இரவும் பகலும் மாறும்
இறைவன் வகுத்த நியதி
வரவும் செலவும் சேரும்
வணிகக் கணக்கின் நியதி
இரவு மட்டு மிருந்தால்
இயங்க மறுக்கு முலகம்
வரவு மட்டு மிருந்தால்
வணிக வளர்ச்சி விலகும்
உறவும் பிரிவு மிணைந்து
ஊடல்; காதல் கலந்து
பிறப்பின் முடிவி லுறவைப்
பிரியு முயிரும் பறந்து
இறப்பின் மூலம் சென்று
இறையைக் காண; மீண்டும்
பிறந்து மறுமை வாழ்வும்
பின்னால் தொடர வேண்டும்
No comments:
Post a Comment