உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்! :::)))



ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய பாதுகாப்பை தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு,மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.

நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும்.

நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான். உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும்.

பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று கடந்த டிசம்பர் 2010ல் புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. எழுத்துக்களில் abc யும், எண்களில்123456ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாகபயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.

மேலும் இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள் (Special Symbols) கலந்து அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு?

இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள், உங்கள் பாஸ்வேர்ட் எத்தகையது என்பதை முடிவு செய்யுங்கள்.


6 எழுத்துக்கள்

:

சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 10 நிமிடங்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 10மணி நேரம்+ எண்கள், குறியீடுகள் (Num & Symbols) : 18 நாட்கள்



7 எழுத்துக்கள்சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம்+ பெரிய எழுத்துடன்(Upper Case) : 23 நாட்கள்+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்

8 எழுத்துக்கள்சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள்+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்

9 எழுத்துக்கள்சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மாதங்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள்+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள்


நன்றி : துல்கர் இனயம் 



சமுதாயத்தில் நடைபெறும் மூட பழக்கவழக்கங்கள்



நமது சமுதாயத்தில் நடைபெறும் திருமணம், மரணம், புது வீடு புது வீடு மனை முகூர்த்தம், மற்றும் குடிபுகுதல், போன்ற நிகழ்ச்சிகளில் கடைபிடிக்கப்படுகின்ற சடங்கு சம்பிரதாயங்கள் காலங்காலமாக நடைபெற்று வருகிறது.! மேலும் நமது குடும்பத்தில் உள்ளவர்களாலும் இது பின்பற்றப்பட்டு வருகின்ற சூழலில் நாம் அவற்றை விட்டு எவ்வாறு தவிர்ந்துக் கொள்ள முடியும்? அந்த நிகழ்ச்சிகளை நாம் தவிர்த்தால் நம்மை அவர்கள் தவறாக நினைத்துவிடுவார்களே! என்ற பலவிதமான சிந்தனைகள் சமூகத்தில் நிலவுகிறது.

திருமணத்தின் போது
1.பாக்கு, வெற்றிலை, தேங்காய், மஞ்சள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றைக் கண்ணியப்படுத்தி ஒவ்வொரு திருமண சடங்குகளிலும் அவற்றை முன்னிலைப்படுத்துவது.
2.மாற்று மதத்தவர்களின் பழக்கமான ‘தாலி கட்டுதல்’. திருமணத்தின் போது இந்த தாலியை மணமகன் வீட்டிலிருந்து மணமகள் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்ற போது குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு மாற்றமான எண்ணிலடங்கா சகுனங்களை பார்ப்பது.
3.மணமகன் முதன் முறையாக மணப்பெண் வீட்டிற்கு செல்லும் போது நடைபெறுகின்ற அநாச்சாரங்கள். உதாரணங்கள் : ஆட்டுத்தலை, மஞ்சள் தண்ணீர், மிளகாய் போன்றவற்றை வைத்து ஆரத்தி எடுத்தல்.

மரணத்தின் போது
1.சனிக்கிழமையன்று இறந்துவிட்டால் ‘சனி போனால் தனியாக போகாது’ என்று அந்த ஜனாஸாவுடன் கோழி போன்றவற்றை அனுப்புவது.
2.நன்மை சேர்க்கிறோம் என்ற பெயரில் ஆடல், பாடலுடன் கூடிய ஹல்கா, ராத்தீபு போன்ற ஷிர்க் நிறைந்த செயல்களை செய்வது.
3.மாற்று மதத்தவர்கள் இறந்தவரின் 8, 16 ஆம் நாள் செய்கின்ற திவசங்களைப் போல் பித்அத்தான 3, 7, 40 ஆம் நாள் ஃபாத்திஹா ஓதுதல்.

புது வீடு கட்டும் போதும் குடிபுகும் போதும்
1.புது மனை முகூர்த்தம் என்ற பெயரில் மாற்றுமதத்தவர்களின் பூஜை புனஸ்காரங்களை தம் வீட்டு மனையில் செய்வது
2.புதிய வீடு கட்டி முடித்தவுடன் வீட்டில் இருக்கும் துஷ்ட தேவைகளை, ஜின்களை விரட்டுவதற்காக அவற்றுக்கு ஆடு, மாடு அல்லது கோழி போன்றவற்றை காவு கொடுத்து அதன் இரத்தத்தை வீட்டில் தெளிப்பது.

இது போன்ற ஏராளமான மூட நம்பிக்கைகளுடன் கூடிய சடங்கு சம்பிரதாயங்கள் அல்-குர்ஆன் மற்றும் ஆதாரமான ஹீஸ்களின் போதனைகளுக்கு முற்றிலும் எதிரான செயல்களாகையால் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டுள்ள முஃமின் இவற்றிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும்.

ஷிர்க் மற்றும் பித்அத் நிறைந்த இச்செயல்களைச் செய்யக் கூடியவர்கள் நெருக்கமான உறவினர்களாக இருந்தாலும், பெற்றோர்கள், சகோதர சகோதரிகளாக இருந்தாலும் அதில் நாம் பங்குபெறுவது என்பது நாமும் அத்தகைய மாபாதக செயல்களைச் செய்வதற்கு உடந்தையாக இருந்தவர் போலாவோம். (அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாகவும்).

இதுதான் சத்தியம் என்று தெரிந்த பிறகும் உறவினர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்களே என்று அவர்களுக்கு பயந்து நாம் அந்த மூடத்தனமான செயல்களில் கலந்துக் கொண்டால் இறைவனின் கட்டளைகளை விட மக்களின் கவுரவத்திற்கு முன்னுரிமை கொடுத்த குற்றம் சேரும். அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாகவும். சுவனதென்றல்.

ஸியாரத்.....


கேள்வி : மக்காவுக்கு ஹஜ் உம்ரா செய்யச் செல்லும் போது, மதீனா ஜியாரத் செய்வது அவசியமா? (இக்பால் - ரஹீமா, சவூதி அரேபியா)

ஹஜ் உம்ராவுக்குறிய செயல்கள் அத்தனையும் மக்கா மற்றும் மக்காவைச் சுற்றியுள்ள இடங்களுக்குள்ளேயே முடிந்து விடும். ஹஜ் உம்ராவுக்காக மதீனா செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஹஜ் உம்ராவுக்காக மக்கா செல்லக் கூடியவர்கள் பொதுவாக மதீனாவுக்கும் செல்வதினால் தான் அங்கே செல்வதும் ஹஜ் உம்ராவைச் சேர்ந்த செயலோ என்று எண்ணி விட்டீர்கள். ஹஜ் உம்ராவுக்கும் மதீனாவுக்கும் எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லை.

ஆனால் மக்காவுக்கு செல்லக்கூடியவர்கள் மதீனாவுக்கும் செல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலாவதாக,

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுன்னபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (எந்தப் பள்ளிக்கும்) பயணம் மேற்கொள்ளக் கூடாது.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புஹாரி - எண் 1189)

இந்த ஹதீஸின் படி மற்ற இரு பள்ளிகளைப் போன்று மஸ்ஜிதுன்னபவி (மதீனா பள்ளி) க்கு ஜியாரத் செய்யலாம் என்று தெரிகிறது.

இரண்டாவதாக,

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜித் ஹராம் மற்றும் எனது பள்ளி (மதீனா பள்ளி) யில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புஹாரி - எண் 1190)

அதிகமான நன்மைகளைப் பெற அங்கே சென்று தொழலாம் என்று தெரிகிறது.

மூன்றாவதாக,

பல ஆயிரங்களை செலவு செய்து மக்கா வரை சென்ற பிறகு மதீனா சென்று தொழுது விட்டு வருவோமே என்று மக்கள் நினைப்பதும் ஒரு காரணம்.

இந்த இடத்தில் ஒரு எச்சரிக்கையையும் விடுவது எம் மீது கடமை.

மதீனாவிற்கு செல்லக் கூடியவர்கள் மதீனாவில் அடங்கியுள்ள நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் செல்கிறார்கள். இது தவறாகும். மேலே சுட்டிக் காட்டிய ஹதீஸ்களே இக்கருத்துக்கு போதுமான சான்றாகும். மதீனாவில் தொழுவதையே நோக்கமாக கொண்டு அங்கே சென்ற பிறகு நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்தால் தவறாகாது. அவரவர்களின் எண்ணங்களுக்கேற்ப கூலி கொடுக்கப்படுவார்கள் இன்ஷா அல்லாஹ்.

நம் ஊர் மையவாடிக்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறைப்படி ஜியாரத் செய்தால் என்ன நன்மை கிடைக்குமோ அதே நன்மை தான் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்யும் போதும் கிடைக்கப் போகிறது. நமது உயிரினும் இனிய நபி (ஸல்) அவர்களின் கப்ரு என்பதற்காக அதிகமான நன்மை ஏதும் கிடைக்கப் போவதில்லை. கிடைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அங்கே செல்லக்கூடியவர்களில் ஒரு சிலர் அல்லது ஒரு பிரிவினர் தவறான புரிதலின் காரணமாக நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தராத, இஸ்லாத்திற்கு முரணான காரியங்களைச் செய்கிறார்கள், அப்போது அவர்களெல்லாம் செய்கிறார்களே! நாமும் செய்தால் என்ன என்று எண்ணி, செய்யத்துணிந்து விடுகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை தான். இருந்தாலும் அல்லாஹ்வுக்கு சமமாக அல்லது அல்லாஹ்வின் பிரத்தியேக பண்புகளுக்கு சமமாக எந்தச் சந்தர்ப்பத்திலும் நபி (ஸல்) அவர்களை ஆக்கிவிடக் கூடாது. இதை நபி (ஸல்) அவர்கள் கூட வெறுத்தார்கள்.

'யூத கிருத்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக, அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக மாற்றிவிட்டார்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அபூதாவூத் - எண் 3221)

'எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள்! உங்களது வீடுகளையும் கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள்! நீங்கள் எங்கிருந்த போதிலும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் ஸலவாத்து எனக்கு எத்தி வைக்கப்படுகிறது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : அபூதாவூத் - எண் 2037, அஹ்மத்)

வேறொரு ஹதீஸில் நாம் நபி (ஸல்) அவர்களுக்கு சொல்லும் ஸலாம் கூட அவர்களுக்கு எத்தி வைக்கப்படுகிறது. நம் ஸலாத்தை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக வானவர்கள் கூட நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

ஸலவாத்தும் ஸலாமும் எங்கிருந்து கொண்டும் நபி (ஸல்) அவர்களுக்கு சொல்ல முடியும் என்பது இதிலிருந்து தெரிகிறது.

மேற்கண்ட ஹதீஸிலிருந்து நபி (ஸல்) அவர்களின் கப்ரை பிரத்தியேகமாக ஜியாரத் செய்வதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. மாறாக நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை தான் நமக்காக காத்திருக்கிறது.

நபி (ஸல்) அவர்களின் கப்ரை நோக்கி கையேந்துவது, கப்ரை நோக்கித் தொழுவது, கப்ருக்கு அருகில் இருந்து கொண்டு யாசீன் ஓதுவது, பாத்திஹா ஓதுவது, முண்டியடித்துக் கொண்டு கப்ரை பார்க்க செல்வது போன்ற செயல்களிலிருந்து தவ்ஹீதை புரிந்து கொண்டவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.