(ஓரிடத்தில் இப்லீஸிடம் அல்லாஹ் கூறுகிறான்:) ஆனால் எவர்கள் உன்னைப் பின்பற்றி வழிகெட்டுப் போகிறார்களோ அவர்களிடம் மட்டும்தான் உனது அதிகாரம் செல்லுபடியாகும். நிச்சயமாக அப்படிப்பட்டவர்கள் அனைவருக்கும் நரகமே என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது! (இப்லீஸை பின்பற்றுவோருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள) அந்நரகத்திற்கு ஏழு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு பிரிவினருக்கென ஒதுக்கப்பட்டுள்ளது' (15 : 42 -44) மேலும் அந்த நரகம் என்னவென்று நீர் அறிவீரா என்ன? அது இருக்கவும் விடாது., விட்டும் வைக்காது! அது சருமத்தைக் கரித்துவிடக்கூடியது' (74 : 26-29) திண்ணமாக ஸக்கூம் - கள்ளி மரம் பாவிகளின் உணவாக இருக்கும். அது எண்ணைக் கசடு போலிருக்கும். சூடேறிய நீர் கொதிப்பது போன்று வயிற்றில் கொதிக்கும்' (44:43-45) நுஃமான் பின் பசீர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகில் வீழ்ந்து கிடப்பவர்களில் மிக லேசான தண்டனையை அனுபவிப்பவன் நெருப்பினால் செய்யப்பட்ட இரண்டு செருப்புககையும் இரண்டு வார்களையும் அணிந்திருப்பான். அவற்றின் வெப்பத்தினால் அவனது மூளை கொதிக்கும்., அடுப்பில் சட்டி கொதிப்பது போன்று! அனைவரை விடவும் லேசான வேதனையை அனுபவிப்பவன் அவனாகவே இருப்பான். ஆயினும் தன்னை விடவும் கடுமையான வேதனையை எவரும் பெற்றிருக்க மாட்டார் எனக் கருதுவான்' (நூல் : முஸ்லிம்) அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகவாசிகளைச் சேர்ந்த ஒரு மனிதனிடம் கேட்கப்படும்: நீ என்ன சொல்கிறாய்? பூமியிலுள்ள பொருள்கள் அனைத்தும் உன்னிடம் இருந்திருந்தால் அவற்றை ஈடாகக்கொடுத்து வேதனையிலிருந்து நீ விடுபடலாம் எனக் கருதுகிறாயா, என்ன? அதற்கு அவன் ஆம் என்பான்! இறைவன் சொல்வான்: இதனை விட எளிதான ஒன்றைத்தானே உன்னிடமிருந்து நான் எதிர்பார்த்தேன்! ஆதத்தின் முதுகில் நீ இருந்தபோது என்னோடு எது ஒன்றையும் நீ இணையாக்கக் கூடாது என்று உன்னிடம் வாக்குறுதி வாங்கினேன். ஆனால் எனக்கு இணைகற்பிப்பதில்தான் நீ பிடிவாதமாக இருந்தாய்' (நூல்:அஹ்மத் - முஸ்லிம் - புகாரி
No comments:
Post a Comment