திமுக அரசு முஸ்லிம்களுக்கு செய்த துரோகம் கோவையில் 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படவும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் அழிக்கப்படவும், காவல்துறையின் கருப்பு ஆடுகளுக்கும் பாசிச சங்பரிவார் கூட்டணிக்கும் கலைஞர் அரசு தந்த ஆதரவுப் போக்கே காரணம் என்பதை அனைவரும் அறிவோம். கோவையில் 19 முஸ்லிம்களின் அநியாயப் படுகொலைகளுக்கு கலைஞர் அரசே முழுக்க முழுக்க காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் சொந்தப் பகையை தீர்க்க ஒரு வன்முறைக் கும்பல் ஒரு காவல்துறை அதிகாரியை அமைச்சர்களுக்கு கண் எதிரிலேயே கொடூரமாகக் கொன்று தீர்த்தது. அது மிகப்பெரிய கொடூர நிகழ்வாக இருந்தும் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிக்காக ஒட்டுமொத்த காவல்துறையே கொலை செய்த குடும்பத்தைச் சேர்ந்த சமுதாயத்தை பழிதீர்க்கப் புறப்படவில்லை. ஆனால் 1997 நவம்பரில் கோவையில் காவலர் செல்வராஜ் ஒரு கும்பலால் கொல்லப்படுகிறார். கொலையாளிகள் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என திட்டமிட்டு வேட்டையாடியது கலைஞரின் காவல்துறை. ஒரே நாளில் ஒரு படுகொலை நிகழ்வை மட்டும் காரணம் காட்டி ஒட்டுமொத்த சமுதாயமே கோவையில் வேட்டையாடப்பட்டது திடீரென்று நிகழ்ந்த ஒன்றாகக் கருதிட முடியாது. 1997 நவம்பரில் நிகழ்ந்த படுகொலைகள் மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது குறித்து திட்டமிடல்கள் குறித்து உளவுத்துறையை தம் கையில் வைத்திருக்கும் கலைஞருக்கு தெரிந்தே இருக்க வேண்டும். இருந்தும் அவர் முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறினார். இது கோவை விவகாரத்தில் அவர் செய்த முதல் குற்றம். குதறப்பட்ட மக்களின் கதறல்களை அவர் பொருட்படுத்தவில்லை. ஆறுதல் கூறக்கூட அவர் செல்லவில்லை. ஆனால் அதே காலகட்டத்தில் அருகிலுள்ள கோபிச்செட்டிபாளையத்துக்கு கலைஞர் சென்றார். அந்தப் பகுதியில் மர்ம நோயால் மரணமடைந்த ஆடுகளை பார்வையிடச் சென்றார். ஆடுகளுக்கு காட்டிய கருணையை, ஆறுதல்களைக் கூட கோவையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கவில்லை. அது மட்டுமின்றி கோவை படுகொலைக்காக இதுவரை பகிரங்க வருத்தமோ மன்னிப்போ கேட்காதவர் தான் கலைஞர். ஏறக்குறைய 200 பேரை கோவையில் 1998 பிப்ரவரியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடர்புபடுத்தி சிறைக்கொட்டடியில் தள்ளி கொடுமைகள் புரிய காரணமானார். ஆனால் 1997 நவம்பர் படுகொலைகளுக்கு காரணமாக கொலையாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படவில்லை. கோவையில் முஸ்லிம்களை கருவறுக்க முழு பங்கு வகித்த காவல்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்காததோடு அவர்களுக்குப் பதவி உயர்வுகளை வழங்கி, நீதியை ஏளனம் செய்தார் கலைஞர்.
No comments:
Post a Comment