அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும்


ஹிஜாபை பேணுவதில் அலட்சியம் கூடாது
சில பெண்கள் ஹிஜாப் என்ற பெயரில் தங்களின் உடலை முழுமையாக மறைக்காத ஆடைகளையும் அணிகிறார்கள். இந்த சிலரின் நடவடிக்கைகளுக்கு என்ன காரணம்? ஊருக்கும் உலகுக்கும் பயந்து தான் இவர்கள் தங்கள் ஹிஜாப் சட்டத்தை பேணுகிறார்களே தவிர
இறையச்சம் என்பது சிறிதும் மனதில் இல்லை.
வீட்டில் பெற்றோர்கள் முன் இருக்கும்வரை ஹிஜாப் சட்டத்தை பேணும் பெண்கள் வெளியே கல்லூரிக்கோ அல்லது நண்பர்களுடன் வெளியே செல்லும்போது ஹிஜாபை தூக்கி எறிந்துவிடும் இளம் தலைமுறையினரையும் நாம் பார்க்காமல் இல்லை.
இஸ்லாத்தை ஒழுங்காக போதிக்காமல் இறையச்சத்தை ஊட்டாமல் பெண்கள் எப்படி
நடக்கவேண்டும், பெண்களுக்கு ஹிஜாப் சட்டம் எவ்வளவு பாதுகாப்பானது என்பதை கூறி வளர்க்காத காரணத்தினால்தான் இந்த நிலைக்கு இன்று முஸ்லிம் சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது.
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முக்காடுகளை கொண்டு அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.'' (அல் குர்ஆன் 24:31)

அல்லாஹ் யார் யார் முன் ஹிஜாபை பேணச்சொல்கிறானோ அவர்கள் முன் பேணுவது நம் கடமை இதை தான் நாம் செய்ய வேண்டுமே தவிர இதை சொல்பவர்களை குறை கூறி புறம் சொல்வது நம்வேலை இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்காமல் அல்லாஹ் கூறியவர்களை தவிர வேறு யாரிடமும் ஹிஜாப் உடை இல்லாமல் தோற்றம் அளிக்காதீர்கள். 

அல்லாஹ் கூறியதில் அலட்சியமாக இருந்தால் கேடுகளே உண்டாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "பெண்கள் இருக்கும் இடத்திற்க்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன் "என்று கூறினார்கள்.அப்போது அன்சாரிகளில் ஒருவர். "அல்லாஹ்வின் தூதரே கணவருடைய உறவினர்களைப் பற்றி என்ன சொல்கிறிர்கள்?" என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்;
"கணவருடைய உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்" என்று கூறினார்கள் (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5232)

 ''அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!'' (அல்குர்ஆன் 2:223) 

No comments:

Post a Comment