கப்ரில் (மண்ணறையில்) வருகை தரும் வானவர்கள்...!!


கப்ரில் (மண்ணறையில்) வருகை தரும் வானவர்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘ஒரு அடியான் கப்ரில் வைக்கப்பட்டு அவனது தோழர்கள் அங்கிருந்து நகரும் போது, அவன் அவர்களின் காலணிகளின் ஓசையை செவியுறுவான். அப்போது அவனிடம் இரு வானவர்கள் வந்து அமர்ந்து கொண்டு (பல கேள்விகளைக் கேட்டபின்னர், நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் கேட்பார்கள்) இந்த மனிதரைப்பற்றி என்ன சொல்கிறாய்? என்று கேட்பார்கள்.
(ஒரு முஃமின்)- நம்பிக்கை கொண்டவனாயின், ‘அவன் அல்லாஹ்வின் அடியாரும் அவனது திருத்தூதருமாவார்’என்று சாட்சி சொல்கிறேன் என்று கூறுவான். அப்போது அவனை நோக்கி, (இதோ, உனக்குத் தரப்படவிருந்த இடத்தைப் பார்! அதற்குப் பதிலாக உனக்கு சுவர்க்கத்தில் ஓரிடம் தரப்படவிருக்கிறது என்று அவனிடம் கூறப்படும். (அப்போது சுவர்க்கம், நரகம் ஆகிய) இரு இடங்களையும் அவன் பார்ப்பான். அறிவிப்பவர்:அனஸ் இப்னு மாலிக் (ரலி),நூல்: முஸ்லிம்: 2870).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘ நம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் நிலைப்படுத்துகிறான். (14:27) என்ற இறைவசனம் கப்ருடைய வேதனை சம்மந்தமாக அருளப்பட்டது. (கப்ரில் அடக்கமாயிருக்கும்) அவனிடம், (மன் ரப்புக்க) உன் இரட்சகன் யார்? அதற்கவன் ‘அல்லாஹ் தான்’என்று பதிலளிப்பான்.( உனது நபி யார்? ) எனது நபி முஹம்மத்(ஸல்)அவர்களாவார் என்று பதில் கூறுவான். இதைத்தான் அல்லாஹ் (14:27-ல்) கூறுகிறான். (அறிவிப்பவர்:ஃபரா இப்னு ஆஸிஃப்(ரலி), நூல் : முஸ்லிம் :2871)
இவர்களின் பெயர்கள் முன்கர்,நக்கீர் என ஹதீஸ் நூல்களில் வருகின்றன.

No comments:

Post a Comment