இங்கு பதித்திருப்பது நம்மை வியக்கவைப்பதற்கான புகைப்படத்தை அல்ல !! நம் நெஞ்சை புகைக்க வைப்பதற்கான நிஜத்தின் நிகழ்படத்தை !!




இங்கு பதித்திருப்பது
நம்மை வியக்கவைப்பதற்கான
புகைப்படத்தை அ
ல்ல !!
நம் நெஞ்சை
புகைக்க வைப்பதற்கான
நிஜத்தின் நிகழ்படத்தை !!

தாயின் மடியிலே கிடக்க வேண்டிய
பச்சிளம் பிள்ளை
இன்று தார் ரோட்டின் நடுவிலே !!

மிருகங்கள் கூட யோசிக்குமே ?
யார் காரணம்
இந்த கொடூரச்செயலுக்கு...

அறியவில்லை !
தெரியவில்லை !!
புரியவுமில்லை !!!

கயவர்களின் ஈனச்செயலுக்கு
காரணம் எது?

வறுமையின் கொடுமையா?
கள்ளதொடர்பினால் ஏற்பட்ட களங்கமா?
அல்லது
ஒரு பெண்மணியின் வயிற்றிலே
நீயும் ஒரு பெண்ணாக கருவுற்றதா?

இருக்காது ! இருக்காது !!
நிச்சயமாக இருக்காது !!!
இந்த ஈனச்செயலை
நிச்சயம் ஒரு தாயால் செய்ய இயலாது !!

பிஞ்சின் உடலில் தெரிகின்ற
கோரத்தின் நிலயைக்கண்டுமா தெரியவில்லை ?!
இது நிச்சயம்
இனவெறியின் உச்சகட்டம் என்று !!

பிஞ்சை கூட விட்டு வைக்கவில்லை
இந்த நஞ்சு மனம் !!

எதற்காக இந்த இனவெறி
ஏன் இந்த கொலைவெறி

புரியவில்லையே !!!!

புரிந்தால் மட்டும்
திருந்தி விடுமா இந்த மனித சமூகம் ?

வெட்கப்படுங்கள் !!!
இந்த விஷயத்தில்
மிருகங்கள் நம்மை மிகைத்துவிட்டன !!

இந்த கொடூரச்செயலுக்கு
எது காரணமாக இருந்தாலும்
யார் காரணமாக இருந்தாலும்
அவர்கள் இதற்கான பதில் சொல்லவேண்டிய
காலம் வரும் !

பச்சிளம் பிள்ளையே !
உன்னை இந்த இழிநிலைக்கு தள்ளியவர்களை
நீ இப்பொழுது அறியாதிருந்தாலும்,
நாளை அவர்களை கண்டுக்கொள்வாய்
மறுமை நாளிலே !!

அந்த ஈனப்பிறவிகள்
உன் முன்னே நிறுத்தப்படுவர் !
இதை விட இழிந்த நிலையிலே
அவர்கள் இருப்பதை நீ காண்பாய் !!
இன்'ஷா அல்லாஹ்...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..!!!

"காதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக் - மனைவியைக் கொன்ற வாலிபரின் அதிர்ச்சி கடிதம்!



"காதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக் - மனைவியைக் கொன்ற வாலிபரின் அதிர்ச்சி கடிதம்!

தன் காதல் மனைவி கலாச்சார சீரழிவில் சிக்கி தனக்குத் துரோகம் செய்த விவரங்களை, மனைவியைக் கொன்ற வாலிபர் மகேஷ்குமார் தற்கொலை செய்யும் முன்னர் காவல்துறைக்கு விவரமாக எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

கேரளாவிலுள்ள மூணாறு விடுதி ஒன்றில் சமீபத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அவ்விடுதியில் அறை எடுத்திருந்த அவளுடைய கணவனே கொலை செய்து விட்டுத் தலைமறைவானதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் மகேஷ் குமாரைக் காவல்துறையினர் தேடி வந்த நிலையில், மகேஷ் குமார் நேற்று காலை அவருடைய சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பட்டிமணியக்காரன் பாளையத்தில் தன் வீட்டின் அருகிலுள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்னர் மகேஷ்குமார் காவல்துறையினருக்குத் தன் மனைவியினைக் கொலை செய்வதற்கான காரணத்தை விவரித்து உருக்கமான கடிதம் ஒன்று எழுதி உள்ளார். முழுமையாக ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யப்பட்டிருந்த அந்தக் கடிதத்தைக் காவல்துறையினர் வெளியிட்ட்டுள்ளனர்.

அக்கடிதத்தில் மகேஷ்குமார் எழுதியுள்ள விவரம் வருமாறு:

"மதிப்புக்குரிய காவல்துறையினருக்கு,

எனக்குத் தெரியும், என்னை நீங்கள் குறிவைத்து தேடி வருகிறீர்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆம் நான்தான் இதைச் செய்தேன். வேறு நான் என்ன செய்ய?...

படித்த பெண்கள் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் முழுமையாக வெளிநாட்டு கலாசாரத்துக்குத் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். வெளிநாட்டுக்காக உழைக்கும் அவர்கள், எதையும் தவறாக நினைப்பது இல்லை. எல்லாமே வெறும் இன்பத்துக்கானதுதான் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு நெருக்கமான, உண்மையான, உணர்வுப்பூர்வமான உறவுகள் தேவையில்லை. அவர்களுக்குக் கலாச்சாரம், கணவர், சமூகம், குடும்பம் பற்றிய கவலையே கிடையாது.

படிப்பும், பணமும், கொஞ்சம் அழகும் இருந்தால் போதும், எதுவும் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. அப்படி அவர்கள் செல்லும் பாதையில் ஏதேனும் பிரச்சினைகள் வந்து விட்டால் `சாரி' என்கிற ஒற்றை வரியில் பிரச்சினைக்குரிய நபரைச் சரி செய்துகொள்கிறார்கள். அப்படியும் அவர்கள் சமாதானம் அடையவில்லை என்றால், கவலைப்படாமல் ஆட்களை மாற்றிக்கொள்கிறார்கள்.

சூழ்நிலைக்கு ஏற்ப நடிப்பது எப்படி என்பது அவர்களுக்குத் தெரியும்

எல்லா வாக்குறுதிகளையும் மறந்துவிட்டு காதல், நிகழ்வுகள், மறக்க முடியாத நினைவுகள், கவனிப்பு இவை எதுவுமே அவர்களின் மனதில் நிலைப்பதில்லை. எதையும் மிக சுலபமாக மறந்து விட்டு புது வாழ்வை எளிதாக, குறுகிய காலத்திலேயே தொடங்கி விடுவார்கள். அவர்களால் முடியும். அவள் செய்தாள்...

சரி... மீண்டும் அவளை நான் அடைந்த பிறகு, அவளை எச்சரித்தேன். அழுது, கெஞ்சி அவளிடம் வேண்டிப்பார்த்தேன். எந்தப் பிரயோசனமும் இல்லை. நான் அவளுக்கு 2 முறை வாய்ப்பு கொடுத்தேன். நான் அவளை மன்னித்து என்னோடு வாழ மீண்டும் அனுமதித்தேன். அவளுடைய மாமா மற்றும் வீட்டு உரிமையாளருக்கு இது தெரியும். (ஏனென்றால் அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் அவளுக்காக மட்டுமே வாழ்ந்தேன்).

ஆனால் அவள் மீண்டும் என்னுடைய மன்னிப்பைத் தவறாக பயன்படுத்தத் தொடங்கினாள். ஆகவே நான் விவாகரத்து பெற விரும்பி மனு செய்தேன். அவள் அதைப் புரிந்து கொண்டுத் தெளிவான மனநிலையில் என்னோடு திரும்பி வருவாள் என்று நினைத்தேன்.

எப்படி இருந்தாலும் இந்தக் காதல் கதையின் கடைசி கட்டத்துக்கு வந்தாகி விட்டது. என்னுடைய வாழ்க்கை பயணம் கடைசி கட்டத்துக்குப் பயணித்தது அது ஏற்கனவே முடிந்து விட்டது. எப்போது அவள் வழி தவறினாளோ அப்போதே வாழ்க்கை முடிந்து விட்டது).

தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவளுக்கு எந்தக் குறையும் வைக்காமல் சந்தோஷமாக இருக்க விரும்பினேன். அந்தக் காரணத்தால்தான் மீண்டும் ஒருமுறை தேனிலவுக்காக அழைத்துச்சென்றேன். நான் அனைத்து வகையிலும் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தேன்.

என்னுடைய திட்டம் நான் தற்கொலை செய்து கொள்வது மட்டும்தான். அவள் அவளுடைய வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து அனுபவிக்கட்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால்...

இறுதியாக நான் அவளிடம் பிச்சைக்காரனைப் போல மண்டியிட்டு வேண்டினேன். அவள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

ஒரு தாய் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கும்போது, அவளுடைய குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொள்வது போல... நானும் என் குழந்தையாக கருதிய அவளைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்ய முடிவு செய்தேன்.

ஆனால், அதையும் ஒருநாள் தள்ளிப்போட்டேன். ஏனென்றால் அவளுடன் தொடர்பு வைத்து இருந்த 3 வாலிபர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டேன். முயற்சியும் செய்தேன்.

ஷாம்(ஷமிலா)வுக்காக நான் எதையும் செய்ய துணிந்தேன். நான் எடுத்த இந்த முடிவுக்காக கடவுளாலோ, அரசாங்கத்தாலோ பழிக்குப்பழி தீர்க்கப்படும்.

என் அருமை ஷாம்!

இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அல்லது நான் தவறான தகவல்கள் தருகிறேன் என்றால், தயவுசெய்து கடந்த 6 மாதங்களாக ஷமிலாவின் மொபைல் பில்லைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். திருமணமான ஒரு பெண், அதிகாலை 3 மணி வரை எப்படி பேசியிருக்கிறாள், 'சாட்டிங்' செய்து இருக்கிறாள் என்று...

தயை கூர்ந்து சமூகத்துக்குத் தொல்லை கொடுக்கும் இது போன்றவர்களையும் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். (இந்திய சட்டப்படி யார் கொலை செய்ய காரணமாக இருக்கிறார்களோ அவர்களையும் கைது செய்ய வேண்டும்...)

எங்கள் வாழ்வில் நுழைந்த முக்கிய குற்றவாளி தினமும் காலை 9.10 மணி முதல் நான் திரும்பி வரும் வரை அவன்தான் அவளுடன் வசித்து வந்தான்.

2-வது ஒருவன், அவனுடன் கடந்த ஜுலை 20 மற்றும் 21-ந் தேதிகளில் தங்கி இருந்தாள். அவனுடன் ஒரே அறையில் தங்கி இருக்கும் மேலும் ஒருவனும் அவளைப் பங்கிட்டுகொண்டார்கள்.

4-வதாக பேஸ் புக் இணையதளம் மூலம் அறிமுகமானவன், எந்த நேரம் என்று பார்க்காமல் மெசேஜ் அனுப்புவது, பேசுவது என்று தொடர்ந்து வந்தான். குறிப்பாக அதிக அளவில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்தான்.

இதுபோல் பேஸ் புக் இணையதளம் மூலம் அறிமுகமான மற்றொருவனும் நள்ளிரவு நேரங்களில் தொடர்ந்து பேசுவதும், மெசேஜ் அனுப்புவதுமாக இருந்தான்.

6-வது முக்கிய நபர் மதுரையைச் சேர்ந்தவன். இவன்தான் மனதை மயக்கி அவளை, அவனுடைய மற்ற மீடியா நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ள அறிமுகப்படுத்திவைத்தான்.

கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி பகல் 12.45 மணிக்கு 3 பேர் அவளை ஒரு காரில் அழைத்துச்சென்று ஓட்டலில் 6 மணி நேரத்துக்கும் மேலாக தங்கி இருந்தார்கள்.

(அவர்கள் காரில் அழைத்துச்சென்ற நேரம் நான் குறுக்கே புகுந்து காரைத் தடுத்தேன். அவர்கள் 3 பேரும் என்னைப் பிடித்து வீதியில் தள்ளினார்கள். அப்போது ஷமிலா "என்னிடம் நீ போ, என்னுடன் வராதே" என்று விரட்டினாள். அவள் சென்ற 6 மணி நேரமும், அவளுடைய மொபைல் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது).

டி.வி. நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடிகராக இருப்பவன் தினமும் இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை போனில் பேசுவதும், மெசேஜ் அனுப்புவதுமாக இருப்பான். இவனுடைய தொடர்பு கடந்த 30-ந் தேதிவரை ஷமிலாவுடன் இருந்தது. ஷமிலா என்னிடம் திருந்தி விட்டதாக கூறினாள். அவளுடைய வாழ்க்கையையும், என்னுடைய ஆழமான நம்பிக்கையையும் புரிந்துகொண்டதாக கூறினாள். நான் குறிப்பிட்ட இந்த நபர்களிடம் பேசமாட்டேன்... இனிமேல் இதுபோன்ற செயலைச் செய்ய மாட்டேன் என்று என்னிடம் கூறி இருந்தாள். அவை எல்லாம் நாடகம் என்பதும், என்னை முட்டாளாக்க அவள் நடத்திய நாடகம் என்பதையும் செப்டம்பர் 18-ந் தேதி அவள் அவர்களுடன் தங்கியபோது புரிந்துகொண்டேன்.

8-வதாக ஒருவன். இவன் அந்த டி.வி. நடிகரின் நண்பன். இவனும் அந்த செப்டம்பர் 18-ந் தேதி பார்ட்டியில் அவளைப் பகிர்ந்து கொண்டவன். இவனும் ஷமிலாவை மிகவும் கவர்ந்து, நள்ளிரவில் போன் பேசியும், மெசேஜ் அனுப்பியும் வந்தான்.

9-வதாக ஒருவன் ஒரு பகுதிநேர வேலை தொடர்பாக அவளை அணுகி, அந்த நாள் முதல் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி குறுகிய காலத்தில் நட்பை வளர்த்துக்கொண்டவன். இதுபோலவே 10-வதாக ஒருவனும் ஷமிலாவுடன் தொடர்பு வைத்திருந்தான். இவர்கள் தவிர ஏராளமான எண்களில் இருந்து நள்ளிரவு மெசேஜ் மற்றும் போன் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும்.

நன்றி, மன்னிப்புடன்..."

மேற்கண்டவாறு எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில், தன் மனைவி ஷமிலாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக 10 பேரின் பெயர், அவர்களது முகவரி, செல்போன் எண் ஆகியவற்றையும் மகேஷ்குமார் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்தக் கடிதத்தின் அடிப்படையிலும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ள பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அடிப்படையிலும் காவல்துறையினர் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

உங்கள் வெப்காம் ஜாக்கிரதை !!!!


உங்கள் வெப்காம் ஜாக்கிரதை !!!!

எச்சரிக்கை !!!!!





இந்த ரகசிய கேமராக்கள் பெரும்பாலும் முகம் பார்க்கும் கண்ணாடி பின்னாடி கூட மறைத்து வைக்கப்படுகிறது ஏனென்றால் அந்த இடம் தான் யாருக்கும் அவ்வுளவு சீக்கிரமாக சந்தேகம் வராத இடம் . இது எங்கு எல்லாம் நடக்கிறது என்று பார்த்தால் முன்பு சொன்னது போல பெரிய ஷொப்பிங் மால்களில் உள்ள பாத் ரூம்களில் , முக்கியமாக பெரிய துணிக்கடைகளில் பெண்கள் உடை மாற்றி சரி பார்க்கும் அறைகள் ( Trail Rooms ), பெரிய ஹோட்டல் ரூம்களில் உள்ள கண்ணாடிகள் மற்றும் ஹோட்டல் ரூம்களில் உள்ள குளியல் அறைகளில் உள்ள பெரிய கண்ணாடிகளின் பின்னால் வைக்க சாத்தியங்கள் அதிகம் . அதனால் பெண்கள் இனிமே கண்ணாடி முன்பு நின்று கொண்டு அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். முடிந்த வரை நிர்வாணம் ஆகாமல் தவிர்க்கவும்.

இது போன்று ஹோட்டல் அறைகளில் வைக்கப்படும் கண்ணாடிகளை நீங்கள் சினிமாக்களில் கூட பார்த்து இருக்கலாம் . "பில்லா 2007" படம் அனைவரும் பார்த்து இருக்கலாம் அதில் ஒரு காட்சி வரும் பில்லா அஜித்தை கைது செய்து மலேசியா போலீஸ்சார், விசாரிக்க ஒரு தனி அறையில் உட்கார வைத்து இருப்பார்கள் அப்போது அந்த அறைக்குள் இரண்டு போலீஸ் ஆபீஸ் மட்டும் இருப்பார்கள் அந்த அறையின் ஒரு சுவற்றில் ஒரு பெரிய கண்ணாடி இருக்கும் , அந்த கண்ணாடி அறைக்குள் இருந்து பார்க்கும் போது முகம் பார்க்கும் கண்ணாடி போல இருக்கும் ஆனால் அந்த கண்ணாடிக்கு பின்னால் இருந்து ஒரு குழு விசாரணையை கவனித்து கொண்டும், பதிவு செய்தது கொண்டும் இருக்கும்.

இந்த வகை கண்ணாடிகள்தான் இந்த ரகசிய கேமராக்கள் வைப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். இப்போது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் . நீங்க எந்த கவலையும் இல்லாமல் ஹோட்டல் பாத் ரூமில் ஒய்யாரமாக நிர்வாணமாக குளித்து கொண்டு இருக்கும் போது அந்த பாத் ரூமில் உள்ள பெரிய கண்ணாடிக்கு பின்னால் யாராவது சாவகாசமாக நாற்காலி போட்டு உட்கார்ந்தது ரசித்து கொண்டு கூட இருக்கலாம், கேமராவில் வீடியோவாக பதிவு செய்தது கொண்டு இருக்கலாம் ஜாக்கிரதை.

இந்த வகை கண்ணாடிகளுக்கு பொதுவான பெயர் Reflecting Glasses இதில் double reflecting , strong reflecting அப்படியென்று நிறைய வகை உண்டு. அதனால் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் Mirror க்கும் , Reflecting Glasses க்கும் உள்ள வித்தியாசத்தை.
சரி இந்த வகை தில்லாலங்கடி கண்ணாடிகளை எப்படி கண்டு பிடிப்பது?

Reflecting Glass -சை கண்டுபிடிக்க எளிய வழி முறைகள் :

1. ஹோட்டல் அறைகளில் அல்லது உடை மாற்றும் அறைகளில் உள்ள கண்ணாடி மேல் உங்கள் ஆள் காட்டி விரலை வையுங்க இப்போது உங்க ஆள்காட்டி விரலின் நுனிக்கும் , கண்ணாடியில் தெரியும் பிம்பம் ஆள்காட்டி விரலின் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்கும் நுண்ணிப்பாக கவனிக்கவும் கண்டிப்பாக இடைவெளி சிறிய அளவில் இருக்கும் . அப்படி இருந்தால் அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி . உங்களுக்கு சந்தேகம் என்றால் உங்க வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியில் செய்து பாருங்கள். ஆனால் இந்த Reflecting Glass வகை கண்ணாடிகளில் உங்கள் ஆள் காட்டி விரலை வைத்தால் இது போன்று உங்கள் ஆள் காட்டி விரலுக்கும் , பிம்பமாக தெரியும் ஆள்காட்டி விரலுக்கும் இடைவெளி இருக்காது.
அதனால் இது போன்று சூழ்நிலைகளில் உங்கள் கை பையில் எப்பவும் ஒரு சிறிய முகம் பார்க்கும் வைத்து கொள்ளவும் . உங்கள் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியையும் , உங்கள் ஹோட்டல் அறைகளில் இருக்கும் கண்ணாடி இரண்டையும் இது போல் ஆள் காட்டி விரல் வைத்து சோதித்து பாருங்கள் உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியும்.

2. உங்கள் கைப்பையில் எப்பவும் ஒரு சிறிய டார்ச் லைட் வைத்து கொள்ளுங்கள் இது போன்று கண்ணாடிகளில் டார்ச் லைட் அடித்து பார்த்தல் அதில் ஒளி ஊடுருவுகிறதா என்று பாருங்க. ஒளி ஊடுருவினால் அது Reflecting Glass , இல்லை என்றால் அது முகம் பார்க்கும் கண்ணாடி.

3. இது ரொம்ப எளிய முறை , இது ரொம்ப சிம்பிள் உங்கள் முகத்தில் இரண்டு பக்கமும் குதிரைக்கு கடிவாளம் போல உங்கள் கைகளை வைத்து கொண்டு நீங்கள் சந்தேகம்ப்படும் கண்ணாடியில் முகத்தை வைத்து பார்த்தால் கண்ணாடிக்கு பின்னால் ஏதும் தெரிகிறதா என்று பாருங்கள். சூரிய ஒளியை குறைக்க கார் கண்ணாடிகளில் கருப்பு கண்ணாடிகள் பொருத்தி இருப்போம் இல்லையா அதில் நாம் சில நேரம் முகத்தை மிக அருகில் வைத்து பார்ப்போம் இல்லையா கார்க்குள் என்ன இருக்கிறதென்று அது போல கை வைத்து பாருங்கள். கண்டிப்பாக வித்தியாசத்தை பார்க்கலாம்.

சரி இது வரை பார்த்தது எல்லாம் மற்றவர்கள் நம்மை ரகசியமா படம் பிடிப்பதை பற்றி . ஆனால் இன்றைய நிலைமையில் இணையதளத்தில் பார்த்தீர்கள் என்றால் சிலர் அவர்களே சொந்தமாக எடுத்த அந்தரங்க புகைப்படமோ , வீடியோவோ அப்பட்டமாக வெளியிடப்படுகிறது. அதற்க்கு பெயர் Scandal videos அப்படின்னு நிறைய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் உலாவருது இணையதளத்துல.
சில தம்பதிகள் தேனிலவுக்கு போகும் போதோ அல்லது இளம் காதல் ஜோடிகள் தனிமையில் சந்திக்கும் போதோ ஏதோ ஒரு ஆர்வத்தில் ,மன கிளர்ச்சிகாக வேண்டி அவர்களின் சொந்த மொபைல் போன் கேமராவிலோ அல்லது டிஜிட்டல் கேமராவிலோ படம் எடுக்கிறார்கள்.அப்படி படம் பிடிப்பது சரியா தவறா என்ற விவாதத்திற்கு நாம் போக வேண்டாம். அதெல்லாம் அவர்கள் சொந்த விருப்பங்கள் அதில் நான் தலை இட விரும்ப வில்லை .

ஆனால் சொந்த கேமராவில் எடுக்கப்படும் அந்தரங்க நிர்வாண படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது? கண்டிப்பாக அதில் சம்பந்த பட்டவர்கள் வெளியிட்டு இருக்க மாட்டார்கள் . யாரும் அவருடைய அல்லது அவர் மனைவியுடைய அல்லது காதலியின் நிர்வாணத்தை மற்றவர்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் , அவ்வுளவு ஏன் அப்படி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இது எப்படி சாத்தியம் ஆகிறது ?

மேட்டர் ரொம்ப சிம்பிள் , முன்பெல்லாம் புகைப்படங்கள் பிலிம் ரோலிலும் , வீடியோக்கள் கேசட்களிலும் பதிவு செய்யப்பட்டன ஆனா இன்று நிலைமையே வேறு , எல்லாம் டிஜிட்டல் மாயம் . அதனால் நீங்க எடுக்கும் புகைபட்மோ , வீடியோவோ எல்லாம் மொபைலில் அல்லது டிஜிட்டல் கேமராவிலோ உள்ள மெமரி கார்டில் (memory card) தான் பதிவாகிறது . இந்த மெமரி கார்டு தான் நமக்கு நேரடி வில்லன்.
எதார்த்தமாக , தனிமையில் பின்னர் Delete பண்ணிவிடாலம் என்று தம்பதிகள் எடுக்கும் படங்கள் அனைத்தும் இந்த மெமரி கார்டில் தான் பதிவாகிறது.

என்னதான் தம்பதிகள் கவனமாக பின்னர் தங்கள் அந்தரங்க படங்களை delete செய்தாலும் அது முழுமையாக அழிவது இல்லை . உதாரணத்துக்கு உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் delete செய்யும் File உடனே Recycle Bin யில் போய் உட்கார்ந்து கொள்ளும் அது மாதிரி இந்த மெமரி கார்டுளையும் நீங்கள் delete செய்த படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு இருக்கும் . நீங்கள் எல்லாம் முழுமையாக delete செய்து விட்டதாக நினைத்து கொண்டு மற்ற புகைப்படங்களை பிரிண்ட் போட போட்டோ ஸ்டுடியோ வுக்கு குடுக்கும் போது அங்கே சிலர் இந்த மெமரி கார்டுயில் ஒளிந்து கொண்டு இருக்கும் படங்களை வெளியே எடுக்கிறார்கள்.

அதற்க்கு என்று பிரதேகமாக சாப்ட்வேர் இருக்கிறது. அதற்க்கு Recovery Software. இந்த சாப்ட்வேர் Delete ஆனா file களை திரும்ப வரவைக்கும். இது நமது கம்ப்யூட்டர் இருகின்ற மெமரியில் delete ஆனா file களை கூட திரும்ப பெற உதவும் சாப்ட்வேர் . இந்த மெமரி கார்டு யார் கையில் கிடைத்தாலும் பிரச்னை தான் . அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் நெருக்கின நண்பராக கூட இருக்கலாம் .இப்படிதான் தங்களுடைய கேமராவில் தங்கள் கைப்பட எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்தான் எடுத்தவர்களுக்கே தெரியாமல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
சரி இதை எப்படி தவிர்க்கிறது?

டிஜிட்டல் கேமரா மற்றும் மொபில் கேமரா -கவனத்தில் கொள்ள வேண்டிய விஷியங்கள் :
1. முதலில் தங்களுடைய டிஜிட்டல் கேமராவிலோ அல்லது மொபைல் போன் கேமராவிலோ தங்களுடைய நிர்வாண படங்களை எடுப்பதை தவிர்த்து விடுங்கள் முக்கியமாக தேனிலவு தம்பதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. ஒரு வேலை அப்படி தங்களுடைய அந்தரங்கங்களை படம் எடுக்கும் பட்சத்தில் அந்த மெமரி கார்டை கண்டிப்பாக யாரிடத்திலும் குடுக்க வேண்டாம். குறிப்பாக போட்டோ ஸ்டுடியோவுக்கு அதில் உள்ள வேற சாதாரண போட்டோவை பிரிண்ட் போட குடுக்க வேண்டாம்.

3. அந்த மெமரி கார்டில் உள்ள உங்கள் அந்தரங்க போட்டோக்களை Delete செய்தால் மட்டும் போதாது . கண்டிப்பாக மெமரி கார்டை Format செய்ய வேண்டும் அப்போதான் முழுமையாக எல்லாம் அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது.

உங்க WEBCAM ஜாக்கிரதை . .

சரி இப்போது நான் இந்த பதிவின் தலைப்புக்கு வருகிறேன் . உங்கள் கம்ப்யூட்டர்லியோ அல்லது லேப்டாப்லியோ வெப்காம் இருக்குமாயின் அதை உங்கள் அனுமதி இல்லமால் யாரேனும் ஆன் செய்தது உங்களை பார்க்க முடியுமா? முடியும் என்கிறது Technology . ஆம் நீங்கள் Gtalk லியோ அல்லது Yahoo Messenger லியோ ஆன்லைனில் இருந்தால் உங்கள் Friends லிஸ்ட்யில் இருபவர்களால் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் வெப்காமை ஆன் செய்ய முடியும்.

அதற்க்கு ஆதார வீடியோ கூட இருக்கிறது ஆனால் அந்த வீடியோவை நான் இங்கு இணைக்க வில்லை ஏனென்றால் அந்த வீடியோவில் எப்படி மற்றவர்கள் வெப்காமை அவர்கள் அனுமதி இல்லாமல் ஆன் செய்வது அதற்க்கு என்ன சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய வேண்டும் எல்லாம் இருக்கிறது . அப்புறம் தெரியாத ஒரு தப்பான விஷியத்தை நானே சொல்லி குடுத்தார் போல் ஆகிவிடும். அதனால் விஷியத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் .

இதில் இருந்து தப்பிக்க :

1. நீங்கள் கம்ப்யூட்டரில் தனியாக வெப்காம் வைத்திருப்பார்களானால் , நீங்கள் வெப்காமை உபயோகிக்காத போது கம்ப்யூட்டரில் இருந்து வெப்காம் இணைப்பை துண்டித்து விட்டு தனியாக வைக்கவும் . அவசியம் இருக்கும் போது மட்டும் கம்ப்யூட்டர் உடன் இணைக்கவும்

2. நீங்கள் லேப்டாப் உபயோகிப்பவரானால் அதில் வெப்காம் ஸ்க்ரீன் உடன் இணைக்க பட்டு இருக்கும் அதை தனியாக கழட்டி வைக்க முடியாது ஆனால் வெப்காம் லென்ஸ்சை மூடி வைக்கலாம் இல்லையா? ஆமா லேப்டாப் வெப்காம்மில் உள்ள லென்ஸ் மேல் ஒரு ஸ்டிக்கராய்அல்லது ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி வையுங்கள் . உங்கள் அனுமதி இல்லாமல் வெப்காம் ஆன் செய்தாலும் எதுவும் பார்க்க முடியாது .