுகிறது. மருத்துவரின் மூலம் வியாபாரியின் வாழ்க்கை ஓடுகிறது. வியாபாரியின் மூலம் விவசாயி மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கை ஓடுகிறது இத்தகைய சங்கிலித் தொடர் மூலம் உலகம் இயங்குவதற்காகத் தான் இறைவன் இவ்வாறு செய்துள்ளான். எத்தனையோ கோடீஸ்வரர்கள் தினம் இரண்டு இட்லிதான் சாப்பிடவேண்டும் மாமிசம் எண்ணெய் தொடக்கூடாது என்று மருத்தவர்களால் எச்சரிக்கை செய்யப்படுகின்றனர். கோடி கோடியாக இருந்தும் வாய்க்கு ருசியாகச் சாப்பிட முடிவதில்லை. கிடைக்கிற அனைத்தையும் சாப்பிடக்கூடிய நிலையில் உள்ள ஏழை இந்த வகையில் இவனை விடச் சிறந்தவன் இல்லையா? இதுபோல் வறுமையும் நோயும் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள நிறைகளை உண்ணிப் பார்த்தால் நிச்சயமாக நோயற்றவர்களுக்குக் கிடைக்காத ஏதோ ஒரு வசதி, வாய்ப்பு, பாக்கியம் தங்களுக்குக் கிடைத்திருப்பதை உணருவார்கள். அப்போது இறைவன் எத்தகைய கருணைக் கடல் என்பதை சந்தேமற அறிவார்கள்.
ஒரு மலையை இடம் பெயரச் செய்யும் பணியை விட குர்ஆனை ஒன்று சேர்க்கும் பணியை சிரமமாகக் கருதி மிகுந்த சிரத்தையுடன் தொகுத்து இந்த சமுதாயத்திற்கு விட்டுச் சென்றது முந்தைய சமுதாயம்!
குர்ஆன் இன்றளவும் அன்று அருளப்பட்ட அதே மொழி வழக்கில் ஏடுகளில் பாதுகாக்கப் படுவது அல்லாஹ்வின் வேதம் என்ற அற்புதமான உண்மைக்கு ஓர் எடுத்துக் காட்டு ஆகும். குர்ஆன் எப்படி உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டிருக்கிறதோ அதே போல் அதே பொலிவுடன் அது எழுத்து வடிவிலும் பாதுகாக்கப்பட்டே இருக்கிறது. இஸ்லாத்தின் எதிரிகளைத் தவிர எவரும் குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருக்கிறது என்று கூறியிருக்கவில்லை. ஆனால்...
ஆரம்பத்தில் ஏகத்துவப் பேச்சாளராக இருந்து காலப்போக்கில் இஸ்லாமின் பெயரால் பல்வேறு கொள்கைகளில் பரிணமித்த சகோ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளன என்ற புதியதோர் சிந்தனையை, முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர் மத்தியில் குர்ஆனின் தனித்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை தான் வெளியிட்ட தர்ஜமாவின் மூலம் அறிமுகப் படுத்தியபோது குர்ஆனைப் படிக்கும் மாணவன் என்ற முறையில் இதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்க முடியவில்லை.
குர்ஆனில் இவர் பிழை என்று குறிப்பிட்ட ஓர் எழுத்தை ஓதக் கூடியவர்கள் சரியாகத்தான இதை ஓதினர் என்று இவர் எழுதியபோது இவரால் பிழை என்று கூறப்பட்ட வார்த்தையை கிட்டத்தட்ட நான் ஓதக்கேட்ட எல்லா காரிகளுமே குர்ஆனில் (இவரது கூற்றுப்படி பிழையாக) உள்ளவாறே ஓதியுள்ளனர். மதரசாக்களிலும் அப்படித்தான் கற்றுக்கொடுக்கப் படுகிறது. (ததஜ மத்ரசாக்களில் எப்படிக் கற்றுக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.) அப்படியானால் உள்ளங்களில் பாதுகாகக்கப்படுவதும் பிழைதானா? என்ற கேள்விக்கு நியாயமான பதிலை சமுதாயத்திற்கு முன் வைக்க இவர் கடமைப் பட்டுள்ளார்.
இன்னொரு காரியம் என்னவென்றால் குர்ஆனில் உள்ள நிறுத்தற்குறிகள் தேவையில்லாமல் போட்டுள்ளார்கள், எந்த இடத்தில் வேண்டுமானாலும் நிறுத்தலாம் என்ற இவரது புதிய கொள்கைக் குளறுபடி. குர்ஆன் எப்படி ஜிப்ரீல் (அலை) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ஓதிக் கொடுத்தார்களோ, அந்த ஓதுதல் முறையில் எப்படி நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு ஓதிக் கொடுத்தார்களோ அதைப் பின்பற்றி எப்படி ஸஹாபாக்கள் பிந்தைய தலை முறைக்குக்கு ஓதிக் கொடுத்தார்களோ அதே முறையில் வாழையடி வாழையாக இந்த சமுதாயம் தொடர்ந்து வருகிறது என்பதும் குர்ஆனுக்கே உள்ள தனித்தன்மைகளுள் ஒன்றாகும்.
அதில் எந்த இடத்தில் நிறுத்த வேண்டும், எந்த இடத்தில் சேர்த்து ஓத அனுமதி உள்ளது, எந்த இடத்தில் நிறுத்த அனுமதியில்லை என்ற விவரங்கள் அனைத்தும் உள்ளடங்கியிருந்தது. அதே அடிப்படையில் ஓத வேண்டும், அதில் சமுதாயம் தவறிழைத்து விடக் கூடாது என்ற நமது முந்தைய இமாம்களின் கனிவான அக்கரைதான் நிறுத்தற் குறியீடுகள் போடப்பட்டதன் பின்னணி.
மூலப்பிரதியில் நிறுத்தற்குறிகள் இல்லை எனவே குறியீடு என்பதை இமாலயத் தவறாக எடுத்துக் காட்டிய ஜைனுல் ஆபிதீன் ஜபர் ஜேர் ளம்மு சுக்கூன் என்பதும் சமுதாயம் ஓதுவதில் தவறிழைத்து விடக்கூடாது என்பதற்காக பின்னாளில் இடப்பட்டதுதான் என்ற உண்மையையும் அதன் பின்னணியையும் மறைத்து இதற்கு ஒரு தவறான வியாக்கியானம் கொடுத்தது சமுதாயத்திற்குச் செய்த மிகப்பெரிய மோசடியாகும்.
நிறுத்தற்குறி அவசியம் இல்லை என்றால் இவர்களது மதரசாவில் ஜபர் ஜேர் கற்றுக் கொடுப்பதும் தவறானது தானே? இனி நிறுத்தற்குறி அவசியம் இல்லை என்றால் சில இடங்களில் நிறுத்துவது அல்லது சேர்த்து ஓதுவது தவறான வெறுக்கத்தக்க அல்லது இணைவைக்கும் பொருள்களைக் கொண்டுவர இடமுள்ளது என்று அறியாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சில விளக்கக் குறிப்புகளை வாரிக் கொட்டியிருக்கிறார் தனது தர்ஜமாவில். இதை ஒவ்வொன்றாக வெளிக் கொண்டு வர யா அல்லாஹ் அருள்புரிவாயாக.
கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்
கேள்வி:
ஒரு தாய்க்கு தன் மக்களிடத்தில் இருக்கும் கருணையைக் காட்டிலும் பல மடங்கு கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்? அதிலும் தீயவர்கள் பலர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழும் போது நல்லவர்கள் பலர் நோயால் அவதியுறுவதுடன் அதற்கு மருத்துவம் செய்யுவும் உரிய வசதியின்றி வாடுவது ஏன்?
பதில்:
மனிதர்களுக்கு நோய் ஏற்படுவது ஒரு பாதகமான அம்சம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மனித வாழ்க்கையில் பாதகமான அம்சங்கள் பல உள்ளன. வறுமை, அழகின்மை, உடல் வலுவின்மை, குழந்தைப் பேறு இன்மை. வலிமையானவர்களின் அடக்கு முறைகளுக்கு ஆளாகுதல், தீர்க்க முடியாத கடன், பொருத்தமில்லாத வாழ்க்கைத் துணை, தறுதலைப் பிள்ளைகள், நெருக்கமானவர்களின் மரணம், உடல் ஊனம், நினைவாற்றல் குறைவு, சிந்தனைத்திறன் குறைவு, இப்படி ஆயிரமாயிரம் பாதங்கள் உள்ளன.
நீங்கள் நோயை மட்டும் பாதகமாகக் கருதுகிறீர்கள். மேலே சுட்டிக்காட்டியது போன்ற ஏதேனும் பாதகமான அம்சங்கள் சிலவற்றைப் பெற்றே மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். எந்தப் பாதகமும் இல்லாத ஒருவரும் உலகில் கிடையாது. நமக்கு இறைவன் வறுமை மற்றும் நோயைக் கொடுத்திருக்கலாம். ஆனால் செல்வமும் ஆரோக்கியமும் உள்ளவருக்கு எந்தக் குறைவும் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவருக்கு பொறுத்தமில்லாத மனைவியையோ, மக்களையோ இறைவன் கொடுத்திருப்பான். அல்லது வேறு ஏதேனும் குறைகளைக் கொடுத்திருப்பான். நீங்கள் நோயை நினைத்து கவலைப்படுவது போலவே அவர் குடும்பத்தை நினைத்து கவலைப்படுவார். மனதை உறுத்துகிற அழுத்தம் இல்லாததால் நீங்கள் படுத்தவுடன் தூங்கி விடுவீர்கள். நீங்கள் யாரைப் பார்த்து பொறாமைப்படுகிறீர்களோ அவரால் பஞ்சு மெத்தையிலும் தூங்க முடியாது.
இந்த உலகம் சீராக இயங்க வேண்டுமானால் குறைகளையும் நிறைகளையும் பலருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். எல்லோருக்கும் ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தால் யாரும் வேலைக்குப் போகமாட்டோம் நமது நிலத்தை நாமே உழுது பயிரிட சக்தி பெறவும் மாட்டோம் அனைவரும் சோத்துக்கு இல்லாமல் செத்திருப்போம். எல்லோரிடமும் கோடி ரூபாய் இருந்தால் என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள். அனைவரும் அழிவது தான் நடக்கும். இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறையையும் நிறையையும் இறைவன் வழங்கி கருணை புரிந்துள்ளான்.
நோயாளியைக் கொண்டு மருத்துவரின் வாழ்க்கை ஓடுகிறது. மருத்துவரின் மூலம் வியாபாரியின் வாழ்க்கை ஓடுகிறது. வியாபாரியின் மூலம் விவசாயி மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கை ஓடுகிறது இத்தகைய சங்கிலித் தொடர் மூலம் உலகம் இயங்குவதற்காகத் தான் இறைவன் இவ்வாறு செய்துள்ளான். எத்தனையோ கோடீஸ்வரர்கள் தினம் இரண்டு இட்லிதான் சாப்பிடவேண்டும் மாமிசம் எண்ணெய் தொடக்கூடாது என்று மருத்தவர்களால் எச்சரிக்கை செய்யப்படுகின்றனர். கோடி கோடியாக இருந்தும் வாய்க்கு ருசியாகச் சாப்பிட முடிவதில்லை. கிடைக்கிற அனைத்தையும் சாப்பிடக்கூடிய நிலையில் உள்ள ஏழை இந்த வகையில் இவனை விடச் சிறந்தவன் இல்லையா?
இதுபோல் வறுமையும் நோயும் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள நிறைகளை உண்ணிப் பார்த்தால் நிச்சயமாக நோயற்றவர்களுக்குக் கிடைக்காத ஏதோ ஒரு வசதி, வாய்ப்பு, பாக்கியம் தங்களுக்குக் கிடைத்திருப்பதை உணருவார்கள். அப்போது இறைவன் எத்தகைய கருணைக் கடல் என்பதை சந்தேமற அறிவார்கள்.
ஒன்றுமை எனும் கயிறு:-
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த
நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப்பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இனைப்பை ஏற்ப்படுத்தினான். அவனது அருளால் சகோதரர்களாகி
விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்க்காக
இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுப் படுத்துகிறான்
(திருக்குர்ஆன் 3:103)
அல்லாஹ்வின் நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதை பிடிக்க
முன் வராவிட்டாலும் நாம் பிடியை விட்டு விடக்கூடாது.
அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பதுதான் நம் மீதுள்ள கடமையாகும்.
நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப்பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இனைப்பை ஏற்ப்படுத்தினான். அவனது அருளால் சகோதரர்களாகி
விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்க்காக
இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுப் படுத்துகிறான்
(திருக்குர்ஆன் 3:103)
அல்லாஹ்வின் நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதை பிடிக்க
முன் வராவிட்டாலும் நாம் பிடியை விட்டு விடக்கூடாது.
அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பதுதான் நம் மீதுள்ள கடமையாகும்.
கணவனின் கடமைகள்
- கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.
இதோ, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) ஆண்களை எச்சரிக்கிறார்கள்:
- “பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
- “பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
- “பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்! அவளை நீ நேராக்க முயன்றால் ஒடித்து விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளைத் ‘தலாக்’ விடுவதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
- இலக்கிய நயமான இந்த உதாரணத்தில் பெண்ணின் இயற்கைத் தன்மைகளையும் பண்புகளையும் மிகத் துல்லியமாக நபி(ஸல்) அவர்கள் விவரித்துள்ளார்கள். மனைவி என்பவள் கணவர் விரும்புவது போன்று ஒரே நிலையில் சீராக இருக்கமாட்டாள். அவளிடம் சில கோணலான பண்புகளும் இயல்பாகவே அமைந்திருக்கும். இதைக் கணவர் விளங்கிக் கொள்ள வேண்டும். பூரணமானது அல்லது சரியானது என, தாம் நினைக்கும் முறையில் அவளைத் திருத்திவிட முயலக் கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவளை, அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது, ‘விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்’ என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.
- நபி(ஸல்) அவர்கள் பெண்ணின் மன நிலைiயும் இயற்கைப் பண்புகளையும் ஆழமாக விளங்கி விவரித்திருக்கிறார்கள். இந்த வழிகாட்டுதலை உள்ளத்தில் ஏற்றுள்ள உண்மை முஸ்லிம், தமது மனைவியின் குறைகளை சகித்துக்கொள்வார். அவளது சிணுங்கல்களைப் பொருட்படுத்த மாட்டார். அதன் மூலம் அவரது இல்லறம் சண்டை, சச்சரவு, வாக்குவாதம், கூச்சல் இல்லாத மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி நிறைந்த இன்பப் பூங்காவாகத் திகழும்.
- சற்றுமுன் கூறப்பட்ட நபிமொழியை ஆய்வு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது நபி(ஸல்) அவர்கள் , ‘பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று ஆரம்பித்து, பிறகு அவளது இயல்புகளை விவரிக்கிறார்கள். அதன் பின், மீண்டும் தாம் ஆரம்பித்த முந்தைய வார்த்தையைக் கூறியே முடிக்கிறார்கள். ஆகவே, நபி அவர்கள் பெண்ணுக்கு எந்தளவு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் அவளது இயல்பைப் பற்றி எந்தளவு ஆழமாக விளங்கி இருக்கிறார்கள் அவள் மீது எந்தளவு இரக்கம் கொண்டுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள்! நபி(ஸல்) அவர்களின் இந்த மேலான வழிகாட்டுதல்களை எல்லா நிலைகளிலும் முன்மாதியாக அமைத்து செயல்படுவதைத் தவிர ஓர் உண்மை முஸ்லிமுக்கு வேறு ஏதேனும் வழியுண்டோ!
- பெண்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்ததால்தான் தமது இறுதி ஹஜ்ஜின் பேருரையிலும் பெண்களைப்பற்றி நபி அவர்கள் உபதேசிக்க மறந்துவிடவில்லை. முஸ்லிம்களுக்கு எவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமோ அவை அனைத்தையும் கூறுவதற்கான கடைசி வாய்ப்பாக இறுதி ஹஜ்ஜுப் பேருரையைப் பயன்படுத்தினார்கள். அந்த உரையின் ஆரம்பமே பெண்களைப் பற்றியதாக அமைந்திருப்பது, அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.
- நபி அவர்கள் கூறினார்கள்: “அறிந்து கொள்ளுங்கள்! பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். அதைத்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியாது அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர! அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களை காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.” (ஜாமிவுத் திர்மிதி)
- சில முஸ்லிமல்லாத சகோதரர்கள் ''நபிகள் நாயகம் பெண்களை அடிக்க அனுமதித்துள்ளார்களே இது சரியா?'' என கேள்வி எழுப்பலாம், இதை நாம் கொஞ்சம் நடைமுறையோடு ஒப்பிட்டு சிந்தித்தால் அதில் உள்ள நியாயங்கள் புரியும், இயற்கையிலேயே ஆண்கள் உடல் பலத்தில் பெண்களை விட கூடியவர்களாக இறைவன் படைத்துள்ளான், ஆண்களுக்கு கோபம் ஏற்படும்போது அவன் செய்வதறியாது பெண்களை தாறுமாறாக அடித்து விட வாய்ப்பு உள்ளது, அதற்கு ஒரு நெறி முறையை சொல்லாவிட்டால் அவர்களுக்கு அந்த நேரத்தில் என்ன தோணுதோ அதை செய்துவிடுவார்கள், இது பெண்களுக்கு அதிகம் பாதிப்புடையதாக ஆகிவிடும், அதனால் இஸ்லாம் அவனுடைய கோபத்தை பல படித்தரங்களாக குறைக்கிறது, முதலில் தெளிவான மானக்கேடான விஷயங்களை அவர்கள் செய்யும்போதுதான் கோபப்பட வேண்டும் என்பதிலிருந்து சின்னச்சின்ன விஷயங்களை புறக்கணித்து விட வேண்டுமென்பதை புரிந்து கொள்ளலாம், அதற்கு வேறு பல சான்றுகளையும் மேலே கூறிய பல சம்பவங்களில் பார்த்தோம், அப்படியே கோபம் வந்தாலும் முதலில் அறிவுரை சொல்ல வேண்டும் அதன் பிறகும் மனைவி அந்த தவறிலிருந்து திருந்திக்கொள்ளாவிட்டால் பின்பு படுக்கையிலிருந்து சிறிது நாட்கள் விலகி இருக்க வேண்டும், இவ்வாறு அவனுடையை கோபத்தை தள்ளிப்போட வைத்து இருவரும் பிரிந்திருக்கும் சில நாட்களில் அவனுடைய கோபம் வெகுவாக தணிந்து விடும், அந்தப்பெண்ணும் திருந்திவிட ஒரு வாய்ப்பு உள்ளது, அதுக்கு பிறகும் கூட அந்தப்பெண் திருந்தாவிட்டால்தான் இலேசாக காயம் ஏற்படாதவாறு அடிக்குமாறு சொல்லப்பட்டுள்ளது அது கூட முகத்தில் அடிக்க கூடாது, உடம்பில் காயம் ஏற்படும் படி அடிக்ககூடாது என்றெல்லாம் பல நிபந்தனைகள் உள்ளன, கணவன் எடுத்த எடுப்பில் கோபத்துடன் அடிப்பதை இஸ்லாம் பல நாட்கள் தள்ளிப்போட வைத்து இயல்பாகவே கோபத்தை குறைக்கிறது, அதன் பிறகு வெறுமனே சடங்குக்கு லேசாக ரெண்டு அடி அடித்துக்கொள் என்ற அளவுக்கு ஆண்களின் கோபத்துக்கு ஒரு அதிக பட்ச வெளிப்பாடாக இதைத்தான் கூறுகிறது இஸ்லாம், எனவே இது மனித நேயத்துக்கு எதிரானதாக கருத வேண்டிய அவசியமில்லை, மாறாக இது பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு சட்டமாகவே உள்ளது, அவர்களுக்கும் நாம் ஒரு தப்பு செய்கிறோம் என்பதை உணர போதிய அளவு கால அவகாசம் கிடைப்பதால் அவர்களும் திருந்திக்கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இதை இஸ்லாம் கூறுகிறது. இன்னும் சொல்லபோனால் நபிகள் நாயகம் தனது கடைசிபத்தாண்டுகள் நாட்டின் அதிபராக இருந்தால் கூட அரசு பணத்தில் சொந்த செலவுக்கு எடுக்ககூடாது என்பதை ஒரு கொள்கையாக வைத்திருந்ததால் அவர்களின் வாழ்கை மிகவும் வறுமையில்தான் ஓடியது, நூறு ஆடுகளைகொண்ட ஒரு ஆட்டுப்பண்ணையின் மூலம் வரும் வருமானத்தை வைத்தே வாழ்கைச்செலவுகளை செய்து வந்தார்கள் இதனால் பல சமயம் அவரின் மனைவிமார்கள் ''நீங்கள் செலவுக்கு தருவது பத்தவில்லை'' என்று நபிகள் நாயகத்துடன் சண்டை போட்டுள்ளார்கள், என்பதை பல சம்பவங்களின் மூலம் காண முடிகிறது, ஒரு கட்டத்தில் ''என்னால் உங்களுக்காக அல்லாஹ் தடைவித்தித்துள்ள செயல்கள் மூலம் செல்வத்தை திரட்ட முடியாது. வேண்டுமானால் நான் உங்களை விவாகரத்து செய்கிறேன் நீங்கள் விரும்பியவர்களை மணந்து கொள்ளுங்கள்'', என்று கூறுகின்ற அளவுக்கு நிலைமை சென்றது, ஆனாலும் அதற்காகவெல்லாம் நபிகள் நாயகம் எந்த ஒரு மனைவியையும் கைநீட்டி ஒரு அடி கூட அடித்தத்தில்லை என்பதை இங்கு குறிப்பிட்டால் அடிக்க வேண்டிய நிலைமை எவ்வளவு இறுதி கட்டமான நடவடிக்கை என்பதை புரிந்து கொள்ளலாம்,
- நபியவர்களின் இந்த உபதேசத்தை ஒவ்வொரு உண்மை முஸ்லிமும் நிச்சயமாக செவிமடுப்பார். கணவன், மனைவி இருவரின் உரிமைகள், கடமைகள் குறித்து நபி(ஸல்) அவர்கள் எத்துணை நுட்பமாக வழிகாட்டியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வார். இதில் குறிப்பாக பெண்கள் மீது கருணை, அன்பு காட்டுவது, அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது பற்றி நபி வலியுறுத்தியுள்ளார்கள். ஆகையால், முஸ்லிம்களின் வீடுகளில் பெண்கள் மீது அநீதி இழைக்கப்படுவது அல்லது அவர்களுக்கு இடையூறு செய்யப்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் அறவே இருக்காது.
- பெண்ணைப் பேணுவதைப் பற்றி நபி அவர்கள் கூறிய உபதேசங்கள் ஏராளமானவை. தமது மனைவியிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்பவர்தான் இச்சமுதாயத்தின் சிறந்தோர் ஆக முடியும் என்கிற அளவிற்கு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
- நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நம்பிக்கையாளர்களில் நம்பிக்கையில் (ஈமானில்) பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே! உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியடத்தில் சிறந்தோரே!”(ஜாமிவுத் திர்மிதி)
- சில பெண்கள் தங்களுடைய கணவர்களைப்பற்றி முறையிடுவதற்காக நபி(ஸல்) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி அவர்கள் ஆண்களின் காதுகளுக்கு எட்டும் விதமாக “முஹம்மதின் குடும்பத்தாரிடம் சில பெண்கள் தங்களது கணவன்மாரைப்பற்றி முறையிட வருகிறார்கள். அந்தக் கணவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள். (ஸுனன்் அபூதாவூத்)
- நேரிய மார்க்கமான இஸ்லாம், பெண்ணுக்கு நீதி வழங்குவதிலும் அவளைக் கண்ணியப் படுத்துவதிலும் ஏனைய மார்க்கங்களைப் பார்க்கிலும் மிக உயர்ந்தே நிற்கிறது. அவளைக் கணவன் வெறுத்தாலும் அவளுடன் நல்ல முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் என உபதேசிக்கிறது. பெண்கள், தங்களது வரலாற்றில் இஸ்லாமைத் தவிர வேறெங்கும் இந்தக் கண்ணியத்தை அடைந்து கொண்டதே கிடையாது.
- மேலும், “அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.” (அன்னிஸா 4:19) இந்த இறைவசனம் உண்மை முஸ்லிமின் உள்ளுணர்வைத் தொட்டுப் பேசுகிறது. அவரது கோபத்தின் கொதிப்பைத் தணிக்கிறது தம் மனைவி மீதான வெறுப்பின் வேகத்தைக் குறைக்கிறது. ஆகவே, இதன் மூலம் மண வளையம் துண்டிக்கப்படுவதிலிருந்து இஸ்லாம் அதைப் பாதுகாக்கிறது. இங்குமங்கும் அலைபாயும் மடத்தனமான எண்ணங்களாலும், மாறிக் கொண்டே இருக்கும் சுபாவத்தினாலும் தூய்மையானத் திருமண உறவில் பங்கம் ஏற்படுவதை விட்டும் கட்டிக்காக்கிறது.
- இஸ்லாமில் திருமண ஒப்பந்தம் என்பது அற்பமான உணர்வுகளின் வெளிப்பாடோ அல்லது இயற்கை ஆசையைத் தணித்து விட்டுப் போவதற்கான வழியோ அல்ல. மாறாக, இதற்கெல்லாம் மேலாகத் தூய்மையானதும் மிகக் கண்ணியமானதுமாகும். உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் அமைந்திருக்கும். அந்தப் பண்புகள் தமது மனைவியிடம் காணப்படும் வெறுக்கத்தகுந்த குணங்களைச் சகித்துக் கொள்ளும் பக்குவத்தை அவருக்கு அளிக்கும். உண்மை முஸ்லிம் தமது இறைவனின் கட்டளையைப் பின்பற்றுவார். மனைவியின் மீது வெறுப்புள்ளவராக இருந்தாலும் நல்லுறவையே கடைப்பிடிப்பார். தமது இறைவனின் கூற்றுக்கிணங்க தம்மை அமைத்துக் கொள்வார். ஏனென்றால், மனிதன் சில விஷயங்களை வெறுத்து அதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால், உண்மையில் அவை நன்மைகளால் சூழப்பட்டதாகவும், நல்லதை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கும்.
- எனவே உண்மை முஸ்லிம், எப்படி நேசிக்க வேண்டும், எப்படி வெறுக்க வேண்டும் என்பதையெல்லாம் அறிந்திருப்பார். நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்கவும் மாட்டார். அதே சமயம், வெறுப்பவர் மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தையும் வெளிப்படுத்த மாட்டார். நேசிப்பிலும் வெறுப்பிலும் நீதமான நடுநிலையைக் கொண்டிருப்பார்.
- “முஸ்லிமான பெண்ணை அவளது கணவர் எவ்வளவுதான் வெறுத்தாலும் அவளிடம் விரும்பத்தகுந்த பல நற்குணங்கள் இருந்தே தீரும். எனவே, அந்தக் கணவர் தமது மனைவியிடம் தமக்கு திருப்தி அளிக்கும் நற்குணங்கள் இருப்பதை மறந்துவிடக் கூடாது. அவளிடம் உள்ள வெறுக்கத்தக்க குணங்களைச் சுட்டிக் காட்டித் திருத்தவும் தவறக்கூடாது” என மகத்தான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.
- நபி(ஸல்) அவர்கள் அவர்கள் கூறினார்கள்: “எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
- ”இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்துஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தைவெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்திகொள்ளட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ) நூல்: முஸ்லிம் 2915
- உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலேதவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்.அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத் 19160
- ”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர்.உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவுஉட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56
- ஒரு மனிதர் நபியவர்களிடம் ”மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?” என்று கேட்டார்அதற்கு நபி அவர்கள்,’நீ உண்ணும் போதுஅவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் கண்டிக்கும் போது முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் (ஏதும் வெறுப்பு இருப்பின்) வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162”இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம்கொண்டவரே!
- உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!”என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மதி 1082
தொழகையை விட்ட என் சகோதரனே
தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக
இருக்கும் என் நன்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக்
கொண்டிருக்கின்றாய்? உன்னை படைத்து உணவுளித்து இரட்சித்துக்
கொண்டிருக்கும் உன் இறைவனுக்கு ஸுஜூது செய்யும் அவசியம்
இல்லாதளவுக்கு - அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு
நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டுவிட்டாயோ! உனக்கு ஏற்படும்
இன்னல்களில், துன்பங்களில் அவனது உதவியே வேவையில்லாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்றுவிட்டாயோ?
அல்லது உன்னை பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும்
படைத்தவனுக்கு சிரம் சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ? நீ பெற்ற
பதவியும் சொத்து செல்வங்களும் படைத்தவனை நினைத்து பார்க்க
அவகாசம் தராதிருக்கின்றனவோ? அல்லது உன்னிடம் இருக்கின்ற
ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச் செய்து
விட்டானோ? உன் மனச் சாட்சியை சாகடித்து விட்டு உன் உள்ளத்தில்
குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்ட மிட்டிருக்கிறானோ?
நீ அவனை சந்திக்கும் நாள் - அதுதான் நீ மரணிக்கும் நாள் - எப்போ
தென்று நீ அறிவாயா? இல்லையே! அது நாளையாகவும் இருக்கலாம்.
அந்த நாள் வந்துவிட்டாள் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள உன்னால்
முடியாது? இல்லை, கொஞ்சம் தாமதப்படுத்தவாவது முடியுமா?
முடியவே முடியாது. அப்படியானால் நீ பிறந்து வாழ்ந்த இவ்வுலகை
விட்டுச் செல்லும் போது உனக்கு வழிதுனையாக வருவது எது?
துன்புறுத்தும் வேதனையிலிருந்து உன்னை காப்பாற்றுவது எது?
உனது பனமா? பட்டமா? பதவியா? சொத்து செல்வங்களா?
எதுவுமேயில்லை- ஒரேயொன்றைத் தவிர. அதுதான் நீ செய்த
நல்லமல்கள். நீ புரிந்து தொழுகை, நோன்பு இன்ன பிற வணக்கங்கள்
அதைதான் நீ உலகில் சேமிக்கவில்லையே! நீ உண்டாய், உடுத்தாய்,
உறங்கினாய், உலகத்தை அனுபவித்தாய். உன்னை படைத்தவனை
நினைக்கவில்லையே! அவனுக்காக உன்சிரம் பணியவில்லையே!
அவன் பள்ளி நோக்கி உன் கால்கள் செல்லவில்லையே! அவனை
பயந்து உன்விழிகள் அழவில்லையே! அவன் பாதையில் உன் பணத்தை செலவு செய்யவில்லையே! நீ உனக்காகவே உலகில் அழாதபோது, உனக்காக பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா?
உனக்கென நீ இறைவனிடம் பிரார்த்திக்காத போது பிறர் உனக்கென
பிரார்த்திப்பார்கள் என்று எண்ணுகின்றாயா? அது ஒருப்போதும்
நடக்காது.... நடக்கவும் முடியாது....
என் அருமைச் சகோதரனே! நிச்சயமாக மரணம் வரும். நீ என்றோ
ஒருநாள் இறந்து விடுவாய். தொழுகையை பாழ்படுத்திய நிலையிலேயே நீ இறக்க நேரிட்டால் உன்னைவிட நஷ்ட்டத்திற்கும்,
கை சேதத்திற்குமுறியவன் வேறு யார்? கப்ரிலே உனக்கு எப்படி
வரவேற்ப்பிருக்கும் என நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? மறுமையில் எழுதப்பட்டதும் உன் கதி என்னவென்று கொஞ்சம்
சிந்தித்து பார்த்தாயா?
போதும் நன்பனே! போதும். விட்டுவிடு உன் பாவங்களை. இன்பம்
துன்பத்தில் முடிகின்றது; யவ்வனம் விருத்தாபியத்தில் முடிகின்றது;
அன்பு பிரிவில் முடிகின்றது; வாழ்வு மரணத்தில் முடிகின்றது.
மரணத்தின் பின் உன் நிலை என்ன? என்பதற்கு நீதான் விடைகாண
வேண்டும்.
ஆகவே நன்பா! நீ இன்று இப்போதே நல்லதொரு முடிவெடுக்க
வேண்டும். நீ போகும் பாதையை மாற்றவேண்டும். உன் வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக்கி விட்டாய், மிகுதியுள்ளவற்றையாவது நீ
உபயோகப் படுத்தக் கூடாதா? காலம் பொன்னானது. அதை இது
வரைக்கும் மண்ணாக்கி விட்டாய்! இதுவரை தூங்கியது போதும்,
இனியாவது நீ விழித்துக் கொண்டால் அது அல்லாஹ் நீ திருந்து
வதற்க்காக உனக்களித்த இறுதி சந்தர்ப்பம். அரிய வாய்ப்பு. அதையும்
வீனாக்கி விடாதே!
போதும் நன்பா! போதும்! இத்தோடு நிறுத்திக் கொள். நான் படைத்தவனுக்கு விசுவாசமாய் நடப்பேன் என்று மனதில் உறுதிக்
கொள். பாவச் சுமைகளை அவன் முன்னிலையில் இறக்கி வை..
ஆம்... தவ்பாச் செய். அவனிடம் மன்றாடி உனது பாவங்களுக்காக
மன்னிப்பு கோரிடு அழு, அழு- நன்றாக அழு... உன் இதயச் சுமை
குரையும் வரைக்கும் அழுதிடு, இனிமேல் பாவஞ் செய்வதில்லை
தொழாதிருப்பதில்லை, ஜவேளை ஜமாஅத் தொழுகையை தவற
விடுவதில்லை என உன்னுடன் நீயே உறுதி மொழி எடுத்துக்கொள்.
தொழுகைகளை முறையாக பேணித் தொழுதவர்களாக மரணிக்க
அல்லாஹ் நம் அனைவருக்கும் வாயப்பளிப்பானாக....
இருக்கும் என் நன்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக்
கொண்டிருக்கின்றாய்? உன்னை படைத்து உணவுளித்து இரட்சித்துக்
கொண்டிருக்கும் உன் இறைவனுக்கு ஸுஜூது செய்யும் அவசியம்
இல்லாதளவுக்கு - அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு
நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டுவிட்டாயோ! உனக்கு ஏற்படும்
இன்னல்களில், துன்பங்களில் அவனது உதவியே வேவையில்லாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்றுவிட்டாயோ?
அல்லது உன்னை பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும்
படைத்தவனுக்கு சிரம் சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ? நீ பெற்ற
பதவியும் சொத்து செல்வங்களும் படைத்தவனை நினைத்து பார்க்க
அவகாசம் தராதிருக்கின்றனவோ? அல்லது உன்னிடம் இருக்கின்ற
ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச் செய்து
விட்டானோ? உன் மனச் சாட்சியை சாகடித்து விட்டு உன் உள்ளத்தில்
குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்ட மிட்டிருக்கிறானோ?
நீ அவனை சந்திக்கும் நாள் - அதுதான் நீ மரணிக்கும் நாள் - எப்போ
தென்று நீ அறிவாயா? இல்லையே! அது நாளையாகவும் இருக்கலாம்.
அந்த நாள் வந்துவிட்டாள் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள உன்னால்
முடியாது? இல்லை, கொஞ்சம் தாமதப்படுத்தவாவது முடியுமா?
முடியவே முடியாது. அப்படியானால் நீ பிறந்து வாழ்ந்த இவ்வுலகை
விட்டுச் செல்லும் போது உனக்கு வழிதுனையாக வருவது எது?
துன்புறுத்தும் வேதனையிலிருந்து உன்னை காப்பாற்றுவது எது?
உனது பனமா? பட்டமா? பதவியா? சொத்து செல்வங்களா?
எதுவுமேயில்லை- ஒரேயொன்றைத் தவிர. அதுதான் நீ செய்த
நல்லமல்கள். நீ புரிந்து தொழுகை, நோன்பு இன்ன பிற வணக்கங்கள்
அதைதான் நீ உலகில் சேமிக்கவில்லையே! நீ உண்டாய், உடுத்தாய்,
உறங்கினாய், உலகத்தை அனுபவித்தாய். உன்னை படைத்தவனை
நினைக்கவில்லையே! அவனுக்காக உன்சிரம் பணியவில்லையே!
அவன் பள்ளி நோக்கி உன் கால்கள் செல்லவில்லையே! அவனை
பயந்து உன்விழிகள் அழவில்லையே! அவன் பாதையில் உன் பணத்தை செலவு செய்யவில்லையே! நீ உனக்காகவே உலகில் அழாதபோது, உனக்காக பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா?
உனக்கென நீ இறைவனிடம் பிரார்த்திக்காத போது பிறர் உனக்கென
பிரார்த்திப்பார்கள் என்று எண்ணுகின்றாயா? அது ஒருப்போதும்
நடக்காது.... நடக்கவும் முடியாது....
என் அருமைச் சகோதரனே! நிச்சயமாக மரணம் வரும். நீ என்றோ
ஒருநாள் இறந்து விடுவாய். தொழுகையை பாழ்படுத்திய நிலையிலேயே நீ இறக்க நேரிட்டால் உன்னைவிட நஷ்ட்டத்திற்கும்,
கை சேதத்திற்குமுறியவன் வேறு யார்? கப்ரிலே உனக்கு எப்படி
வரவேற்ப்பிருக்கும் என நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? மறுமையில் எழுதப்பட்டதும் உன் கதி என்னவென்று கொஞ்சம்
சிந்தித்து பார்த்தாயா?
போதும் நன்பனே! போதும். விட்டுவிடு உன் பாவங்களை. இன்பம்
துன்பத்தில் முடிகின்றது; யவ்வனம் விருத்தாபியத்தில் முடிகின்றது;
அன்பு பிரிவில் முடிகின்றது; வாழ்வு மரணத்தில் முடிகின்றது.
மரணத்தின் பின் உன் நிலை என்ன? என்பதற்கு நீதான் விடைகாண
வேண்டும்.
ஆகவே நன்பா! நீ இன்று இப்போதே நல்லதொரு முடிவெடுக்க
வேண்டும். நீ போகும் பாதையை மாற்றவேண்டும். உன் வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக்கி விட்டாய், மிகுதியுள்ளவற்றையாவது நீ
உபயோகப் படுத்தக் கூடாதா? காலம் பொன்னானது. அதை இது
வரைக்கும் மண்ணாக்கி விட்டாய்! இதுவரை தூங்கியது போதும்,
இனியாவது நீ விழித்துக் கொண்டால் அது அல்லாஹ் நீ திருந்து
வதற்க்காக உனக்களித்த இறுதி சந்தர்ப்பம். அரிய வாய்ப்பு. அதையும்
வீனாக்கி விடாதே!
போதும் நன்பா! போதும்! இத்தோடு நிறுத்திக் கொள். நான் படைத்தவனுக்கு விசுவாசமாய் நடப்பேன் என்று மனதில் உறுதிக்
கொள். பாவச் சுமைகளை அவன் முன்னிலையில் இறக்கி வை..
ஆம்... தவ்பாச் செய். அவனிடம் மன்றாடி உனது பாவங்களுக்காக
மன்னிப்பு கோரிடு அழு, அழு- நன்றாக அழு... உன் இதயச் சுமை
குரையும் வரைக்கும் அழுதிடு, இனிமேல் பாவஞ் செய்வதில்லை
தொழாதிருப்பதில்லை, ஜவேளை ஜமாஅத் தொழுகையை தவற
விடுவதில்லை என உன்னுடன் நீயே உறுதி மொழி எடுத்துக்கொள்.
தொழுகைகளை முறையாக பேணித் தொழுதவர்களாக மரணிக்க
அல்லாஹ் நம் அனைவருக்கும் வாயப்பளிப்பானாக....
இறுதிப் பத்தில் இஃதிகாப் எனும் ஸுன்னாவை உயிர்ப்பித்து நரக விடுதலையை அடைந்து கொள்வோம்
மகத்துவம் பொருந்திய ரமழானின் ரஹ்மத்தையும் மஃபிரத்தையும் பெற்றுக் கொண்ட ஒரு முஃமின் ஆசை வைக்கும் அடுத்த அம்சம் "இத்கு மினன் நார்" எனப்படும் நரக விடுதலையாகும்.
"எனவே (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பை விட்டும் தூரமாக்கப்பட்டு, சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்" (ஆல இம்ரான் : 185)
நரக விடுதலை என்பது இறை வழிபாடுகளில் ஈடுபடுவது,அவற்றில் விடாப்பிடியாக இருப்பது, வல்ல அல்லாஹ்விடம திக்ருகள் ஊடாகவும் பிரார்த்தனைகள் ஊடாகவும் ஏனைய வணக்க வழிபாடுகள் ஊடாகவும் அதிகமதிகம் அழுது கெஞ்சிக் கேட்பது போன்ற விடயங்கள் ஊடாக அடையப் பெறுவதே. அதற்கு சிறந்த சாதனமாக இருப்பது "இஃதிகாப்" என்ற வணக்கமாகும். தனது அன்றாட சோலிகளை விட்டும் தன்னை துண்டித்துக் கொண்டு தனது இரட்சகனின் வாயிலில் நின்று அவனது மன்னிப்பையும் அருளையும் அவனது தண்டனையிலிருந்து விடுதலையையும் வேண்டுவதற்கு இத்தினங்களில் இஃதிகாப் இருப்பது சாலப் பொருத்தமாக அமையும்.
நபி (ஸல்) அவர்கள் இறுதிப் பத்தில் மிக மிக உற்சாகமாகக் காணப்படுவார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் நபிமொழி இமாம் புகாரியின் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. "இறுதிப் பத்து வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் வரிந்துக் கட்டிக் கொண்டு அதன் இரவுகளை (வணக்க வழிபாடுகளால்) உயிர்ப்பிப்பார்கள். தனது மனைவியரையும் எழுப்பி விடுவார்கள்."
ஆயிஷா (ரழி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பும் இத்தினங்களில் நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு உற்சாகமாகவும் சுறு சுறுப்பாகவும் செயற்பட்டிருக்கிறார்கள் என்பதை தௌிவுபடுத்துகிறது. "நபி (ஸல்) அவர்கள் வேறு தினங்களில் சிரமம் எடுத்துக் கொள்ளாத அளவுக்கு இத்தினங்களில் (வணக்க வழிபாடுகளுக்காக) சிரமம் எடுத்துக் கொண்டிருக்கிறாாகள்" (முஸ்லிம்)
அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கும் பின்வரும் ஹதீஸ் புகாரியில் பதிவாகியுள்ளது. "நபி (ஸல்) அவர்கள் அனைத்து ரமழானிலுமே பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். நபியவர்கள் வபாத்தான ஆண்டு மட்டும் இருபது நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்."
இந்த ஹதீஸ் குறித்து இப்னு ஹஜர் அல் அஸ்கலானி தனது பத்ஹுல் பாரி எனும் கிரந்தத்தில் குறிப்பிடும்போது, நபி (ஸல்) அவர்கள் தமது இறுதி வருடத்தில் இஃதிகாபின் கால அளவை இரட்டிப்பாக்கியமைக்கான காரணம் அன்னார் தமது இறுதி முடிவு நெருங்கி விட்டதை அறிந்திருந்தமையாகும். எனவே நபியவர்கள் தமது நல்லமல்களை அதிகாித்துக் கொள்ள விரும்பினார்கள். அதனூடாக தமது உம்மத்திற்கு நல்லமல் புரிவதில் மிகுந்த சிரமமெடுத்துக் கொள்ள வேண்டும். அந்நிலையிலேயே அவர்கள் தமது இரட்சகனை சந்திக்க வேண்டும் என்ற செய்தியை உணர்த்த விரும்பினார்கள் என்கிறார்.
உண்மையில் மனிதன் தனக்காகவும் உலக விவகாரங்களுக்காகவும் நீண்ட நேரங்களை செலவிடுகிறான். அவ்வாறிருக்கும் போது தனது இரட்சகனுக்காக வருடத்தில் பத்து நாட்களை ஒதுக்கி தனது அன்றாட உலக சோலிகளை விட்டொதுங்கி தனது இரட்சகனோடு தனித்திருப்பதற்காக அந்த நாட்களைப் பயன்படுத்திக் கொள்வது எவ்விதத்திலும் அவனுக்கு குறைந்து போக மாட்டாது. அதனூடாக அவன் மிகப் பெரும் சிறப்பையும் பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறான். மட்டுமல்லாது நரக விடுதலையையும் பெற்றுக் கொள்கிறான்.
யாரெல்லாம் "இஃதிகாப்" எனும் அந்த ஸுன்னாவை உயிர்ப்பிக்கின்றார்களோ அவர்கள் தமது வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் எனக் கூறின் அது மிகையாகாது. வெற்றி பெறக்கூடிய மனிதன் தனது அனைத்து விடயங்களிலும் வெற்றி பெறுகிறான். தனது வாழ்க்கை சார்ந்த விடயங்களை ஒழுங்குபடுத்திக் கொள்வதில் வெற்றி பெறுகிறான். தனது இரட்சகனுடனான சிறந்த உறவைப் பேணுவதில் வெற்றி பெறுகிறான்.
நோய் போன்ற எத்தனை எத்தனை விடயங்களுக்காக மனிதன் தனது அன்றாட செயற்பாடுகளைத் துண்டித்துக் கொண்டு ஓய்வெடுக்கிறான். சிலவேளை அற்பமான காரணங்களுக்காக கூட அவ்வாறு செய்கிறான். அப்படியிருக்கும்போது தனது இரட்சகனுடன் தனித்திருப்பதற்கும் அவனுடனான உறவை வலுப்படுத்திக் கொள்வதற்கும் நேரம் செலவிடுவது எவ்வளவு அவசியமானது. இது குறித்து நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இஃதிகாப் குறித்து அல்-குர்ஆனில் பல இடங்களில் வந்துள்ளது. "நீங்கள் பள்ளிவாயில்களிலே இஃதிகாப் இருக்கும் நிலையில் பெண்களோடு உறவு கொள்ளாதீர்கள்" (பகரா : 187) போன்ற வசனங்களை இங்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இஃதிகாபுக்காக வேண்டி எமது நேரத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வதிலும் முடியுமானளவு எமது அன்றாட சோலிகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதிலும் நாம் கவனம் செலுத்துதல் வேண்டும். பத்து நாட்களும் தொடராக இஃதிகாப் இருப்பது சிரமமானது எனக் கருதுவோர் அதனை விட குறைந்த நாட்கள் இருக்க முயற்சிக்கலாம். சில ஆலிம்கள் சொல்வது போன்று கூடுதல் நேரமோ குறைந்த நேரமோ இஃதிகாப் நிய்யத்துடன் பள்ளிவாயிலில் ஒரு மணித்தியாலம் அல்லது சில நிமிடங்கள் தான் தாித்திருந்தாலும் அதன் கூலியை பெற்றுக் கொள்ள முடியும்.
பெண்களது இஃதிகாப்
பெண்களும் இஃதிகாப் இருக்கலாம். தனது கணவனின் அனுமதியோடு பொருத்தமான சூழலும் ஆண்களை விட்டும் மறைவாக இருக்கக் கூடிய பொருத்தமான இடமும் பொருத்தமான பள்ளிவாசலும் காணப்படின் அவளுக்கு இஃதிகாப் இருக்க முடியும். நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) மற்றும் ஹப்ஸா (ரழி) ஆகியோருக்கு இஃதிகாப் இருக்க அனுமதியளித்திருக்கிறார்கள். இது பெண்களும் இஃதிகாப் இருக்கலாம் என்பதற்கு ஆதாரமாக அமைகிறது.
இமாம் புகாரி தனது ஹதீஸ் கிரந்தத்தில் "பெண்களது இஃதிகாப்" எனும் தலைப்பில் ஓர் அத்தியாயத்தை இணைத்திருப்பதும், இமாம் மாலிக் தனது கிரந்தமான "முவத்தா"வில் ஒரு பெண் இஃதிகாப் இருந்து பின்னர் "ஹைழ்" ஏற்பட்டு விட்டால் தனது வீட்டிற்கு அவள் மீண்டு,எந்த கணத்தில் சுத்தமாகின்றாளோ அக்கணமே பள்ளிக்கு மீண்டு விடலாம் எனக் குறிப்பிடுவதும் பெண்களது இஃதிகாபுக்கு மேலும் வலு சேர்க்கும் ஆதாரங்களாகும்.
பொருத்தமான பள்ளிவாயில் காணப்படாதவிடத்து பெண்கள் தத்தமது வீடுகளில் ஓர் இடத்தை ஒதுக்கி - தொழுகையறையாக இருப்பது வரவேற்கத்தக்கது - அங்கு இஃதிகாபின் ஒழுங்குகளைப் பேணி அந்த ஸுன்னாவை நடைமுறைப்படுத்தலாம். எனவே எமது பெண்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்துதல் வேண்டும். அருள்பாலிக்கப்பட்ட இந்நாட்களை அல்லாஹ்வை வழிபடுவதில் அவர்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
ஆனால் துரதிஷ்டவசமாக நம் நாட்டில் பெண்களில் கணிசமான தொகையினர் பெருநாளைக்குரிய தீன் பண்டங்கள் செய்வதிலும் அத்தினத்திற்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதிலும் தமக்கும் தமது குழந்தைகளுக்குமான ஆடைகளைக் கொள்வனவு செய்வதிலும் இந்த மகத்தான நாட்களைக் கழித்து விடுகின்றனர். இது மிகவும் கவலையான விடயம். இதனால் கடைசிப் பத்தின் பேறுகளையும், லைலதுல் கத்ருடைய சிறப்புக்களையும் தவற விடுவதோடு நரக விடுதலையும் கூட தவறிவிடக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. வல்ல அல்லாஹ் எம்மைக் காப்பாற்ற வேண்டும். பெண்கள் இவ்விடயத்தில் கூடுதல் கரிசனைக் காட்டுவார்களாக.
லைலதுல் கத்ர்
இந்த மகத்தான பத்து நாட்களில் ஒரு மனிதன் அடைந்து கொள்ளும் மிகவும் அரிய பொக்கிஷமே லைலதுல் கத்ர் ஆகும். ஆயிரம் மாதங்களின் பேறுகளைப் பெற்றுத் தருகின்ற இம்மகத்தான இரவு எண்பத்து மூன்று வருட நன்மைகளை நமக்குப் பெற்றுத் தருகின்றது. இந்த இரவைக் கூட நபி (ஸல்) அவர்கள் கடைசிப் பத்திலேயே தேடிப் பெற்றுக் கொள்ளுமாறு தூண்டியுள்ளார்கள். "ரமழானின் கடைசிப் பத்தில் அதனைத் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றும் இன்னொரு அறிவிப்பில் "ரமழானின் கடைசிப் பத்தில் வரும் ஒற்றை நாட்களில் அதனைப் தேடிக் கொள்ளுங்கள்" என்றும் நபிகளார் கூறியுள்ளார்கள்.
அன்பானவர்களே! வாழ்க்கையில் கிடைக்கின்ற மிகவும் அரிதான இந்த நாட்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள இப்பொழுதில் இருந்தே திட்டமிட்டுக் கொள்வோம். எம்மை ஒழுங்குபடுத்திக் கொள்வோம். "கைலூலா" எனும் பகல் பொழுதில் தூங்கும் சிறு தூக்கம் மூலம் இரவு வணக்கத்திற்குத் தயாராகுவோம். வீண் வாதாட்டங்களையும் சண்டை சச்சரவுகளையும் விட்டுத் தூரமாவதோடு கோபமுற்றிருப்பவர்களை சமாதானம் செய்து வைப்போம். வீண் வாதாட்டமும் சண்டை சச்சரவும் இந்த நாட்களின் மகத்துவத்தை இழக்கச் செய்து விடும் என்பதைக் கவனத்திற் கொள்வோம்.
இந்த நாட்களின் ஒவ்வொரு இரவையும் கியாமுல் லைல் (நின்று வணங்குதல்), அல்குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல் போன்ற இபாதத்களால் உயிர்ப்பிப்போம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "யார் லைலதுல் கத்ருடைய இரவில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முன் செய்த அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன." (புகாரி)
எனவே இந்த பத்து நாட்களிலும் உத்வேகத்தோடு சிரமப்பட்டு இபாதத்களில் ஈடுபடுவோம். இஃதிகாப் அதற்கான சிறந்த சாதனமாக அமையும். இந்நாட்களில் வரும் லைலதுல் கத்ர் எமது முழு வாழ்வையும் விட மேலானது என்பதை எமது சிந்தைக்கெடுப்போம். அந்நாளில் நரக விடுதலையைப் பெற முயற்சிப்போம். வல்ல அல்லாஹ் எமமனைவருக்கும் அருள்பாலிப்பானாக!
Subscribe to:
Posts (Atom)