துபாயில் நான்…



இருப்பை எல்லம் விட்டுவிட்டுவிருப்பை மட்டும் மூட்டை கட்டிமறுப்பை சொல்ல வழியில்லாமல்பொறுப்பை ஏற்று புறப்பட்டேன் நான்…

அன்னை மண்ணில்வேரறுபட்டதும்,அன்னிய மண்ணில்- நான்வேர்ப்பட்டதும்,விமானம் ஏற‌தீர்மானம் செய்ததால்…

அன்று அரும்பாக இருக்கையிலேஆகாய பார்வையிலேஅலைபாய்ந்த ஆசையிலேஅழகாக தோன்றிய‌ஆகாய ஊர்தியும்,அரங்கேறி போகையிலேஆனந்த்தம் இல்லாத‌அனுபவம் ஆனது.அதில் அலங்காரம் செய்துதான்ஆகாரம் வந்தது,

ஆசைபட்டு தீர்த்திடாமல்அசை போட்டு தீர்த்துவிட்டேன்…இறங்கும் நேரம் வந்து விட‍- அன்றுஇருக்கை இருந்து பார்த்தபோது- இங்குஇயற்கை என்று ஒன்றும் இல்லை…

மணல் நகரின் அனல் காட்சிஇங்கு மக்கள் அல்ல மன்னர் ஆட்சி…அன்று நிவார‌ண‌ம் தேடி வந்த‌ ந‌க‌ர‌ம்இன்று நிரந்த‌ர‌ம் ஆகிப்போன‌ ந‌க‌ர‌ம்,நாள் ‍ விடிந்தாலும் முடிந்தாலும்ஒரே போல‌ இருக்கும்,அட‌ அறைக்குள்ளே சிறைவைத்தால்வேறென்ன‌ இருக்கும்…

உற‌வோடு உற‌வாட‌தொலைபேசி என‌க்கு,அதில் போன‌ காசுக்குஇங்கேது க‌ண‌க்கு…இங்கே ம‌னைவியோடு உற‌வாடிபிள்ளை பெற‌முடியாம‌ல்,பில்லை பெற்ற‌வ‌ர் ஆயிர‌ம்…இள‌மையும் வேலைக்குஇரையாகி போச்சு,

கால‌மும் காசுக்குக‌ரியாகி போச்சு,த‌லையெல்லாம் அத‌ற்குள்ளேந‌ரையாகி போச்சு,காசாவ‌து மீந்த‌தாசெல‌வாகி போச்சு…வ‌ருமான‌ம் வ‌ருமுன்னேசெல‌வு வ‌ந்து சேர்ந்திடும்,வெறுமாக‌ ஊர் சென்றால்உற‌வு வ‌ந்து சேருமா?காசுக் க‌ண‌க்குக‌ள்க‌வ‌லை த‌ருகிற‌து,க‌ட‌ந்த‌ கால‌ம்தான்க‌ண்ணில் வ‌ருகிற‌து…

இனி இஷ்ட்ட‌ப்ப‌ட்டாலும்,க‌ஷ்ட்ட‌ப்ப‌ட்டாலும்,ந‌ஷ்ட்ட‌ப்ப‌ட்ட‌து திரும்பாது…எந்நாடு சென்றாலும்என் நாடு ஆகாது,சொர்க‌மே த‌ந்தாலும் ‍ ம‌ன‌தில்
தாய் நாடு சாகாது

No comments:

Post a Comment