நல்லடியார்களின் கப்ருகளின்மீது…




ரஸூல் (ஸல்) அவர்கள் கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றின்மீது எதனையும் எழுப்படுவதையும் தடுத்துள்ளார்கள் என அவர்களின் அன்புத்தோழர் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதி)
    யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்கும் இடமாக ஆக்கிய காரணத்தால்,  அல்லாஹ்  சபித்துவிட்டான்  என  தன்னுடைய  மரண  தருவாயில்  நபி(ஸல்)  அவர்கள் கூறினார்கள், என அவர்களின் அன்பு மனைவி அன்னை ஆயிஸா அவர்கள் அறிவித்துவிட்டு, “இவ்வாறு ரஸூல் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கா விட்டால் அவர்களின் கப்ரும் (தரைமட்டத்தைவிட)உயர்தப்பட்டிருக்கும் “என்று கூறினார்கள் .(புகாரி)
    கப்ருகள் பூசப்படுவதையும் , அதன்மீது உட்கார்வதையும் ரஸூல் (ஸல்) அவர்கள்  தடுத்தார்கள்.  ஜாபிர் (ரலி)  முஸ்லிம்
    யூத, கிறிஸ்தவர்களில் ஒரு நல்ல மனிதன் இறந்து விடும்போது அவனது கபுரின் மீது ஒரு வணங்கும் இடத்தை கட்டிக்கொள்வார்கள், நாளடைவில் அதில் சில வடிவங்களையும் அமைத்துக்கொள்வார்கள். அல்லாஹ்விடம் இவர்களே மிகக் கெட்டவர்கள். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அன்னை ஆயிஸா (ரலி) (புகாரி)

கப்ருகளுக்கு ஸஜ்தா செய்வாயா ?

    நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் அதற்கு ஸஜ்தா செய்வாயா? என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.” அவ்வாறு நான்செய்யமாட்டேன் “என நான் பதில் கூறினேன் . அதற்கு அவர்கள் ஆம்! கப்ருக்கு ஸஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள் . கைஸிம்னு சயீத் (ரலி) (அபூதாவூத்)

கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை……

    கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை ரஸூல் (ஸல்) அவர்கள் சபித்தார்கள் .என அவர்களின் நெருங்கிய தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் . (இப்னுமாஜா) . .
    தரை மட்டத்திற்குமேல் உயரமாகக் கட்டப்பட்ட எந்த கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டுவிடாதே! என்று  நபி(ஸல்) அவர்கள் என்னை  நியமித்தார்கள்  அதே பணியைச் செய்து வர உன்னை  நான் அனுப்பி வைக்கிறேன் என்று அபுல் ஹய்யாஜ்  என்பவரை நோக்கி அலி (ரலி) அவர்கள்  கூறினார்கள்.  நூல்: முஸ்லிம்
    யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்.  அபூஹுரைரா(ரலி)  புகாரி, முஸ்லிம்

No comments:

Post a Comment