"ஒரு நாள் வரும், அன்று நீ குளிக்க மாட்டாய், உன்னை குளிப்பாட்டுவார்கள்.... நீ உட...ை அணிய மாட்டாய், உனக்கு அணியப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய், உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழமாட்டாய், உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய், உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று........ உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உள்ள அனைவரும் சென்று விடுவார்கள்".....
கண்டிப்பாக அந்த நாள் வரும், அந்த நாள் தான் உனது இறுதி நாளாக இருக்கும்...
"அந்த நாள் இறைவனை தொழாதவனுக்கும், இஸ்லாமிய வழிபாடுகளை பின்பற்றாதவனுக்கும் மிக மிக மோசமான நாளாக இருக்கும்".
அதுவே,
"இறைவனை தொழுது வழிபடுவனுக்கும், இஸ்லாமிய நெறி முறைகளை ஒழுங்காக பின்பற்றி நடப்பவனுக்கு... இறைவனை சந்திக்கப்போகும் மிக மிக அற்புதமான நாளாக இருக்கும்".
எனவே... எனதருமை சகோதரனே.... தயங்காதே.... தாமதிக்காதே.....
நேற்று என்பது முடிந்து விட்டது.... நாளை என்பது நம் கையில் இல்லை...
நாளை நாம் உயிருடன் இருப்பதும் நிச்சயம் இல்லை....
"நாளை", "நாளை" என்று நாளை கடத்தாமல், இன்றே இப்பொழுதே.....
"உனக்காக தொழுகை நடத்தும் முன், நீ தொழ ஆரம்பித்துவிடு"..
No comments:
Post a Comment