இங்கு பதித்திருப்பது நம்மை வியக்கவைப்பதற்கான புகைப்படத்தை அல்ல !! நம் நெஞ்சை புகைக்க வைப்பதற்கான நிஜத்தின் நிகழ்படத்தை !!




இங்கு பதித்திருப்பது
நம்மை வியக்கவைப்பதற்கான
புகைப்படத்தை அ
ல்ல !!
நம் நெஞ்சை
புகைக்க வைப்பதற்கான
நிஜத்தின் நிகழ்படத்தை !!

தாயின் மடியிலே கிடக்க வேண்டிய
பச்சிளம் பிள்ளை
இன்று தார் ரோட்டின் நடுவிலே !!

மிருகங்கள் கூட யோசிக்குமே ?
யார் காரணம்
இந்த கொடூரச்செயலுக்கு...

அறியவில்லை !
தெரியவில்லை !!
புரியவுமில்லை !!!

கயவர்களின் ஈனச்செயலுக்கு
காரணம் எது?

வறுமையின் கொடுமையா?
கள்ளதொடர்பினால் ஏற்பட்ட களங்கமா?
அல்லது
ஒரு பெண்மணியின் வயிற்றிலே
நீயும் ஒரு பெண்ணாக கருவுற்றதா?

இருக்காது ! இருக்காது !!
நிச்சயமாக இருக்காது !!!
இந்த ஈனச்செயலை
நிச்சயம் ஒரு தாயால் செய்ய இயலாது !!

பிஞ்சின் உடலில் தெரிகின்ற
கோரத்தின் நிலயைக்கண்டுமா தெரியவில்லை ?!
இது நிச்சயம்
இனவெறியின் உச்சகட்டம் என்று !!

பிஞ்சை கூட விட்டு வைக்கவில்லை
இந்த நஞ்சு மனம் !!

எதற்காக இந்த இனவெறி
ஏன் இந்த கொலைவெறி

புரியவில்லையே !!!!

புரிந்தால் மட்டும்
திருந்தி விடுமா இந்த மனித சமூகம் ?

வெட்கப்படுங்கள் !!!
இந்த விஷயத்தில்
மிருகங்கள் நம்மை மிகைத்துவிட்டன !!

இந்த கொடூரச்செயலுக்கு
எது காரணமாக இருந்தாலும்
யார் காரணமாக இருந்தாலும்
அவர்கள் இதற்கான பதில் சொல்லவேண்டிய
காலம் வரும் !

பச்சிளம் பிள்ளையே !
உன்னை இந்த இழிநிலைக்கு தள்ளியவர்களை
நீ இப்பொழுது அறியாதிருந்தாலும்,
நாளை அவர்களை கண்டுக்கொள்வாய்
மறுமை நாளிலே !!

அந்த ஈனப்பிறவிகள்
உன் முன்னே நிறுத்தப்படுவர் !
இதை விட இழிந்த நிலையிலே
அவர்கள் இருப்பதை நீ காண்பாய் !!
இன்'ஷா அல்லாஹ்...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..!!!

No comments:

Post a Comment