international life...


கட்டிய மஞ்சள் கயிறின் வாசனை
மாறும் முன்னே -
கட்டியவளை கண்ணீரில் கரைத்து விட்டு
கடனடைத்து காடு கரை வாங்கி சேர்க்க,
கடல் கடந்து நாடு கடந்து
கட்டியவளை நினைத்து கட்டிலுக்கு முத்தமிட்டு
தலையணையை கட்டிக் கொண்டு உறங்குகிறாயே!

கோடிகோடி கட்டி தங்கங்களை கொட்டினாலும்
நீ வாழ மறந்த
வசந்தகால வாழ்க்கை கிடைக்குமா?

பணம் எனும் உணவு தேவைதான் - ஜீரணிக்கிறேன்
வாழ்க்கை எனும் உடலே இல்லையெனில்
உணவு எனும் பணம் உபயோகப்படாதே?

இளைஞனே!
திருப்பிப் பார்!
நீ அனுபவிக்க மறந்த
உன் வாழ்க்கை பாதச் சுவடுகளை



இப்படிக்கு என்றும் அன்புடன் துல்கர் இனயம்
.....

பெண்மணியே உன் வழி என்ன?


இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தில் ஆண்கள் ஓரளவு விழிிப்புணர்வுடன் குர்ஆன், ஹதீது வழியில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் சகோதரிகளே உங்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் நிலையை சற்று சிந்தித்துப்பார். இஸ்லாம் இயம்பும் முறைப்படி உன் வாழ்க்கை அமைந்துள்ளதா? அன்னை பாத்திமா(ரலி) வாழ்ந்த வாழ்க்கை வாழ்கின்றாயா? நபி(ஸல்) அவர்களின் வழியை பின்பற்றுகின்றாயா? மறுமையை நினைத்து நரகத்தை நினைத்து வருந்தினாயா? ஏதோ! இஸ்லாத்தில் பிறந்து விட்டோம் என்ற இருமாப்பில் இன்பம் கண்டுக் கொண்டு இருக்கிறாய்.
    உன் வாழ்க்கையை சற்றே குர்ஆன், ஹதீதுடன் ஒப்பிடு. மார்க்கத்தை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டு. மார்க்கக் கல்வி கற்றுக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் மீது கடமை என்று அல்லாஹ்வும் ரசூலும்(ஸல்) கூறியுள்ளதைப் பார். குர்ஆன், ஹதீதை அறிந்துகொண்டால் அனாச்சாரங்களை அழிக்க நீயே முன்வருவாய்.
    "(நபியே) அந்நாளில் பலூட்டிக் கொண்டிருந்த ஒவ்வொருத் தாயும் தான் பாலூட்டும் குழந்தையை மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பஸ்த்திரியின் கர்ப்பமும் சிதைந்து விடுவதை நீர் காண்பீர். மனிதர்களை சித்தமிழந்தவர்களாக நீர் காண்பீர். அவர்கள் (சித்தம் இழக்க காரணம்) போதையினால் அல்ல, அல்லாஹ்வுடைய வேதனையானது மிகவும் கடினமானது. (அதனைக் கண்டு திடுக்கிட்டு) அவர்கள் சித்தமிழந்து விடுவார்கள். (அல்குர்ஆன் 22:2) என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் சகோதரியே; சிந்தித்துப்பார்.
    "நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அந்த இரண்டையும் கடைபிடிக்கும் காலமெல்லாம் நீங்கள் ஒருபோதும் வழி தவறவே மாட்டீர்கள் ஒன்று அல்குர்ஆன் இரண்டு என்னுடைய சுன்னத்தான வழிமுறை" (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்:முஅத்தா
என்று நபி(ஸல்) அவர்கள் கூறி இருக்க நீ யாரைப் பின்பற்றுகிறாய்? யாருடைய பாதையை பின்பற்றி உன் வாழ்க்கைத் தேய்கிறது. பண்டிதர்கள், தலைவர்கள் என்று தன்னை பறைசாற்றிக் கொள்பவர்கள் கூறுவதையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்காமல் மார்க்கம் என்று எடுத்து நடக்கிறாய்.
    இறைவன் கூறுவதைப்பார்,  ஈமன் கொண்டவர்களே! நிச்சயமாக பண்டிதர்களிலும், குருக்களிலும் அனேகர் மக்களின் சொத்துக்களை தவறான முறையில் சாப்பிடுகின்றார்கள். மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களை தடுக்கின்றார்கள். (அல்குர்ஆன் 9:34)
    பெரியவர்கள் சொல்வதெல்லாம் சிந்தித்து விளங்காமல் மார்க்கம் என்று எண்ணினாயே? இறைமறை கூறுவதைப்பார். மேலும் (17:27, 24:51, 28:50, 20:124) ஆகிய வசனங்களையும் உற்றுநோக்கு. உன் நிலையையும் நீ எண்ணிப்பார்.
    உனக்கு ஏதாவது தேவைப்பட்டால் அவ்லியாக்களின் கப்ரை நோக்கி ஓடுகின்றாய், யார் யாருக்கோ நேர்ச்சை செய்கின்றாய்,  முரீது கொடுக்கும் முல்லாக்களின் காலில் விழுந்து தன்மானம் இழந்து நிற்கின்றாய், மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு பாடுபட்டார்களோ அத்தனை மூட நம்பிக்கைகளையும் குத்தகை எடுத்துக்கொண்டு கும்மாளம் போடுகின்றாய். இதுதான் உன் இஸ்லாத்தின் பண்பா? இதுதான் நீ இஸ்லாத்தின் மீது வைத்துள்ள அன்பா?
    அல்லாஹ்வையன்றி நீ அழைப்பவர்கள் அழிந்துவிடுபவர்கள் என்று நபி(ஸல்) அறிவுரை பகர்ந்தார்கள். ஆனால் நீ செய்வது என்ன? உன் தேவை நிறைவேற "யாமுஹய்யத்தீன்" என்று அழைக்கின்றாய். என்றோ மெளத்தாகி விட்டவர் உன் அழைப்பை கேட்கிறார் என்றால்  விந்தையாக உள்ளது. உனது கூற்று நியாயமானதா? குர்ஆனுடம் ஒப்பிடு.
    நபியே! கப்ருகளில் உள்ளவர்களைச் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை. (35:22) உன் கூற்று சரியா? அல்லது குர்ஆனின் கூற்று சரியா? சிந்தித்துபார். இணைவைக்கும் காரியத்தில் நீ உன்னை ஈடுபடுத்திக்கொள்ளாதே. அல்லாஹ்வின் தகுதிகளை அவனது அடிமைகளுக்கு தந்து உன்னை நீயே அழித்துக் கொள்ளாதே.
    எவர்கள் விசுவாசம் கொண்டு நற்கருமங்கள் செய்கின்றார்களோ அவர்கள் "பிர்தவ்ஸ்" என்னும் சுவர்க்கத்தில் உபசரிக்கப்படுவார்கள் அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (18:107,108)
    நீ இறைவன்மீது வைத்த அன்பிற்காக இறைவன் உனக்கு சுவர்க்கத்தை நிரந்தரமாக தருவதாக வாக்களிக்கின்றான் இதைவிட மாபெரும் பாக்கியம்   உனக்கு என்னவேண்டும்.
    நிராகரிப்பவர்கள் என்னையன்றி என்னுடைய அடியார்களை தம் பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ளலம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக அவர்களுக்கு நாம் நரகத்தையே தயார் செய்து வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 18:102)
    அல்லாஹ்வையன்றி அவனது அடியாளர்களை அழைப்பதை குறித்து இறைவன் எவ்வளவு கடுமையாக எச்சரிக்கிறான் என்பதை ஆராய்ந்துபார்.
    இவ்வுலக வாழ்க்கை உன்னை வீன் வழியில் அழைத்து சென்றுவிடாமல்  எச்சரிக்கையாக இரு. உனக்கு ஏதாவது ஒரு தீங்கு நேர்ந்தால் உடனே மண்ணறையை நோக்கி ஓடுகிறாய். உன் ஓட்டத்தின் முடிவு உன்னையே நரகிற்கு அனுப்பும்; அதற்கு முன் உஷாராகிவிடு உன் செயல்களை திருத்திக்கொள். கப்ரு மோகம் கொண்டு அலையும் உன் நிலையை உடன் மாற்றிக்கொள்.
    கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சாபம் உனக்கு தேவையா? யோசித்து உன்செயலைத் திருத்திக்கொள். முரீது விற்பனை முல்லாக்கள் உன்னை முடக்க முற்படுவார்கள். முடங்கிவிடாமல் தவ்ஹீதின் பாதையில் முன்னேறிச் செல்.

    அல்லாஹ்வின் குர்ஆனையும்,  நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளையும் கடைப்பிடித்துச் செல். அதுவே உன்னை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் சுந்தர வழியாகும்.
இப்படிக்கு என்றும் அன்புடன் துல்கர் இனயம்

கபுறு வணங்கிகளின் கதை கேளுங்கள் ...!





கபுறு வணங்கிகளின் கதை கேளுங்கள் ...!

  • இவங்கத்தான் சுன்னத் வல் ஜமாஅத்தாம்:

ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இபுனு அரபி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் வபாத்தான பிறகு அவர்களே தங்களது வீட்டிற்கு வந்தார்கள். தங்களது வெள்ளாட்டியைக் கண்டு அவளது சுக செய்திகளையும் நிலைமைகளையும் விசாரித்தார்கள். எல்லா விஷயங்களையும் அவள் சவிஸ்தாரமாக எடுத்துக் கூறினாள். அவர்கள் அவளிடமிருந்து விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து சென்றார்கள் என்பதாக புஸுஸுல் ஹிக்கம் உடைய ஷரஹில் இமாம் ஷைகுஜுந்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுவதாக ஸஆதத்துத் தாரைன் 402-வது பக்கத்தில் வரையப்பட்டுள்ளது.

"அவுலியாக்களுக்கு ஆண்டவனால் அருளப்பட்டிருக்கும் கறாமாத்து அதிசயத்தின் பொருட்டால் ரூஹானியத்தான சக்தியைக் கொண்டு ஹயாத்திலும் மவுத்துக்குப் பிறகும் அவர்கள் வெளிப்பட்டு உலகில் நடமாடும் சக்தியுண்டு" என்பதாக இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அல்கபருத்தால்லு அலா-வுஜுதில் குத்பி வல் அப்தால், என்ற நூலிலும், இமாம் ஸெய்யிது ஷஹாபுத்தீன் அஹ்மது ஹுஸைனீ ஹமவீ ஹனபீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் நபஹாத்துல் குர்பிவல் இத்திஸால், என்ற நூலிலும் கூறுகின்றார்கள்.

"அவுலியாக்களில் பெரும்பாலோர் வபாத்துக்குப் பிறகும் கபுருகளிலிருந்து புறப்பட்டு வெளியே போகவும் செய்கிறார்கள். திரும்பவும் கபுருக்குள் மீளவும் செய்கிறார்கள். போகவர அவர்களுக்கு எத்தகைய தடையுமில்லை" என்பதாக அல்குத்பு இமாம் ஷஃறானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் லத்தாயிபுல் மினன் 1-வது பாகம் 144-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.

"நபிகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தங்களது மவுத்தாகிப் போன ஸஹாபாக்களின் அர்வாஹுகள் சகிதம் எல்லா உலகங்களையும் சுயேச்சையாகச் சுற்றி வருவதை அவுலியாக்கள் கண்கூடாகக் கண்டிருக்கின்றார்கள்" என்பதாக இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுவதை, தப்ஸீர் ரூஹுல் பயான் பாகம் 10, பக்கம் 99ல் காணலாம்.

  • கப்ரு வணங்கிகளின் இதற்காதாரமாக வபாத்துக்குப் பிறகு நிகழ்ந்த சில சம்பவங்களைக் காண்க:

இமாம் அப்துல் வஹ்ஹாபு ஷஃரானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஸியாரத்துச் செய்வதற்காக ஸெய்யித் உமர் இபுனு பாரிலு ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடைய கபுரு ஷரீபுக்குச் சென்றபோது அங்கு அவர்களைக் காணாதபடியால் திரும்பிவிட்டார்கள். பிறகு உமர் இபுனு பாரிலு ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இமாம் ஷஃரானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு இடம் சென்று தேவையை முன்னிட்டு வெளியே சென்றிருந்ததாகத் தெரிவித்து மன்னிப்புக் கோரியதாக இமாம் ஷஃறானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களே தங்களுடைய 
நூல் : ஷலதாயிபுல் மினன்' 1-வது பாகம் 144-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.

ஸெய்யிது ஷைகு அப்பாஸ் முர்ஸீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை சனிக்கிழமை சூரியோதயத்திற்கு முன்னும், ஸெய்யிது இபுறாஹிமுல் அஃரஜ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை வெள்ளிக்கிழமை மக்ரிபுக்குப் பின்பும் ஸெய்யிது யாக்கூத்துர் அர்ஷீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைச் செவ்வாய்க்கிழமை லுஹருக்குப் பின்பும் அவரவர்களுடைய கபுருக்குச் சென்று ஸியாரத்துச் செய்யும் படியும் அவர்களெல்லோரும் குறிப்பிட்ட அந்த நேரங்களில் தான் கபுரில் ஆஜராயிருப்பார்களென்றும், இவ்வுண்மையை அகக்கண்ணை உடையவர்களைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்களாகையால், கபுருகளில் அவர்கள் இருக்கவே செய்கின்றார்கள் என்ற எண்ணத்துடன் கஷ்பில்லாதவர்கள் செய்யவேண்டுமென்றும் ஸெய்யிது அலி பதவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் உபதேசித்திருப்பதாக மேற்சொன்ன ( நூல் : லாதயிபுல் மினன் ) அதே பக்கத்தில் வரையப்பட்டுள்ளது.


ஹஜ்ரத் கிலுரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள், இமாமுல் அஃலம் அபூஹனீபா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது வஃளு மஜ்லிசுக்குத் தினந்தோறும் காலை வேளையில் ஆஜராகி ஷரீஅத்துடைய இல்முகளைக் கற்று வந்தார்கள். இமாம் அவர்கள் வபாத்தான பிறகு அந்த மஜ்லிசு நடைபெறவில்லை. கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆண்டவனது உத்தரவு பெற்று, ஹயாத்தில் நடந்தது போலவே மவுத்துக்குப் பின்பும் இமாமுல் அஃளம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது கபுரு ஷரீபுக்கு ஒவ்வொரு காலையிலும் சென்று, ஷரீஅத்துடைய இல்முகளைக் கேட்டுவந்ததாக இமாம் இபுனு ஜவ்ஸீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு 'பதாயிஉ' எனும் பிக்ஹுக் கித்தாபில் வருகிறதாக ஷைகு ஹஸனுல் அதவீ மிஸ்ரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மஷாரிக்குல் அன்வார் 69-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.

நான்கு மதுஹபுடைய இமாம்களுள் ஒருவராகிய அஹ்மது இபுனு ஹம்பலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது ஸியாரத்திற்குச் சென்ற குத்பு றப்பானீ கௌதுஸ்ஸமதானீ, முஹிய்யித்தீன் அப்துல் காதிரு ஜீலானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அன்னாருடைய கபுறு ஷரீபுக்கெதிரே, அதபுடன் நின்று, "அஸ்ஸலாமு அலைக்கும் யாஇமாமல் கிராம்" (சங்கைக்குரிய இமாம் அவர்களே) என்று அழைத்து ஸலாம் சொன்னார்கள். உடனே, கபுரு ஷரீபு இரண்டாகப் பிளந்தது. இமாம் அவர்கள் ஜோதிப் பிரகாசத்தோடு வெளியே பிரசன்னமாகி கௌதுல் அஃளம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கட்டித் தழுவி ஆலிங்கனஞ் செய்தார்கள் நூரானீயான பரிவட்டத்தைப் போர்த்தி, "ஸெய்யிது அப்துல் காதிரே, ஷரீஅத்துடைய இல்முகளும், ஹகீகத்துடைய இல்முகளும் தங்கள்பால் ஹாஜத்தாகின்றன," என்று பகர்ந்து விடைபெற்று மறைந்தார்கள். இச்சம்பவம் ஷபஹ்ஜத்துல்-அஸ்றாரு' கிரந்தத்தில் அறிவிப்பு செய்யப்பட்டிருப்பதாய் ஷதப்ரீஜுல்காத்திர்' 40-வது பக்கத்திலும், ஷபஸ்லுல் கிதாபு' 129-வது பக்கத்திலும் ஹள்ரத் ஷெய்கு அப்துல்ஹக் முஹத்திதுத் திஹ்லவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் 'ஜுப்ததுல் அஸ்றார்' நூலிலும் காணப்படுகின்றது.

குத்புஸ்ஸமான், இமாம் அப்துல் வஹ்ஹாபு ஷஃறானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்:- "நான் எனது குருநாதர் (உஸ்தாது) ஹஜ்ரத் ஸெய்யிது முஹம்மது ஷனாவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடன் அல்குத்புஷ்ஷஹீர், ஸெய்யிது அஹ்மது பதவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது தர்காவுக்கு ஸியாரத்திற்காகச் சென்றிருந்தேன். அவ்வமயம் எனது உஸ்த்தாதவர்கள் கபுரு ஷரீபை முன்னோக்கி, 'நாயகமே! இன்ன காரியத்தை முன்னிட்டு மிஸ்ருக்குப் போகப் பிரயாணமாயிருக்கிறேன். விடை கொடுத்தனுப்புங்கள்' என விண்ணப்பித்து நின்றார்கள்."அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்தவராய் போய் வருக" என்ற நல்வாக்கு கபுருக்குள்ளிருந்து வெளிவந்த சப்தத்தை எனது வெளிரங்கமான இரு காதுகளைக் கொண்டும் நன்கு கேட்டேன்" என்பதாக. இவ்வரலாற்றை இமாம் ஷஃறானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் லதாயிபுல் மினன்' 1-வது பாகம், 180-வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அமீருல் முஃமினீன், ஸெய்யிதுனா அபூபக்கர் ஸித்தீக்கு ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் வபாத்தாகும் போது, "என்னுடைய ஜனாஸாவை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முபாரக்கான அறையின் முன்னால் வையுங்கள். கதவு திறக்கப்பட்டு, அபூபக்கரை உள்ளே கொண்டு வாருங்கள் என்று உத்தரவு வந்தால் மட்டில் அவ்வறையிலேயே அடக்கம் செய்யுங்கள். இன்றேல், பொதுக்கபுருஸ்தானத்தில் அடக்கி விடுங்கள்" என்று வஸிய்யத்துச் செய்திருந்தார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பூட்டப்பட்ட அறைவாயிலின் முன்பு ஜனாஸாவை வைக்கப்பட்டபோது, வாயில் கதவு தானாகவே திறந்து கொண்டது. "தோழரைத் தோழரிடம் அனுப்பி வையுங்கள்" என்ற உத்தரவு புனிதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ரவுளா ஷரீபிலிருந்து வெளிவந்தது. அவ்விதமே அங்கு அடக்கப்பட்டார்கள். இவ்வரலாற்றை இமாம் பக்ருத்தீன் றாஜீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தப்ஸீர் கபீர், 5-வது பாகம் 685-வது பக்கத்தில் கூறுவதாய் 'தப்ரீஹுல் அத்கியா பீ-அஹ்வாலில் அன்பியா', பாகம் 2, பக்கம் 376-ல் வரையப்பட்டுள்ளது.

குத்புஷ் ஷஹீர், ஷைகு முஹம்மது இபுனு சுலைமானுல் ஜஸுலிஷ் ஷாதுலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 870-வது வருஷத்தில் வபாத்தாகி, சூயஸ்பட்டணத்தில் அடக்கப்பட்டார்கள். 77 வருஷங்களுக்குப் பிறகு ஹிஜ்ரி 947-வது வருஷம் அவர்களது கபுரைத் தோண்டப்பட்டது. அவ்வமயம் அவர்களது திரேகம் (தபன்) அடக்கம் செய்யப்பட்ட சமயம் எவ்விதமிருந்ததோ அவ்விதமே உறுப்பில் எத்தகைய சேதமும், மாறுபாடுமின்றி. கபன் துணியில் கூட மண் ஒட்டாமலிருந்தது, அந்தத் திரேகம் கஸ்தூரி வாடையுடன் கமழ்ந்துக் கொண்டிருந்ததைக் கண்ணுற்ற திரளான ஜனங்கள் பேராச்சரியப்பட்டு மயங்கி நின்றனர். ஆண்டவனுடைய பாதையில் ஷஹீதானவர்கள் இறந்தவர்கள் அல்லர். அவர்கள் ஜீவனுள்ளவர்கள். அவர்களுடைய பூத உடல்களை மண் தின்னாது. புழுப்பூச்சி, ஐவாமிருகங்கள் எதுவுமே தீண்டாது என்று அல்லாஹ்வும், றஸுலும் கூறியவாக்குகளை மெய்ப்பிக்கும் அத்தாட்சிகளாகவே அவர்கள் காணப்பட்டார்கள். மேலே குறிப்பிட்ட சம்பவத்தின் போது அக்கூட்டத்திற்கு சிலர் சோதிப்பதற்கென்றே, வசீகரத்துடன் ஜோதிப் பிரகாசமாக இலங்கிக்கொண்டிருந்த அந்த வலியுல்லாஹ் அவர்களுடைய திருமுகத்தில் விரலைவைத்து அழுத்திப் பார்த்தனர். விரல் பட்ட இடத்தைச் சூழ்ந்து செந்நிறமாக இரத்தத்தின் அறிகுறி காணப்பட்டது. விரலை எடுத்ததும் அந்த உதிரக்கட்டு உடலில் பரவி மறைந்தது. பிறகு அவர்களது பரிசுத்தத் திருமேனி ஆப்பிரிக்காவிலுள்ள மொராக்கோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது. அவர்களது கபுரு ஷரீபில் இன்று வரை ஸலவாத்தின் பரக்கத்தை முன்னிட்டு கஸ்தூரி வாடை கமழ்ந்து கொண்டிருக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் ஸியாரத்திற்காகச் சென்று, தலாயிலுல் கைறாத்தை ஓதி நற்பேறுகளைப் பெற்று வருகின்றனர்.
நூல் : ஜாமிவுல் கறாமாத் 1-வது பாகம், 165-வது பக்கத்தில் காணப்படுகிறது. 


மாற்று மதத்தார்கள் தோற்றுப்போகும் அளவிற்க்கு  இந்த கபுறு வணங்கிகளின் கட்டுக்கதைகளும், கப்சாக்கள்ளும் மிஞ்சிவிடுவதை கண்டோம் 

இணை வைத்தல் சம்பந்தமான திருக்குர்ஆன் வசனங்கள்.


இணை வைத்தல் சம்பந்தமான அனைத்து சந்தேகங்களையும் தெளிவுப்படுத்தக் கூடிய திருக்குர்ஆன் வசனங்களின் எண்களை கீழே தொகுத்துத் தந்திருக்கிறோம்.

1வது அத்தியாயம் வசனம் – 4

2 வது அத்தியாயம் வசனங்கள் – 83,150,186

3 வது அத்தியாயம் வசனங்கள் – 64,79,

4 வது அத்தியாயம் வசனங்கள் – 36,48,116,172



5 வது அத்தியாயம் வசனங்கள் – 17,44,72,76,117,118

6 வது அத்தியாயம் வசனங்கள் -16,22,23,24,40,41,50,56,63,64,71,80,81,88,94,100,101,102,148,151

7 வது அத்தியாயம் வசனங்கள் – 33,70,173,188,191,194,195,197

9 வது அத்தியாயம் வசனங்கள் – 13,18,31,113

10 வது அத்தியாயம் வசனங்கள் – 12,18,28,29,31,34,35,49,66,104,105,106

11 வது அத்தியாயம் வசனங்கள் – 38,40,106,108

12 வது அத்தியாயம் வசனங்கள் – 38,40,106,108

13 வது அத்தியாயம் வசனங்கள் – 14,16,33,36

16 வது அத்தியாயம் வசனங்கள் – 20,27,35,36,54,86,87,73,75,100

17 வது அத்தியாயம் வசனங்கள் – 23,56,57,67,93,111

18 வது அத்தியாயம் வசனங்கள் – 26,38,42,52,102,110

19 வது அத்தியாயம் வசனங்கள் – 42,93

21 வது அத்தியாயம் வசனங்கள் – 24,25,66,98

22 வது அத்தியாயம் வசனங்கள் – 12,26,31,71,73

23 வது அத்தியாயம் வசனங்கள் – 84,85,86,87,88,89,117

24 வது அத்தியாயம் வசனங்கள் – 43,55

25 வது அத்தியாயம் வசனங்கள் – 2,17,55

26 வது அத்தியாயம் வசனங்கள – 72,92,213

27 வது அத்தியாயம் வசனங்கள் – 62,63,64,80,91

28 வது அத்தியாயம் வசனங்கள் – 62,64,71,72,87,88

29 வது அத்தியாயம் வசனங்கள் – 8,17,36,50,56,61,62,63,65

30 வது அத்தியாயம் வசனங்கள் – 13,18,31,33,35,40,52

31 வது அத்தியாயம் வசனங்கள் – 13,15,25,30,32

33 வது அத்தியாயம் வசனங்கள் – 17,37

34 வது அத்தியாயம் வசனங்கள் – 22,24,27,40

35 வது அத்தியாயம் வசனங்கள் – 13,14,40

36 வது அத்தியாயம் வசனங்கள் – 22

39 வது அத்தியாயம் வசனங்கள் – 3,11,14,38,49,53,64,65

40 வது அத்தியாயம் வசனங்கள் – 12,20,42,60,66,73

41 வது அத்தியாயம் வசனங்கள் – 14,47,48

42 வது அத்தியாயம் வசனங்கள் – 21

43 வது அத்தியாயம் வசனங்கள் – 9,20,45,86,87

46 வது அத்தியாயம் வசனங்கள் – 4,5,9,21

48 வது அத்தியாயம் வசனங்கள் – 11

52 வது அத்தியாயம் வசனங்கள் – 43

60 வது அத்தியாயம் வசனங்கள் – 12

67 வது அத்தியாயம் வசனங்கள் – 28,30

68 வது அத்தியாயம் வசனங்கள் – 41

98 வது அத்தியாயம் வசனங்கள் – 5


72 வது அத்தியாயம் வசனங்கள் – 18,20,21,22



இப்படிக்கு என்றும் அன்புடன் துல்கர் இனயம்

ஓதும் இறை மறையும் மோதும் மௌலித் வரிகளும் (குர்ஆணை புறக்கணிக்கும் மவ்லித்)

‘மவ்லிது’ எனும் அரபிச் சொல்லின் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித்)

மவ்லிது ஓதும் அமலை அரசின் பெருவிழாக்களில் முக்கியம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்திவர்,தலை சிறந்த-வள்ளல் தன்மை மிக்க-அரசர்களில் ஒருவரான ‘அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீத் கவ்கப்ரீ – பின்- ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்’ என்பவர் ஆவார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார் என்பது தெரியாது. மகுடமாய்த் திகழும் சுப்ஹான் மவ்லிதை கல்விக்கடல் கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்களோ, அல்இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘இயற்றியவர் யார்?’ என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

இந்த மவ்லித் ”ஸுப்ஹான அஸீஸில் ஃகஃப்பார் என்று தொடங்குவதால் இதன் முதல் சொல்லான ஸுப்ஹான என்பதே இந்த மவ்லிதுக்குரிய பெயராக அமைந்தது. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் மவ்லவி தேங்கை சர்புத்தீன் என்பவர் எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியுள்ளோம்,


குர்ஆணை புறக்கணிக்கும் மவ்லித்
1. மவ்லித் வரிகள்:

اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ

பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் !

கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !

اَنْتَ غَفَّارُ الْخَطَايَا وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ

இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ,

அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ

كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!

சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!

குர்ஆன் வரிகள்:

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)

எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!” (அல்குர்ஆன் 3:193)

மவ்லித் வரிகள்:

يَا مَنْ تَمَادى وَاجْتَرَمْ تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ

وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ وَنُوْرُهُ عَمَّ الْبِلاَدِ

பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள்!

நபியின் கொடைத்தன்மையை எதிர்பாத்துக் கொள்!

புனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக் கொள். அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது.

குர்ஆன் வரிகள்:

அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்றமாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 72 : 22)

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 135)
3. மவ்லித் வரிகள்:

حُبُّكُمْ فِيْ قَلْبِنَا مَحْوٌ مِنْ رَّئِيْنَ الذَّنْبِ وَالْحَرَجِ

صَبُّكُمْ وَاللهِ لَمْ يَخِبِ لِكَمَالِ الْحُسَنِ وَالْبَهَجِ

தங்களின்பால் நாங்கள் வைத்திருக்கும் நேசம் எங்களின் இதயத்திலிருக்கிறது.

இது எங்களின் பாவக் கறைகளிலிருந்தும் குற்றத்திலிருந்தும் உள்ளவற்றை அழித்துவிடும்.

தங்களின் நேசன் முழுமையான அழகையும் ஒளியையும் பெறுகிற காரணத்தால் அல்லாஹ் மீது சத்தியமாக!

அவர் இழப்பினை அடையவில்லை.

குர்ஆன் வரிகள்:

அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 5:74)

4. மவ்லித் வரிகள்:

اَنِّيْ عُبَيْدٌ ذَلِيْلٌ مِنْ عَثْرَتِيْ اَسْتَقِيْلُ

وَمَا يَخِيْبُ النَّزِيْلُ فِيْ حَيِّ رَاعِ الذَّمَامِ

நிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கிவிடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.

குர்ஆன் வரிகள்:

நான் உங்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! நீர்) கூறுவீராக! (அல்குர்ஆன் 72:21)

அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் (முஹம்மதே!) அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 5:41)

5. மவ்லித் வரிகள்:

اَلشَّافِعُ الْمُنْقِذِ مِنْ مَهَالِكِ وَآلِهِ وَصَحْبِهِ وَمَنْ هُدِيَ

அழிவுகளிலிருந்து காப்பாற்றுகிறவரும் மன்றாடுகிறவருமான நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நேர்வழியாக்கப்பட்டவர்கள் மீதும் ஸலாவத்துச் சொல்லுங்கள்.

குர்ஆன் வரிகள்:

“மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?” என்று (முஹம்மதே!) நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவை களின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 5:17)

6. மவ்லித் வரிகள்:

صَلَوَاتُ اللهِ عَلى الْمَهْدِيْ وَمُغِيْثُ النَّاسِ مِنَ الْوَهَجِ

வழிகாட்டப்பட்டவரும் வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவோருமான நபி(ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக.

குர்ஆன் வரிகள்:

“எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (அல்குர்ஆன் 2:201)

“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)

7. மவ்லித் வரிகள்

اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ

எனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.

குர்ஆன் வரிகள்:

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 3 : 160)

“அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்” என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். (அல்குர்ஆன் 7 : 128)

8. மவ்லித் வரிகள்

اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ

மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்

குர்ஆன் வரிகள்:

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2:107)

மவ்லித் வரிகள்

ضَاقَتْ بِيَ اْلاَسْبَابْ فَجِئْتُ هذَا الْبَابْ

اُقَبِّلُ اْلاَعْتَابْ اَبْغِيْ رِضَا اْلاَحْبَابْ

وَالسَّادَةُ اْلاَخْيَارِ

எனக்கு காரணங்கள்(உபாயங்கள்) நெருக்கடியாகிவிட்டன. எனவே நபியே! தங்களின் இந்த வாசலுக்கு நான் வந்து விட்டேன். தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன். நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தை தேடுகிறேன்.

குர்ஆன் வரிகள்:

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்! (அல்குர்ஆன் 27:62)

9. மவ்லித் வரிகள்

فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ

எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக. என்னால் பற்றி நிற்கப்படுவதற்குரிய நபியே தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.

குர்ஆன் வரிகள்:

“இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்; என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:64)

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.(அல்குர்ஆன் 13:28)

10. மவ்லித் வரிகள்:

قَدْ فُقْتُمُ الْخَلْقَ بِحُسْنِ الْخُلُقِ فَاَنْجِدُوا الْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ

அழகிய நற்குணங்களின் மூலமாகத் தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை விட மேம்பட்டு விட்டீர்கள். எனவே யான் கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்.

குர்ஆன் வரிகள்:

“அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:56)

11. மவ்லித் வரிகள்:

بَسَطْتُ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ

என் வறுமை என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்துவிட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.

குர்ஆன் வரிகள்:

“எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:86)

நபிமொழி:

நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ 2440)

12.மவ்லித் வரிகள்

وَانْظُرْ بِعَيْنِ الرِّضَالِيْ دَائِمًا اَبَدًا

கருணைமிகும் மாநபியே! காலமெல்லாம் நித்தியமாய் திருப்தியெனும் விழிகளினால் தேம்புமெனைப் பார்த்தருள்வீர்.

குர்ஆன் வரிகள்:

அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:72)

அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 9 : 109)

13. மவ்லித் வரிகள்:

وَاعْطِفْ عَلَىَّ بِعَفْوِ مِنْكَ يَشْمَلُنِيْ فَاِنَّنِيْ عَنْكَ يَا مَوْلاَيَ لَمْ اَحِدِ

என்னெஜமான் ஆனவரே, ஏற்றமிகு நுமைத்தவிர அன்னியரை நிச்சயமாய் அழையேனே! ஆதலினால் மன்னவரே! தங்களுயர் மன்னிக்கும் அரிய பண்பால் என்னிடத்தில் கழிவிரக்கம் என்றென்றும் காட்டிடுவீர்.

குர்ஆன் வரிகள்:

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)

உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன்”(என்றார்.) (அல்குர்ஆன் 11 : 90)

4. மவ்லித் வரிகள்:

إِنَّا نَسْتَجِيْرُ فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ

நிச்சயமாக நாம் ஒவ்வொரு தண்டனையையும் தடுத்திடும் விஷயத்தில் இவர்களிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்.

குர்ஆன் வரிகள்:

தீமைகளைச் செய்தோரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு தீமைக்கு அது போன்றதே தண்டனை. அவர்களை இழிவும் சூழ்ந்து கொள்ளும். இருள் சூழ்ந்த இரவின் ஒரு பகுதியால் அவர்களின் முகங்கள் மூடப்பட்டது போல் இருக்கும். அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் (அல்குர்ஆன் 10 : 27)

15. மவ்லித் வரிகள்:

நபியே! தங்களைக் கொண்டு யான் உதவி பெறுவதில் தங்களின் மீது சத்தியம் செய்கிறேன்.

நபிமொழிகள்:

அல்லாஹ் அல்லாவதர்களைக் கொண்டு சத்தியம் செய்வர் இணைவைத்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல் : அபூதாவூத் 2829)

சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்! இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ 2679)

16. மவ்லித் வரிகள்

اَنْتَ سَتَّارُ الْمَسَاوِيْ وَمُقِيْلُ الْعَثَرَاتِ

எம்மில் நிகழும் தீங்குகளை இதமாய் மறைப்பவர் தாங்களன்றோ, நிம்மதி குலைக்கும் இன்னல்களை நீக்கிவிடுபவர் தாங்களன்றோ.

اَلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ

நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்.

يَا مَنْ يَّرُوْمُ النَّعِيْمَا بِحُبِّهِ كُنْ مُقِيْمًا

وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا لَدَيْهِ بُرْعُ السَّقَامِ

நயீம் எனும் சுவனத்தை நாடுபவனே! நபியவர்களின் நேசத்தைப் பற்றிக் கொண்டு தங்குபவனாக நீ இரு. நீ நோயாளியாக இருந்தால் நபி(ஸல்) அவர்களிடம் நோயின் நிவாரணம் இருக்கிறது.

குர்ஆன் வரிகள்:

நான் நோயுறும் போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)

நபிமொழி:

மனிதர்களைப் படைத்து பராமரிப்பவனே! நோயைப் போக்கி, அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (நூல் : புகாரீ 5675)

17. மவ்லித் வரிகள்

مُسْتَشْفِعًا نَزِيْلَ هذَا الْحَرَمِ فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ

மதீனாவெனும் இந்த மகத்தான பூமியில் இறங்கிய மாநபியே! தங்களின் பரிந்துரையைத் தேடியவனாக தங்கள் முன் நிற்கிறேன். எனவே, நிரந்தர நல்லுதவி செய்வதின் மூலமாக என்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்துவீர்களாக.

குர்ஆன் வரிகள்:

“அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காதும் இருந்தாலுமா?” என்று கேட்பீராக! “பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே” என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 39:43,44) மிகைத்தவனும், ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிர எந்த உதவியும் இல்லை. (அல்குர்ஆன் 3:126)

18. மவ்லித் வரிகள்

اَنْتَ مُنْجِيْنَا مِنَ الْحُرَقِ مِنْ لَهِيْبِ النَّارِ وَاْلاَجَجِ

ذَنْبُنَا مَاحِيْ لَيْمَنَعُنَا مِنْ ذُرُوْفِ الدَّمَعِ وَالْعَجَجِ

நரக நெருப்பின் ஜவாலையினாலும் அதன் கடும் வெப்பத்தினாலும் கரிந்து போகாமல் எங்களை காப்பாற்றுவது தாங்களே ஆவீர்! எங்களின் பாவங்கள் அழிப்பவரே! தாங்கள் பாவங்களை அழிப்பது எங்களை கண்ணீர் வடிப்பதிலிருந்தும், கதறுவதிலிருந்தும் தடுத்துவிடும். நபியே! தங்களின் பரந்த மனப்பான்மையினால் கரிக்கும் நரக நெருப்பின் கொழுந்து விட்டெரியும் ஜவாலையை அணைத்து விடுங்கள். தங்களின் இரக்கத் தன்மையால் என் ஈரலின் வெப்பத்தைக் குளிரச் செய்யுங்கள்.

குர்ஆன் வரிகள்:

யாருக்கு எதிராக வேதனை பற்றிய கட்டளை உறுதியாகி விட்டதோ அவனா? (சொர்க்கம் செல்வான்?). நரகத்தில் உள்ளவனை நீர் விடுவிப்பீரா? (அல்குர்ஆன் 39:19)
“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)



என்றும் அன்புடன் துல்கர் இனயம்

ஆணின் உயிரணுவே ஆண்,பெண் குழந்தைக்கு காரணம் ~ பொக்கிஷம்புதிது

குர்ஆன் கூறும் கருவியல்: – தொடர்-1 ஆண் அல்லது பெண் குழந்தை – ஆணின் உயிரணுவே காரணம்
“இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் – (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு” (அல் குர்ஆன் 53:45-46)
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (அல் குர்ஆன் 75:37)
ஒரு பெண், கருத்தரிக்கும் போது அது ஆண் குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ ஆகுவதற்கு அவளுடைய கனவனின் உயிரணுவே காரணம்: மனைவி காரணமல்ல. என்ற தற்கால அறிவியல் ஆராய்ச்சியின் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே திருமறை வசனம் கூறியிருப்பது குர்ஆன் கூறும் அறிவியல் அற்புதங்களில் ஒன்றாகும். இது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
பொதுவாக பெண்ணின் சினை முட்டையில் X என்ற குரோமோசோம் மட்டுமே இருக்கும், ஆணின் விந்தணுவில் X அல்லது Y என்ற குரோமோசோம் இருக்கும் என்பதையும் X என்பது பெண்ணை உருவாக்கும் குரோமோசோம் என்றும் Y என்பது ஆணை உருவாக்கும் குரோமோசோம் என்றும் நாம் படித்திருக்கிறோம்.
இப்போது மேற்கண்ட குர்ஆன் ஆயத்துக்கள் இன்றைய அறிவியலுடன் எவ்வாறு ஒத்துப் போகின்றது என்பதைச் சற்று விளக்கமாகப் பாப்போம்.
X குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் X குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-X என்ற ஜோடியைக் கொண்ட செல் உருவாகி அதன் முலம் பெண் குழந்தையாக உருவாகின்றது. (X-X என்ற குரோமோசோம் ஜோடியைக் கொண்ட செல் பெண் குழந்தையை உருவாக்கும் தன்மையைக் கொண்டது)
X குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் Y குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-Y என்ற ஜோடியைக் கொண்ட செல் உருவாகி அதன் முலம் ஆண் குழந்தையாக உருவாகின்றது. (X-Y என்ற குரோமோசோம் ஜோடியைக் கொண்ட செல் ஆண் குழந்தையை உருவாக்கும் தன்மையைக் கொண்டது)
பெண்ணின் சினை முட்டை வெறும் X குரோமோசோமை மட்டுமே உடையதாக இருக்கிறது. ஆனால் பெண்ணின் கர்ப்பப் பையினுள் செலுத்தப்படும் விந்தணுக்களில் X குரோமோசோம்களைக் கொண்ட உயிரணுக்களும் Y குரோமோசோம்களைக் கொண்ட உயிரணுக்களும் கோடிக்கணக்கில் உள்ளன. ஆனால் ஆணின் ஒரே ஒரு உயிரணு மட்டுமே பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்து கருவாக வளர்கின்றது. பெண்ணின் சினை முட்டையுடன் சேரக் கூடிய ஆணின் உயிரணு X குரோமோசோம் உடையதாக இருந்தால் அது பெண் குழந்தையாகவும், பெண்ணின் சினை முட்டையுடன் சேரக் கூடிய ஆணின் உயிரணு Y குரோமோசோம் உடையதாக இருந்தால் அது ஆண் குழந்தையாகவும் உருவாகிறது.
பெண்ணின் சினை முட்டை X ஆக மட்டுமே இருக்கிறது. கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் உயிரணுக்கள் தாம் X ஆகவோ அல்லது Y ஆகவோ இருக்கிறது. அதாவது கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் உயிரணுக்களுக்களே சினை முட்டையுடன் சோந்து பெண் குழந்தையாகவோ அல்லது ஆண் குழந்தையாகவோ உருவாகின்றது.
இதை இப்படியும் புரிந்த்துக் கொள்ளலாம்.

  • பெண்ணின் சினை முட்டையுடன் – கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் X குரோமோசோம் உடைய உயிரணு சேர்ந்தால் பெண் குழந்தையாக உருவாகிறது.
  • பெண்ணின் சினை முட்டையுடன் – கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் Y குரோமோசோம் உடைய உயிரணு சேர்ந்தால் ஆண் குழந்தையாக உருவாகிறது.
மேற்கண்ட விளக்கங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் கர்ப்பக் கோளறையில் செலுத்தப்படும் ஆணின் இந்தியத் துளியே பெண் குழந்தையாகவோ அல்லது ஆண் குழந்தையாகவோ உருவாகுவதற்கு காரணமாக அமைகின்றது, பெண்ணின் சினை முட்டையல்ல. இன்னும் சற்று விளக்கமாக கூறுவதென்றால் ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என்ற ஜோடிகளை உருவாக்குவது பெண்ணின் கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் போதுள்ள இந்தியத் துளியைக் கொண்டே என்பது நன்கு புலப்படுகின்றது.
இப்போது மேற்கண்ட வசனங்களை ஒருமுறை படித்துப் பாருங்கள்.
“இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் – (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப்படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு” (அல் குர்ஆன் 53:45-46)
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (அல் குர்ஆன் 75:37)
20 ம் நூற்றாண்டின் இந்த அரிய கண்டுபிடிப்பை 7 ம் நூற்றாண்டிலேயே கூறிய அல்லாஹ்வின் திருமறையின் அறிவியல் அற்புதங்களை உலகிற்கு எடுத்துக்கூறுவது நமது கடமையன்றோ?
இன்றும் நம்மில் சிலர் தம் மனைவி பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுக்கிறாள், ஆண் குழந்தையே பெற்றெடுப்பதில்லை என்று குறை கூறுகிறாகள். குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ ஆகுவதற்கு தம்முடைய உயிரணுவே காரணம் என்பதை அறியாததே இதற்குக் காரணம். இவர்கள் பின் வரும் இறைவசனங்களைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளாகள்.
அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் 42:49-50)
நன்றி:  துல்கர் இனயம் 

ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்தது..!


1. பெண்கள் ஆண்களிடம் முதலில் எதிர்பார்பது மரியாதையைத்தான். மனைவி என்றால் தனக்கு அடிமைபோல சேவை செய்ய வந்தவள் என்ற எண்ணம் இன்றும் ஆண்கள் மத்தியில் நிலவுகிறது. பெண்களது கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
பல ஆண்கள் பெண்களின் உடல் அமைப்பை கிண்டல் செய்வதையும், அவர்களின் மாதவிடாய் பற்றி ஜோக் அடித்து சிரிபதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இவைகளை பெண்கள் அறவே விரும்புவதில்லை

2. சமயத்திற்கு ஏற்றபடி சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். சரியான வேளையில் சரியான வழிகளைச் சொல்லும் ஆண்களை பெண்கள் நெஞ்சில் சுமப்பார்கள். உதாரணமாக, மனைவி தன் கணவனிடம் கேட்கிறாள், நான் குண்டாக இருக்கிறேனா? என்று! அதற்கு ` என்னைவிட அழகாகவே இருக்கிறாய். இதற்காக  வருத்தபட வேண்டிய அவசியம் இல்லை. உன்னை நான் எப்போதும் நேசிக்கிறேன். உனக்கு உடல் பருமனாக இருப்பதாக தெரிந்தால் உடற்பயிற்சி செய் டார்லிங்’ என்று கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

3. பெண்ணுக்கான உரிமையை பெற்றுத் தருபவராக இல்லாவிட்டாலும் பெண்ணை பெண்ணாக நடத்தும் பெருந்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் செய்யும் அளவுக்கு பெண்களுக்கும் உடல்பலம் – மனோபலம் இருக்கிறது என்பதை புரிந்து நடந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

4. பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதில் ஆண்கள் கவனம் செலுத்து வதில்லை. சிறு பிரச்சினை என்றாலும் கூட, போர்க்களத்தில் நிற்பதுபோல கொந்தளிக்கிறார்கள். நாம் இருவரும் ஒருங்கிணைந்து வாழ்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் இஷ்டம் போல் பேசுகிறார்கள். அவர்கள் பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

5. பெண் மீது நம்பிக்கைத் தன்மை கொண்டவராக ஆண் இருக்க வேண்டும். அவள் தன் விருப்பத்திற்கு இணங்கவே பிறந்தவள் என்பதுபோல் நினைத்துக் கொண்டு, நினைத்த நேரத்தில் `இன்ப உலகம் செல்லலாம் வா’ என்று வற்புறுத்தி அழைக்கக்கூடாது என்றும் விரும்புகிறார்கள்.

6. பெண் என்றால் பொன் முட்டையிடும் வாத்து என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அவர்களின் தேவைக்காக நெருங்கி வருதல், வேண்டிய பணத்தை பெற்றுச் சென்று ஊதாரித்தனமாக செலவு செய்வது, மது அருந்துவது என்று இருக்கும் ஆண்களைக் கண்டு பெண்கள் எரிச்சல் அடைகிறார்கள். அத்துடன் தங்களை கைநீட்டி அடிக்கும் ஆண்களை அறவே வெறுக்கிறார்க ள்.

7. காதலிக்கும்போது `உன்னை பிடிக்கிறது, உன் சிரிப்பில் மயங்குகிறேன்’ என்று ஆண்கள் சொல்கிறார்கள். அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க பலவித முயற்சிகளை செய்கிறார்கள். ஆனால் மணவாழ்வுக்குள் நுழைந்துவிட்டால் அந்த நகைச்சுவை உணர்வை மறந்து விடுகிறார்கள். அதன்பிறகு அவள் சிரிப்பது ஆண்களுக்கு எரிச்சலைத் தூண்டுகிறது. வாழ்வில் எல்லாம் முடிந்து போனதாக எண்ணி சிடுசிடுபானவர்களாக மாறிவிடுகிறார்கள். அப்படி இல்லாமல் கலகலப்பாக இருக்கும் ஆண்களையும், பெண்களின் கலகலப்பான, இயல்பான உணர்வை ஏற்றுக்கொள்ளும் ஆண்களையும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

8. புத்திசாலி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். புத்திசாலித்தனம் என்றால் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் போட்டி போடும் அளவுக்கு சிறந்த அறிவாளியாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. குடும்பம், வாழ்வு பற்றிய தெளிவான எண்ணம் கொண்டவராகவும், குடும்ப முன்னேற்றம் குறித்த உள்ளுணர்வு கொண்டவராகவும், அதற்கான வழிகளை புரிந்து நடந்து கொள்பவராகவும் இருந்தாலே போதும்.
நீங்கள் அப்படித்தான் என்றால் உலகமே எதிர்த்தாலும் நீங்கள்தான் அவள் மனதை ஆளும் ராஜாவாக இருப்பீர்கள். எல்லையில்லா நேசம் காட்டுவார்கள் உங்கள் மீது!

இப்படிக்கு உங்கள் நண்பன் துல்கர் இனயம் 

கஞ்சத்தனமும் எச்சரிக்கையும்

அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு செல்வத்தை தந்திருப்பது அல்லாஹ் அவர்களுக்கு செய்த அருட்கொடையாகும். ஆனால் நம்மில் பலர் இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல்,தன்னுடைய உத்யோகத்தாலும், தனது திரமையினாலும் செல்வத்தை சம்பாதித்ததாக நினைக்கின்றனர். அதன் காரணமாக நல்வழிகளில் செலவு செய்யாமல் கஞ்சத்தனத்துடன் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட குணமுடையவர்களை அல்லாஹ் தனது திருமறையில் கடுமையாக கண்டிப்பதுடன் மட்டுமல்லாமல், நாளை மறுமையில் கடும் தன்டனையும் உண்டு என எச்சரிக்கின்றான்.

கஞ்சத்தனமும் எச்சரிக்கையும்


وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ هُوَ خَيْرًا لَّهُم ۖ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ ۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ ۗ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் கஞ்சத்தனதம் செய்கிறார்களோ, அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் – அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான். அவர்கள் கஞ்சத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும். வானங்கள், பூமி ஆகியவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான். (அல்குர்ஆன் ஆலு இம்ரான்3 :180)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ كَثِيرًا مِّنَ الْأَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ ۗ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ

இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன்,அத் தவ்பா, 9:34)
அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ‘(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக)கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். என்று கூறினார்கள்;. (ஹதீஸ் சுருக்கம்.புகாரி 7061)
மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்:
ஒரு மனிதனிடம் இன்னொருவர் வாங்கிய தொகையை தரவில்லை என்றால், எவ்வளவு கோபப்படுகிறான் அந்த மனிதன். ஆனால் அல்லாஹ்வின் அருட்கொடைகளை கணக்கின்றி பெற்றுக்கொண்ட நாம் அவன் ஏவல் விலக்கள்களை ஏற்று நடக்கின்றோமா என்றால் இல்லை. ஆதனால் தான் வல்ல ரஹ்மான் இப்படிப்பட்ட குணமுடையவர்களை நன்றி கெட்டவர்கள் என்றும், இந்தநன்றி கெட்டத் தனத்திர்க்கு அவனே சாட்சியாக இருக்கின்றான் என்றும் கூறுகின்றான்.

إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.

وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ

அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.

وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ

இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
(அல்குர்ஆன்,அல்ஆதியாத்100:6,7,8)
தனக்கே கேடு:
கஞ்சத்தனம் செய்வதால் நம்முடைய செல்வம்நம்முடனேயே இருக்கும் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அந்த செல்வமே தனக்கு கேடாக மறுமையில் நிற்கும் என்பதையும், பெரும் அழிவைத் தரும் என்பதையும், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருப்பது சத்தியத்தை புரக்கனிக்கும் செயல் என்பதையும் நாம் சிந்திப்பதில்லை.

هَا أَنتُمْ هَٰؤُلَاءِ تُدْعَوْنَ لِتُنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ فَمِنكُم مَّن يَبْخَلُ ۖ وَمَن يَبْخَلْ فَإِنَّمَا يَبْخَلُ عَن نَّفْسِهِ ۚ وَاللَّهُ الْغَنِيُّ وَأَنتُمُ الْفُقَرَاءُ ۚ وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُم

அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள். ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் – அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் – நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், நீங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தை அவன் பகரமாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். (அல்குர்ஆன், முஹம்மத்47:38)
நபி ஸல்லல்லாஹூஅலைஹிவசல்லம் கூறினார்கள்..
“கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும்பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும்போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது.”என அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவித்தார்கள்.(நூல் புகாரி 5299)
கஞ்சத்தனம் செய்ய தூண்டுபவருக்கும் கேடு:
நம்மில் சிலர் இருக்கின்றார்கள், தானதர்மம் செய்பவர்களையும் கண்டிப்பதுடன், இப்படியெல்லாம் செலவு செய்தால் வருமை நிலைக்கு வந்துவிடுவாய் என அச்சுருத்தி, ஏதோ நன்மையான காரியம் செய்துவிட்டது போல் திருப்திபட்டுக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட மனிதர்களுக்கும் நாளை மறுமையில் நரக வேதனையுண்டு என அல்லாஹ் வண்மையாக கண்டிக்கின்றான்.

الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُونَ مَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا

அத்தகையோர் கஞ்சத்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி,  அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள். அத்தகைய நன்றிகெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.   (அல்குர்ஆன், அந் நிஸா 4:37)

الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ ۗ وَمَن يَتَوَلَّ فَإِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ

எவர்கள் கஞ்சத்தனம்; செய்து கஞ்சத்தனம்; செய்யுமாறு மனிதர்களையும் ஏவுகிறார்களோ! எவர் (அல்லாஹ்வின் கட்டளைகளைப்) புறக்கணிக்கிறார்களோ!  – (இவர்களே நட்டவாளிகள்.) நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன் .    (அல்குர்ஆன், அல்ஹதீத்57:24)
திடீரென வரும் அல்லாஹ்வின் தன்டணை:
பொருளாதாரம் நிறைந்திருக்கக்கூடியவர்கள், உல்லாச வாழ்கையையும், சுகபோக வாழ்கையையும் அனுபவிப்பதை பார்த்து நம்மில் பலர் பெருமூச்சு விடுவதை பார்க்கின்றோம். அல்லாஹ்வின் போதனைகளை, கட்டலைகளை மறந்து வாழ்கின்ற இப்படிப்பட்டவர்களுக்குத்தான், அல்லாஹ் செல்வவத்தின் வாசலை திறந்து விடுவதாக கூறுகின்றான். ஆனால், இவர்களின் இந்த உல்லாச வாழ்கையும், செல்வமும் நிரந்தரமானது அல்ல. மாராக அல்லாஹ்வின் தன்டணையைதான் கொண்டுவரும்.

فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّىٰ إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُم بَغْتَةً فَإِذَا هُم مُّبْلِسُونَ

அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் – பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர் (அல்குர்ஆன்,அன்ஆம் 6:44)
மேலும் அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்…

الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ

(அத்தகையவன் செல்வமே சதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.

يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ

நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் காக்கும்) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்றும் அவன் எண்ணுகிறான்.

كَلَّا ۖ لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ

அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.

وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ

ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

نَارُ اللَّهِ الْمُوقَدَةُ

அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.

الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ

அது (உடலில் பட்டதும்) இருதயத்தில் பாயும்.
(அல்குர்ஆன்,ஸூரத்துல் ஹுமஜா 104: 2-7)
தயால குணம்:
ஜாபிர்(ரலி) கூறினார்கள்…நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுக்கவில்லை. மீண்டும் நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் எனக்குக் கொடுக்கவில்லை. பிறகு மூன்றாம் முறையாக நான் அவர்களிடம் சென்று, ‘உங்களிடம் நான் (முதல் முறையாகக்) கேட்டும் நீங்கள் எனக்குத் தரவில்லை. பிறகு மீண்டும் உங்களிடம் கேட்டேன். நீங்கள் எனக்குத் தரவில்லை. ஒன்று, நீங்கள் எனக்குத் தரவேண்டும்; இல்லையெனில், என்னிடம் நீங்கள் கஞ்சத்தனம்காட்டுவதாகப் பொருள்” என்று கூறினேன்.
அதற்கு அவர்கள், ‘நான் உங்களிடம் கஞ்சத்தனம்காட்டுகிறேன் என்றா சொன்னீர்கள்? நான் உங்களுக்குத் தராமலிருந்துவிட்ட ஒவ்வொரு முறையும் உங்களுக்குத் தர விரும்பிய நிலையில் தான் (இருந்தேன்; இருப்பினும் தவிர்க்க முடியாத காரணத்தாலேயே) அப்படிச் செய்தேன்” என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், ‘எனக்கு அபூ பக்ர்(ரலி) கைகள் நிறைய ஒரு முறை அள்ளித் தந்துவிட்டு, ‘இதை எண்ணிக் கொள்’ என்று கூறினார்கள். நான் (எண்ணிப் பார்த்த போது) அது ஐந்நூறு(திர்ஹம்) இருக்கக் கண்டேன். அபூ பக்ர்(ரலி), ‘இது போன்றதை இரண்டு முறை எடுத்துக் கொள்’ என்றார்கள்” என்று ஜாபிர்(ரலி) கூறினார்கள். அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு முன்கதிர்(ரஹ்)அவர்கள், ‘கருமித் தனத்தை விட மோசமான நோய் உண்டா?’ என்றார்கள்.
கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்பு தேடல்:
நபி(ஸல்)அவர்கள்.. கூறியதாக அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்… நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம், ‘உங்கள் சிறுவர்களில் ஒரு சிறுவனை எனக்குப் பணிவிடை புரிவதற்காகத் தேடுங்கள்;… நான் கைபருக்குப் புறப்பட வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள். எனவே, அபூ தல்ஹா(ரலி) என்னை (தம் வாகனத்தில்) பின்னால் அமர வைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். அப்போது நான் பருவ வயதை நெருங்கி விட்டிருந்த சிறுவனாக இருந்தேன். இறைத்தூதர்(ஸல்)அவர்கள் எங்கேனும் தங்கினால் அவர்களுக்கு நான் பணிவிடைகள் புரிந்து வந்தேன்.
அப்போது அவர்கள், ‘இறைவா! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத் தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று பிரார்த்திப்பதை அதிகமாகச் செவியுற்று வந்தேன்.    (நூல் புகாரி 2893)
“(இறைவா!) நான் உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், மண்ணறையின் (கப்ரின்) வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும், வாழ்வு மற்றும் மரண வேளையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்து வந்தார்கள். (நூல் புகாரி 4707)
அல்லாஹ் கஞ்சத்தனத்திலிருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக
ஆமீன்
இப்படிக்கு உங்கள் அன்புள்ள நண்பன் துல்கர் இனயம்.