கபுறு வணங்கிகளின் கதை கேளுங்கள் ...!
- இவங்கத்தான் சுன்னத் வல் ஜமாஅத்தாம்:
ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இபுனு அரபி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் வபாத்தான பிறகு அவர்களே தங்களது வீட்டிற்கு வந்தார்கள். தங்களது வெள்ளாட்டியைக் கண்டு அவளது சுக செய்திகளையும் நிலைமைகளையும் விசாரித்தார்கள். எல்லா விஷயங்களையும் அவள் சவிஸ்தாரமாக எடுத்துக் கூறினாள். அவர்கள் அவளிடமிருந்து விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து சென்றார்கள் என்பதாக புஸுஸுல் ஹிக்கம் உடைய ஷரஹில் இமாம் ஷைகுஜுந்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுவதாக ஸஆதத்துத் தாரைன் 402-வது பக்கத்தில் வரையப்பட்டுள்ளது.
"அவுலியாக்களுக்கு ஆண்டவனால் அருளப்பட்டிருக்கும் கறாமாத்து அதிசயத்தின் பொருட்டால் ரூஹானியத்தான சக்தியைக் கொண்டு ஹயாத்திலும் மவுத்துக்குப் பிறகும் அவர்கள் வெளிப்பட்டு உலகில் நடமாடும் சக்தியுண்டு" என்பதாக இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அல்கபருத்தால்லு அலா-வுஜுதில் குத்பி வல் அப்தால், என்ற நூலிலும், இமாம் ஸெய்யிது ஷஹாபுத்தீன் அஹ்மது ஹுஸைனீ ஹமவீ ஹனபீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் நபஹாத்துல் குர்பிவல் இத்திஸால், என்ற நூலிலும் கூறுகின்றார்கள்.
"அவுலியாக்களில் பெரும்பாலோர் வபாத்துக்குப் பிறகும் கபுருகளிலிருந்து புறப்பட்டு வெளியே போகவும் செய்கிறார்கள். திரும்பவும் கபுருக்குள் மீளவும் செய்கிறார்கள். போகவர அவர்களுக்கு எத்தகைய தடையுமில்லை" என்பதாக அல்குத்பு இமாம் ஷஃறானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் லத்தாயிபுல் மினன் 1-வது பாகம் 144-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.
"நபிகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தங்களது மவுத்தாகிப் போன ஸஹாபாக்களின் அர்வாஹுகள் சகிதம் எல்லா உலகங்களையும் சுயேச்சையாகச் சுற்றி வருவதை அவுலியாக்கள் கண்கூடாகக் கண்டிருக்கின்றார்கள்" என்பதாக இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுவதை, தப்ஸீர் ரூஹுல் பயான் பாகம் 10, பக்கம் 99ல் காணலாம்.
- கப்ரு வணங்கிகளின் இதற்காதாரமாக வபாத்துக்குப் பிறகு நிகழ்ந்த சில சம்பவங்களைக் காண்க:
இமாம் அப்துல் வஹ்ஹாபு ஷஃரானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஸியாரத்துச் செய்வதற்காக ஸெய்யித் உமர் இபுனு பாரிலு ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடைய கபுரு ஷரீபுக்குச் சென்றபோது அங்கு அவர்களைக் காணாதபடியால் திரும்பிவிட்டார்கள். பிறகு உமர் இபுனு பாரிலு ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இமாம் ஷஃரானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு இடம் சென்று தேவையை முன்னிட்டு வெளியே சென்றிருந்ததாகத் தெரிவித்து மன்னிப்புக் கோரியதாக இமாம் ஷஃறானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களே தங்களுடையநூல் : ஷலதாயிபுல் மினன்' 1-வது பாகம் 144-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.
ஸெய்யிது ஷைகு அப்பாஸ் முர்ஸீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை சனிக்கிழமை சூரியோதயத்திற்கு முன்னும், ஸெய்யிது இபுறாஹிமுல் அஃரஜ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை வெள்ளிக்கிழமை மக்ரிபுக்குப் பின்பும் ஸெய்யிது யாக்கூத்துர் அர்ஷீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைச் செவ்வாய்க்கிழமை லுஹருக்குப் பின்பும் அவரவர்களுடைய கபுருக்குச் சென்று ஸியாரத்துச் செய்யும் படியும் அவர்களெல்லோரும் குறிப்பிட்ட அந்த நேரங்களில் தான் கபுரில் ஆஜராயிருப்பார்களென்றும், இவ்வுண்மையை அகக்கண்ணை உடையவர்களைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்களாகையால், கபுருகளில் அவர்கள் இருக்கவே செய்கின்றார்கள் என்ற எண்ணத்துடன் கஷ்பில்லாதவர்கள் செய்யவேண்டுமென்றும் ஸெய்யிது அலி பதவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் உபதேசித்திருப்பதாக மேற்சொன்ன ( நூல் : லாதயிபுல் மினன் ) அதே பக்கத்தில் வரையப்பட்டுள்ளது.
ஹஜ்ரத் கிலுரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள், இமாமுல் அஃலம் அபூஹனீபா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது வஃளு மஜ்லிசுக்குத் தினந்தோறும் காலை வேளையில் ஆஜராகி ஷரீஅத்துடைய இல்முகளைக் கற்று வந்தார்கள். இமாம் அவர்கள் வபாத்தான பிறகு அந்த மஜ்லிசு நடைபெறவில்லை. கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆண்டவனது உத்தரவு பெற்று, ஹயாத்தில் நடந்தது போலவே மவுத்துக்குப் பின்பும் இமாமுல் அஃளம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது கபுரு ஷரீபுக்கு ஒவ்வொரு காலையிலும் சென்று, ஷரீஅத்துடைய இல்முகளைக் கேட்டுவந்ததாக இமாம் இபுனு ஜவ்ஸீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு 'பதாயிஉ' எனும் பிக்ஹுக் கித்தாபில் வருகிறதாக ஷைகு ஹஸனுல் அதவீ மிஸ்ரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மஷாரிக்குல் அன்வார் 69-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.
நான்கு மதுஹபுடைய இமாம்களுள் ஒருவராகிய அஹ்மது இபுனு ஹம்பலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது ஸியாரத்திற்குச் சென்ற குத்பு றப்பானீ கௌதுஸ்ஸமதானீ, முஹிய்யித்தீன் அப்துல் காதிரு ஜீலானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அன்னாருடைய கபுறு ஷரீபுக்கெதிரே, அதபுடன் நின்று, "அஸ்ஸலாமு அலைக்கும் யாஇமாமல் கிராம்" (சங்கைக்குரிய இமாம் அவர்களே) என்று அழைத்து ஸலாம் சொன்னார்கள். உடனே, கபுரு ஷரீபு இரண்டாகப் பிளந்தது. இமாம் அவர்கள் ஜோதிப் பிரகாசத்தோடு வெளியே பிரசன்னமாகி கௌதுல் அஃளம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கட்டித் தழுவி ஆலிங்கனஞ் செய்தார்கள் நூரானீயான பரிவட்டத்தைப் போர்த்தி, "ஸெய்யிது அப்துல் காதிரே, ஷரீஅத்துடைய இல்முகளும், ஹகீகத்துடைய இல்முகளும் தங்கள்பால் ஹாஜத்தாகின்றன," என்று பகர்ந்து விடைபெற்று மறைந்தார்கள். இச்சம்பவம் ஷபஹ்ஜத்துல்-அஸ்றாரு' கிரந்தத்தில் அறிவிப்பு செய்யப்பட்டிருப்பதாய் ஷதப்ரீஜுல்காத்திர்' 40-வது பக்கத்திலும், ஷபஸ்லுல் கிதாபு' 129-வது பக்கத்திலும் ஹள்ரத் ஷெய்கு அப்துல்ஹக் முஹத்திதுத் திஹ்லவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் 'ஜுப்ததுல் அஸ்றார்' நூலிலும் காணப்படுகின்றது.
குத்புஸ்ஸமான், இமாம் அப்துல் வஹ்ஹாபு ஷஃறானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்:- "நான் எனது குருநாதர் (உஸ்தாது) ஹஜ்ரத் ஸெய்யிது முஹம்மது ஷனாவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடன் அல்குத்புஷ்ஷஹீர், ஸெய்யிது அஹ்மது பதவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது தர்காவுக்கு ஸியாரத்திற்காகச் சென்றிருந்தேன். அவ்வமயம் எனது உஸ்த்தாதவர்கள் கபுரு ஷரீபை முன்னோக்கி, 'நாயகமே! இன்ன காரியத்தை முன்னிட்டு மிஸ்ருக்குப் போகப் பிரயாணமாயிருக்கிறேன். விடை கொடுத்தனுப்புங்கள்' என விண்ணப்பித்து நின்றார்கள்."அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்தவராய் போய் வருக" என்ற நல்வாக்கு கபுருக்குள்ளிருந்து வெளிவந்த சப்தத்தை எனது வெளிரங்கமான இரு காதுகளைக் கொண்டும் நன்கு கேட்டேன்" என்பதாக. இவ்வரலாற்றை இமாம் ஷஃறானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் லதாயிபுல் மினன்' 1-வது பாகம், 180-வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
அமீருல் முஃமினீன், ஸெய்யிதுனா அபூபக்கர் ஸித்தீக்கு ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் வபாத்தாகும் போது, "என்னுடைய ஜனாஸாவை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முபாரக்கான அறையின் முன்னால் வையுங்கள். கதவு திறக்கப்பட்டு, அபூபக்கரை உள்ளே கொண்டு வாருங்கள் என்று உத்தரவு வந்தால் மட்டில் அவ்வறையிலேயே அடக்கம் செய்யுங்கள். இன்றேல், பொதுக்கபுருஸ்தானத்தில் அடக்கி விடுங்கள்" என்று வஸிய்யத்துச் செய்திருந்தார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பூட்டப்பட்ட அறைவாயிலின் முன்பு ஜனாஸாவை வைக்கப்பட்டபோது, வாயில் கதவு தானாகவே திறந்து கொண்டது. "தோழரைத் தோழரிடம் அனுப்பி வையுங்கள்" என்ற உத்தரவு புனிதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ரவுளா ஷரீபிலிருந்து வெளிவந்தது. அவ்விதமே அங்கு அடக்கப்பட்டார்கள். இவ்வரலாற்றை இமாம் பக்ருத்தீன் றாஜீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தப்ஸீர் கபீர், 5-வது பாகம் 685-வது பக்கத்தில் கூறுவதாய் 'தப்ரீஹுல் அத்கியா பீ-அஹ்வாலில் அன்பியா', பாகம் 2, பக்கம் 376-ல் வரையப்பட்டுள்ளது.
குத்புஷ் ஷஹீர், ஷைகு முஹம்மது இபுனு சுலைமானுல் ஜஸுலிஷ் ஷாதுலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 870-வது வருஷத்தில் வபாத்தாகி, சூயஸ்பட்டணத்தில் அடக்கப்பட்டார்கள். 77 வருஷங்களுக்குப் பிறகு ஹிஜ்ரி 947-வது வருஷம் அவர்களது கபுரைத் தோண்டப்பட்டது. அவ்வமயம் அவர்களது திரேகம் (தபன்) அடக்கம் செய்யப்பட்ட சமயம் எவ்விதமிருந்ததோ அவ்விதமே உறுப்பில் எத்தகைய சேதமும், மாறுபாடுமின்றி. கபன் துணியில் கூட மண் ஒட்டாமலிருந்தது, அந்தத் திரேகம் கஸ்தூரி வாடையுடன் கமழ்ந்துக் கொண்டிருந்ததைக் கண்ணுற்ற திரளான ஜனங்கள் பேராச்சரியப்பட்டு மயங்கி நின்றனர். ஆண்டவனுடைய பாதையில் ஷஹீதானவர்கள் இறந்தவர்கள் அல்லர். அவர்கள் ஜீவனுள்ளவர்கள். அவர்களுடைய பூத உடல்களை மண் தின்னாது. புழுப்பூச்சி, ஐவாமிருகங்கள் எதுவுமே தீண்டாது என்று அல்லாஹ்வும், றஸுலும் கூறியவாக்குகளை மெய்ப்பிக்கும் அத்தாட்சிகளாகவே அவர்கள் காணப்பட்டார்கள். மேலே குறிப்பிட்ட சம்பவத்தின் போது அக்கூட்டத்திற்கு சிலர் சோதிப்பதற்கென்றே, வசீகரத்துடன் ஜோதிப் பிரகாசமாக இலங்கிக்கொண்டிருந்த அந்த வலியுல்லாஹ் அவர்களுடைய திருமுகத்தில் விரலைவைத்து அழுத்திப் பார்த்தனர். விரல் பட்ட இடத்தைச் சூழ்ந்து செந்நிறமாக இரத்தத்தின் அறிகுறி காணப்பட்டது. விரலை எடுத்ததும் அந்த உதிரக்கட்டு உடலில் பரவி மறைந்தது. பிறகு அவர்களது பரிசுத்தத் திருமேனி ஆப்பிரிக்காவிலுள்ள மொராக்கோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது. அவர்களது கபுரு ஷரீபில் இன்று வரை ஸலவாத்தின் பரக்கத்தை முன்னிட்டு கஸ்தூரி வாடை கமழ்ந்து கொண்டிருக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் ஸியாரத்திற்காகச் சென்று, தலாயிலுல் கைறாத்தை ஓதி நற்பேறுகளைப் பெற்று வருகின்றனர்.நூல் : ஜாமிவுல் கறாமாத் 1-வது பாகம், 165-வது பக்கத்தில் காணப்படுகிறது.
மாற்று மதத்தார்கள் தோற்றுப்போகும் அளவிற்க்கு இந்த கபுறு வணங்கிகளின் கட்டுக்கதைகளும், கப்சாக்கள்ளும் மிஞ்சிவிடுவதை கண்டோம்
No comments:
Post a Comment