கேள்வி: ஒரு தாய்க்கு தன் மக்களிடத்தில் இருக்கும் கருணையைக் காட்டிலும் பல மடங்கு கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்? அதிலும் தீயவர்கள் பலர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழும் போது நல்லவர்கள் பலர் நோயால் அவதியுறுவதுடன் அதற்கு மருத்துவம் செய்யுவும் உரிய வசதியின்றி வாடுவது ஏன்? பதில்: மனிதர்களுக்கு நோய் ஏற்படுவது ஒரு பாதகமான அம்சம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மனித வாழ்க்கையில் பாதகமான அம்சங்கள் பல உள்ளன. வறுமை, அழகின்மை, உடல் வலுவின்மை, குழந்தைப் பேறு இன்மை. வலிமையானவர்களின் அடக்கு முறைகளுக்கு ஆளாகுதல், தீர்க்க முடியாத கடன், பொருத்தமில்லாத வாழ்க்கைத் துணை, தறுதலைப் பிள்ளைகள், நெருக்கமானவர்களின் மரணம், உடல் ஊனம், நினைவாற்றல் குறைவு, சிந்தனைத்திறன் குறைவு, இப்படி ஆயிரமாயிரம் பாதங்கள் உள்ளன. நீங்கள் நோயை மட்டும் பாதகமாகக் கருதுகிறீர்கள். மேலே சுட்டிக்காட்டியது போன்ற ஏதேனும் பாதகமான அம்சங்கள் சிலவற்றைப் பெற்றே மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். எந்தப் பாதகமும் இல்லாத ஒருவரும் உலகில் கிடையாது. நமக்கு இறைவன் வறுமை மற்றும் நோயைக் கொடுத்திருக்கலாம். ஆனால் செல்வமும் ஆரோக்கியமும் உள்ளவருக்கு எந்தக் குறைவும் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவருக்கு பொறுத்தமில்லாத மனைவியையோ, மக்களையோ இறைவன் கொடுத்திருப்பான். அல்லது வேறு ஏதேனும் குறைகளைக் கொடுத்திருப்பான். நீங்கள் நோயை நினைத்து கவலைப்படுவது போலவே அவர் குடும்பத்தை நினைத்து கவலைப்படுவார். மனதை உறுத்துகிற அழுத்தம் இல்லாததால் நீங்கள் படுத்தவுடன் தூங்கி விடுவீர்கள். நீங்கள் யாரைப் பார்த்து பொறாமைப்படுகிறீர்களோ அவரால் பஞ்சு மெத்தையிலும் தூங்க முடியாது. இந்த உலகம் சீராக இயங்க வேண்டுமானால் குறைகளையும் நிறைகளையும் பலருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். எல்லோருக்கும் ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தால் யாரும் வேலைக்குப் போகமாட்டோம் நமது நிலத்தை நாமே உழுது பயிரிட சக்தி பெறவும் மாட்டோம் அனைவரும் சோத்துக்கு இல்லாமல் செத்திருப்போம். எல்லோரிடமும் கோடி ரூபாய் இருந்தால் என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள். அனைவரும் அழிவது தான் நடக்கும். இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறையையும் நிறையையும் இறைவன் வழங்கி கருணை புரிந்துள்ளான். நோயாளியைக் கொண்டு மருத்துவரின் வாழ்க்கை ஓடுகிறது. மருத்துவரின் மூலம் வியாபாரியின் வாழ்க்கை ஓடுகிறது. வியாபாரியின் மூலம் விவசாயி மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கை ஓடுகிறது இத்தகைய சங்கிலித் தொடர் மூலம் உலகம் இயங்குவதற்காகத் தான் இறைவன் இவ்வாறு செய்துள்ளான். எத்தனையோ கோடீஸ்வரர்கள் தினம் இரண்டு இட்லிதான் சாப்பிடவேண்டும் மாமிசம் எண்ணெய் தொடக்கூடாது என்று மருத்தவர்களால் எச்சரிக்கை செய்யப்படுகின்றனர். கோடி கோடியாக இருந்தும் வாய்க்கு ருசியாகச் சாப்பிட முடிவதில்லை. கிடைக்கிற அனைத்தையும் சாப்பிடக்கூடிய நிலையில் உள்ள ஏழை இந்த வகையில் இவனை விடச் சிறந்தவன் இல்லையா? இதுபோல் வறுமையும் நோயும் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள நிறைகளை உண்ணிப் பார்த்தால் நிச்சயமாக நோயற்றவர்களுக்குக் கிடைக்காத ஏதோ ஒரு வசதி, வாய்ப்பு, பாக்கியம் தங்களுக்குக் கிடைத்திருப்பதை உணருவார்கள். அப்போது இறைவன் எத்தகைய கருணைக் கடல் என்பதை சந்தேமற அறிவார்கள்.


 ஒரு மலையை இடம் பெயரச் செய்யும் பணியை விட குர்ஆனை ஒன்று சேர்க்கும் பணியை சிரமமாகக் கருதி மிகுந்த சிரத்தையுடன் தொகுத்து  இந்த சமுதாயத்திற்கு விட்டுச் சென்றது முந்தைய சமுதாயம்! 

குர்ஆன் இன்றளவும் அன்று அருளப்பட்ட அதே மொழி வழக்கில் ஏடுகளில் பாதுகாக்கப் படுவது அல்லாஹ்வின் வேதம் என்ற அற்புதமான உண்மைக்கு ஓர் எடுத்துக் காட்டு ஆகும். குர்ஆன் எப்படி உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டிருக்கிறதோ அதே போல் அதே பொலிவுடன் அது எழுத்து வடிவிலும் பாதுகாக்கப்பட்டே இருக்கிறது. இஸ்லாத்தின் எதிரிகளைத் தவிர எவரும் குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருக்கிறது என்று கூறியிருக்கவில்லை. ஆனால்...
ஆரம்பத்தில் ஏகத்துவப் பேச்சாளராக இருந்து காலப்போக்கில் இஸ்லாமின் பெயரால் பல்வேறு கொள்கைகளில் பரிணமித்த சகோ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளன என்ற புதியதோர் சிந்தனையை, முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர் மத்தியில் குர்ஆனின் தனித்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை தான் வெளியிட்ட தர்ஜமாவின் மூலம் அறிமுகப் படுத்தியபோது குர்ஆனைப் படிக்கும் மாணவன் என்ற முறையில் இதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்க முடியவில்லை.
குர்ஆனில் இவர் பிழை என்று குறிப்பிட்ட ஓர் எழுத்தை ஓதக் கூடியவர்கள் சரியாகத்தான இதை ஓதினர் என்று இவர் எழுதியபோது இவரால் பிழை என்று கூறப்பட்ட வார்த்தையை கிட்டத்தட்ட நான் ஓதக்கேட்ட எல்லா காரிகளுமே  குர்ஆனில் (இவரது கூற்றுப்படி பிழையாக) உள்ளவாறே ஓதியுள்ளனர். மதரசாக்களிலும் அப்படித்தான் கற்றுக்கொடுக்கப் படுகிறது. (ததஜ மத்ரசாக்களில் எப்படிக் கற்றுக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.)  அப்படியானால் உள்ளங்களில் பாதுகாகக்கப்படுவதும் பிழைதானா? என்ற கேள்விக்கு நியாயமான பதிலை சமுதாயத்திற்கு முன் வைக்க இவர் கடமைப் பட்டுள்ளார்.  
இன்னொரு காரியம் என்னவென்றால் குர்ஆனில் உள்ள நிறுத்தற்குறிகள் தேவையில்லாமல் போட்டுள்ளார்கள்,  எந்த இடத்தில் வேண்டுமானாலும் நிறுத்தலாம் என்ற இவரது புதிய கொள்கைக் குளறுபடி. குர்ஆன் எப்படி ஜிப்ரீல் (அலை) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ஓதிக் கொடுத்தார்களோ, அந்த ஓதுதல் முறையில் எப்படி நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு ஓதிக் கொடுத்தார்களோ அதைப் பின்பற்றி எப்படி ஸஹாபாக்கள் பிந்தைய தலை முறைக்குக்கு ஓதிக் கொடுத்தார்களோ அதே முறையில் வாழையடி வாழையாக இந்த சமுதாயம் தொடர்ந்து வருகிறது என்பதும் குர்ஆனுக்கே உள்ள தனித்தன்மைகளுள் ஒன்றாகும்.  
அதில் எந்த  இடத்தில் நிறுத்த வேண்டும், எந்த இடத்தில் சேர்த்து ஓத அனுமதி உள்ளது, எந்த இடத்தில் நிறுத்த அனுமதியில்லை என்ற விவரங்கள் அனைத்தும் உள்ளடங்கியிருந்தது. அதே அடிப்படையில் ஓத வேண்டும், அதில் சமுதாயம் தவறிழைத்து விடக் கூடாது என்ற நமது முந்தைய இமாம்களின் கனிவான அக்கரைதான் நிறுத்தற் குறியீடுகள் போடப்பட்டதன் பின்னணி.
 மூலப்பிரதியில் நிறுத்தற்குறிகள் இல்லை எனவே குறியீடு என்பதை இமாலயத் தவறாக எடுத்துக் காட்டிய ஜைனுல் ஆபிதீன் ஜபர் ஜேர் ளம்மு சுக்கூன் என்பதும் சமுதாயம் ஓதுவதில் தவறிழைத்து விடக்கூடாது என்பதற்காக பின்னாளில் இடப்பட்டதுதான் என்ற உண்மையையும் அதன் பின்னணியையும் மறைத்து இதற்கு ஒரு தவறான வியாக்கியானம் கொடுத்தது சமுதாயத்திற்குச் செய்த மிகப்பெரிய மோசடியாகும்.
நிறுத்தற்குறி அவசியம் இல்லை என்றால் இவர்களது மதரசாவில் ஜபர் ஜேர் கற்றுக் கொடுப்பதும் தவறானது தானே? இனி நிறுத்தற்குறி அவசியம் இல்லை என்றால் சில இடங்களில் நிறுத்துவது அல்லது சேர்த்து ஓதுவது தவறான வெறுக்கத்தக்க அல்லது இணைவைக்கும் பொருள்களைக் கொண்டுவர இடமுள்ளது என்று அறியாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சில விளக்கக் குறிப்புகளை வாரிக் கொட்டியிருக்கிறார் தனது தர்ஜமாவில். இதை ஒவ்வொன்றாக வெளிக் கொண்டு வர யா அல்லாஹ் அருள்புரிவாயாக.

No comments:

Post a Comment