அன்புத் தம்பி! எப்போது உன் கல்யாணம்?

\[ இளைஞர்களே! உங்கள் திருமண வாழ்வு குறித்து முடிவு எடுக்க
 வேண்டியது நீங்கள் தான்! நீங்கள் தான்! நீங்கள் தான்


 எனவேஉங்கள் எதிர்காலம் குறித்து நீங்கள் தெளிவாக 
சிந்தியுங்கள்.
குடும்பத்துக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைக


 ஒரு புறம்;

 இன்னொரு புறம் நீங்கள் உங்களுக்கே செய்து கொள்ள


 வேண்டிய கடமைகளும் இருக்கின்றன. இறைவன் உங்களிடம் 


எதிர்பார்ப்பது ஒரு நடு நிலைமையான போக்கே தவிர 


ஒன்றுக்காக இன்னொன்றை தியாகம் செய்து விடுவதை அல்ல!]



நம் சமூகத்தில் எழுதப் படாத சட்டங்கள் நிறைய இருக்கின்றன.
 அறிவுக்குப் பொருந்தாத பல விஷயங்கள் – "இது இப்படித் தான்!
 எல்லோரும் இப்படித் தான் செய்கிறார்கள், நாமும் அப்படித் தான் 
செய்திட வேண்டும்" என்று மக்கள் அவைகளைக் கண்ணை மூடிக் 
கொண்டு காலா காலமாக பின் பற்றி வருகின்றனர். அவை சரி தானா, 
அவைகளை இன்னும் விடாப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்கத் தான் 
வேண்டுமா என்று சிந்தித்துப் பார்த்திடக் கூட நேரமில்லை 
நம்மவர்களுக்கு. இப்படிப் பட்ட எழுதப் படாத சட்டங்களுக்கு, 
விதிகளுக்கு நம்மிடம் பஞ்சமே இல்லை!
நான் சொல்ல வருவது மார்க்கம் சம்பந்தப் பட்ட – ஷிர்க் மற்றும் 
பித்அத் – போன்ற விஷயங்களைப் பற்றி அல்ல! அவை குறித்து
 நிறைய பேசப் பட்டு வருகின்றன. எழுதப் பட்டும் 
விவாதிக்கப் பட்டும் வருகின்றன.
இங்கே நாம் விவாதிக்க விருப்பது குடும்பம் சார்ந்த
 விஷயங்கள் குறித்துத் தான். இது குறித்து பல விஷயங்களை 
நாம் ஆழமாக விவாதிக்க வேண்டியுள்ளது. ஒவ்வொன்றாக
 அவைகளை அலசுவோம் இங்கே.
சான்றாக – நமது இளைஞன் ஒருவனை எடுத்துக் கொள்வோம். 
அவன் படிக்கிறான். படித்து முடிக்கிறான். வேலைக்குச் 
செல்கிறான். சம்பாதிக்கின்றான். சரி! அவன் எப்போது
 திருமணம் செய்து கொள்ளப் போகின்றான்? "அன்புத் 
தம்பி! எப்போது உன் கல்யாணம்?" என்று கேட்டால்
 என்ன பதில் அவனிடமிருந்து வருகிறது?
"அதெல்லாம் இப்ப எப்படி சார்? இன்னும் என் தங்கைகளுக்கே
 திருமணம் ஆகவில்லை; என் திருமணம் குறித்தெல்லாம்
 இப்ப எப்படி சார் நான் நினைத்துப் பார்க்க முடியும்?"
நாம் கேட்பது என்னவென்றால் – அவன் மனம் உவந்து
 தான் இப்படி ஒரு முடிவை எடுக்கின்றானா? அல்லது உள்ளத்தில் 
திருமண ஆசைகளை வைத்துக் கொண்டு – அதனை வெளியிட 
முடியாத சூழ்நிலைக் கைதியாகி விரக்தியுடன் இப்படிப் பேசுகின்றானா?
இங்கே ஒரு இளைஞன். பெயர் பஷீர் அஹமத். அவனுக்கு 
மூன்று தங்கைகள். பஷீருக்கு பதினைந்து வயதாகும் 
போது தந்தை மாரடைப்பில் இறந்து விட்டார்.
பஷீருக்கு படிப்பு வரவில்லை. (எதிர்பார்த்தது தானே!). 
ஒரு சில ஆண்டுகளிலேயே பயணம் புறப்பட்டு விட்டான்,
 அதாவது அனுப்பி வைக்கப் பட்டு விட்டான். துவக்கத்தில்
மாதச் சம்பளம் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து வந்த 
ஆண்டுகளில் சம்பளம் கணிசமாக உயர்ந்து கொண்டே 
சென்றது. எல்லாவற்றையும் தன் அம்மாவுக்கு அனுப்பிக் 
கொண்டே இருந்தான் பஷீர். ஆண்டுகள் உருண்டோடுகின்றன.

பஷீருக்கு இருபத்து ஐந்து வயது ஆன போது மூத்த தங்கை
 பாத்திமா நஸ்ரினுக்குத் திருமணம் நடந்தேரியது. 
மாப்பிள்ளைக்கும் வயது இருபத்து ஐந்து தான்.
பஷீருக்குத் திருமணம் எப்போது? அம்மா அவர்கள்
 சொல்லி விட்டார்கள் – மூன்று தங்கைகளுக்கும் 
திருமணம் முடிந்த பிறகே பஷீருக்குத் திருமணம் என்று!
ஃபாத்திமா நஸ்ரினுக்கு வேறு சில இடங்களில் இருந்து
 பெண் கேட்டு வந்த போது, "மாப்பிள்ளைக்கு முப்பது வயது
 இருக்கும்போல் தெரிகிறதே" என்று பஷீரின் தாயார் மறுத்து 
விட்டதெல்லாம் வேறு விஷயம்.
ஏன் இந்த இரட்டை நிலை? தங்கைகள் அனைவருக்கும்
 திருமணம் முடித்து விட்டுத் தான் அண்ணன் ஒருவன் தனது
 திருமணம் குறித்து சிந்தித்திட வேண்டும் என்பது என்ன நியாயம்?
பெற்றோர்களே, சண்டைக்கு வராதீர்கள்! "வயதுக்கு வந்த
 தங்கைகளை வீட்டில் வைத்துக் கொண்டு அண்ணன் 
காரனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிறீர்களா?
" – என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.
அதே நேரத்தில் – பெற்றோர் பேச்சை மீற முடியாமல்
 முப்பது வயதைத் தாண்டியும் தன் கடைசித் தங்கைக்கு 
மாப்பிள்ளை தேடிக் கொண்டு – தனது திருமணம் குறித்து 
வீட்டில் பேசத் தயங்குகின்ற நமது இளைஞர்களின் மனப்
 புழுக்கத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்திட வேண்டியது 
யார் பொறுப்பு?
பெற்றோர்களுக்கு நாம் சொல்வது என்னவென்றால் – 
உங்கள் மகளை நீங்கள் எப்படி ஒரு "குமரி"யாகப் பார்க்கிறீர்களோ 
அதுபோல் உங்கள் மகனும் ஒரு "குமரன்" தான்! உங்கள் மகளுக்கு
 காலா காலத்தில் திருமணம் செய்து வைப்பதை எப்படி நீங்கள் 
விரும்புகிறீர்களோ அது போலவே உங்கள் மகனுக்கும் காலா
 காலத்தில் திருமணம் செய்து வைப்பது தான் நியாயம்!
ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? "மகனுக்குத் திருமணம்
 செய்து வைத்து விட்டால், அதன் பிறகு அவன் தன் தங்கைகளுக்குத்
 திருமணம் செய்து வைப்பதில் அலட்சியம் வந்து விடும்!!
 பெற்றோர்களே! உங்கள் மகன்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் 
"நம்பிக்கை" இவ்வளவு தானா?
நாம் கேட்பது என்னவென்றால் – தங்களின் மகள்களுடைய 
வாழ்க்கையை செவ்வனே அமைத்துக் கொடுப்பதில் காட்டுகின்ற 
அக்கரை போல் ஏன் உங்கள் மகன்களின் வாழ்க்கை 
விஷயத்திலும் அக்கரை காட்டக் கூடாது?
உங்கள் மகனுக்குத் திருமண ஆசை வந்து விட்டது 
என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் அதை யாரிடம் போய் 
சொல்வான்? திருமணம் குறித்தெல்லாம் சிந்தித்திட முடியாத 
"சூழ்நிலை" குடும்பத்தில் நிலவுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். 
அவன் தனது பாலியல் தூண்டல்களை (sexual urges) எப்படித் தணித்துக்
 கொள்வான்? அவன் கெட்ட வழிகளை நாடுகிறான் என்று வைத்துக் 
கொள்ளுங்கள். அதற்கு யார் பொறுப்பு?
எனவே பெற்றோர்களே! திருமண வயதில் உங்களுக்கு மகன்கள் 
இருந்தால், அவர்களிடம் நீங்களே மனம் திறந்து பேசுங்கள் –
 அவர்களது திருமணம் குறித்து. அவர்கள் திருமணம் செய்து 
கொள்ளும் மன நிலையில் இருந்தால் – உடனே அவர்களுக்குத் 
திருமணம் செய்து வைத்திடத் தயாராகுங்கள். அவர்களாகவே 
தங்கள் திருமணத்தை ஒத்திப் போட்டால் அது வேறு விஷயம்.
இது விஷயத்தில் நெருங்கிய உறவினர்களுக்கும் ஒரு பொறுப்பு 
இருக்கிறது. நீங்கள் ஒரு இளைஞனுக்கு தாய் மாமன் அல்லது 
சித்தப்பா போன்ற உறவினராக இருக்கிறீர்களா? அந்த இளைஞன் 
சூழ்நிலை கருதி வாய் திறக்க முடியாமல் இருக்கக் கூடும். அந்த
 இளைஞனுக்கு நீங்கள் உதவிட முன் வர வேண்டும். உங்களுக்கு 
வசை மொழிகள் காத்திருக்கலாம். "என் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை
 பார்த்துக் கொடுக்கத் துப்பில்லை, மகனுக்கு கல்யாணம் பேச வந்து 
விட்டீர்களா?"
இறுதியாக இளைஞர்களே! உங்களை நான் கேட்பது எல்லாம் 
இது தான்: உங்கள் திருமண வாழ்வு குறித்து முடிவு எடுக்க 
வேண்டியது நீங்கள் தான்! நீங்கள் தான்! நீங்கள் தான்! எனவே 
உங்கள் எதிர்காலம் குறித்து நீங்கள் தெளிவாக சிந்தியுங்கள்.
குடும்பத்துக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஒரு புறம்
; இன்னொரு புறம் நீங்கள் உங்களுக்கே செய்து கொள்ள 
வேண்டிய கடமைகளும் இருக்கின்றன. இறைவன் 
உங்களிடம் எதிர்பார்ப்பது ஒரு நடு நிலைமையான
 போக்கே தவிர ஒன்றுக்காக இன்னொன்றை தியாகம் 
செய்து விடுவதை அல்ல!
எனவே தான் கேட்கிறேன்: அன்புத் தம்பி! எப்போது உன் கல்யாணம்?
POSTED BY : DULKER ENAYAM

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள்! அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்!!



திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள்! அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்!!PrintE-mail



[ இளைஞர்கள், `அம்மாவைப் போல் கவனித்துக்கொள்ளும் 
பெண் தேவை!' என்கிறார்கள். அவர்கள் என்ன தப்பு 
செய்தாலும் அதை எல்லாம் அம்மா தாங்கிக்கொண்டு அனுசரித்துப்போவார்கள்.. அதுபோல் தன் மனைவியும்
 செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்த
 நிலை இப்போது அப்படியேமாறி பெண்களும், `எங்களை 
அப்பா நன்றாக கவனித்துக்கொள்கிறார். அதனால் அப்பா
 போன்று பாதுகாக்கும் மாப்பிள்ளை வேண்டும்!` 
என்கிறார்கள். இங்குதான் நெருக்கடி உருவாகிறது.
 அம்மா மாதிரி பெண்ணும் கிடைக்கமாட்டாள். அப்பா
 மாதிரி மாப்பிள்ளையும் கிடைக்கமாட்டார்.
பெண் பார்க்கப் போகும்போது மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிடம், `வீட்டில் 
சமைக்கணும்' என்று சொன்னால், அவள் கேட்டதும் கெட்ட வார்த்தையை 
கேட்டதுபோல் துடித்துப்போகிறாள். `என் அம்மாவுக்கே நான் சமையல் செய்து 
போட்டதில்லை. மாமியாருக்கு ஏன் சமைத்து போடவேண்டும்?` என்று கேட்கிறாள்.
"நமது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும் என்ற திடமான நம்பிக்கை
 இன்றைய பெண்களிடம் இல்லை. `எப்படி அமையுமோ?', `சரிப்பட்டு வருதான்னு
 பார்ப்போம்' என்பது மாதிரியான குழப்பங்களோடுதான் ஒவ்வொரு வரனையும் 
அணுகுகிறார்கள்.
"இளம்பெண்களிடம் சுயநலம் மிகுந்துவிட்டது. மாமனார், மாமியார், மைத்துனர்,
 நாத்தனார்கள் எல்லாம் இருக்கக்கூடாது. கணவர் மட்டுமே இருக்கவேண்டும்
 என்று எதிர்பார்க்கிறார்கள்.
இதையும் மீறி ஏகப்பட்ட செலவுடன் திருமணம் நடைபெற்றபிறகு சில்லரை
 காரணங்களுக்காக ''டைவர்ஸ்'' கேட்கும் பெண்கள் அதிகரித்து வருகிறார்கள்.]
அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்
அழகு, குடும்பம், அந்தஸ்து அது இது என்று ஆயிரம் பார்த்து பேசி முடிக்கப்படும்
 திருமணங்கள், திடீரென பெண்களால் தடுத்து நிறுத்தப்படுகின்றன.
இன்னொரு புறத்தில் 30 வயதை கடந்துவிட்ட இளைஞர்களில் பலர் தங்கள்
நண்பர்களுக்கும், `என்னடா நேத்து போன இடம் என்ன ஆச்சு? என் கதையும்
 உன் கதை மாதிரிதான். அந்தப் பொண்ணும் என்னை வேண்டாம்னு சொல்லிட்டா!
நமக்கெல்லாம் என்னடா குறை. ஏன் நல்ல பொண்ணு அமையவே மாட்டேங்கிறது..
` என்று தங்களுக்கும் போன் போட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இளைஞர்களின் அம்மாக்கள் நிலை அதைவிட மோசம். நெல்லையில் இருந்து
சென்னைக்கு போன் போட்டு, `எங்கேயாவது நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க.
. பையனுக்கு வயது ஏறிட்டே போகுது!' என்று கவலைப்படுகிறார்கள்.
இதைவிட எல்லாம் அதிர்ச்சியான விஷயம். பெண் பார்த்து பேசி முடிவு செய்து
 நிச்சயதார்த்தம் முடிந்த பின்பும் மாப்பிள்ளை வீட்டார் தினமும் தூக்கத்தை
தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரத்திலும் பெண் வீட்டில் இருந்து
போன் வரலாம். `கல்யாணத்தில் விருப்பமில்லை. நிறுத்திடுங்கோன்னு
`குண்டு போடலாம்' என்று பயந்து போயிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் என்ன காரணம்?
சமூக ஆர்வலர் ஒருவர் சொல்கிறார்...
"இளம்பெண்களிடம் சுயநலம் மிகுந்துவிட்டது. மாமனார், மாமியார், மைத்துனர்,
நாத்தனார்கள் எல்லாம் இருக்கக்கூடாது. கணவர் மட்டுமே இருக்கவேண்டும் என்று
எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை அப்படிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் திருமணம்
 செய்துகொள்ள அவள் சம்மதித்தாலும் `திருமணம் ஆனதும் இன்னொரு ஊருக்கு
டிரான்ஸ்பர் வாங்கிவிட்டு போய்விட வேண்டும்' என்று தூரத்தில் தனிக்குடித்தனம்
 நடத்த நிபந்தனை போடுகிறாள்.
பெண்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அதனால் நாம் யாரையும் சார்ந்திருக்க
 வேண்டியதில்லை. அனுசரிக்கவும் வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள்.
அதை பெண்களின் தன்னம்பிக்கை என்று சொல்வதா அல்லது அடாவடித்தனம் என்று
சொல்வதா என்று தெரியவில்லை. பெற்றோரும் மகளின் வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருப்பதால் மகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களால்
கருத்துசொல்ல முடியவில்லை. அதனால்தான் முதிர்கன்னிகள் அதிகரித்து வருகிறார்கள்.
பெண் பார்க்கப் போகும்போது மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிடம், `வீட்டில்
சமைக்கணும்' என்று சொன்னால், அவள் கேட்டாலே கெட்ட வார்த்தையை
கேட்டதுபோல் துடித்துப்போகிறாள். `என் அம்மாவுக்கே நான் சமையல்
செய்து போட்டதில்லை. மாமியாருக்கு ஏன் சமைத்து போடவேண்டும்?`
 என்று கேட்கிறாள்.
இப்போது பெண்கள் ஒவ்வொரு வரனையும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள்.
பிரபலமான வெளிநாட்டு வங்கி ஒன்றில் வேலைபார்க்கும் பையன் அவன்
.
 அவனுக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை. ஒருமுறை
அவனது வங்கிக்கு போன நான் அங்கே அழகழகான பெண்கள் இருப்பதை
 பார்த்துவிட்டு, `அவர்களில் யாரையாவது கல்யாணம் செய்துகொள்ளேன்'
 என்றேன். உடனே அவன், `இந்த பெண்களுக்கு உடைகளும், லிப்ஸ்டிக்கும்
 வாங்கிக்கொடுத்து ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் செல்வதற்கே என்
 சம்பளம் போதாது. திருமணம் முடிந்த பின்பும் அவர்கள் சம்பளத்தை
அப்படியே வங்கியில் சேமித்துவிடுவார்கள். நம்ம சம்பளத்தில்தான்
 எல்லாம் நடக்கும் என்று கூறிவிட்டான். இப்போதும் அவனுக்கு பெண்
தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்போது திருமணம் நடக்குமோ
தெரியவில்லை..''- என்கிறார், அவர்.
"திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரிடம் நான், `
சமைக்கத் தெரிந்த, பொறுப்பாக உங்கள் பெற்றோரைக் கவனித்துக்
கொள்ளக்கூடிய, உங்கள் மீதும் அதிக அக்கறை செலுத்தக்கூடிய பெண் தேவையா?
அதிகமாக சம்பாதிக்கும் டீ கூட போடத் தெரியாத பெண் தேவையா?`
என்று கேட்டேன். அவர் என்னைப் பார்த்து, `என்ன இப்படி ஒரு கேள்வியை
கேட்டுட்டீங்க?! என்னை கவனிச்சுக்கிறது, பெற்றோரை கவனிச்சிக்கிறது
 எல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. பணம் ரொம்ப முக்கியம். அதனால
 வேலைக்கு போய் நிறைய சம்பளம் வாங்குகிற பெண்தான் வேண்டும்`
 என்றார். இப்படி ஆண்கள் பணத்தை அடிப்படையாக வைத்து
பெண் தேடுவதுபோல், பெண்களும் பணத்தை அடிப்படையாக
வைத்துதான் மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கிறார்கள்.
இளைஞர்கள், `அம்மாவைப் போல் கவனித்துக்கொள்ளும் பெண் தேவை'
என்கிறார்கள். அவர்கள் என்ன தப்பு செய்தாலும் அதை எல்லாம் அம்மா
தாங்கிக்கொண்டு அனுசரித்துப்போவார்கள்.. அதுபோல் தன் மனைவியும்
செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்த நிலை இப்போது
அப்படியேமாறி பெண்களும், `எங்களை அப்பா நன்றாக கவனித்துக்கொள்கிறார்
 அதனால் அப்பா போன்று பாதுகாக்கும் மாப்பிள்ளை வேண்டும்` என்கிறார்கள்.
 இங்குதான் நெருக்கடி உருவாகிறது. அம்மா மாதிரி பெண்ணும் கிடைக்கமாட்டாள். 


அப்பா மாதிரி மாப்பிள்ளையும் கிடைக்கமாட்டார்.
பெற்றோரின் நிர்ப்பந்தம், வரனின் அழகு, வருமானம், அவருடைய குடும்பம்
போன்றவைகளை எல்லாம் பார்த்து முதலில் பெண் நிச்சயதார்த்தத்திற்கு
சம்மதித்துவிடுகிறாள். பின்பு திருமணத்திற்கு முந்தைய கால இடைவெளியில் பையன்,
 பெண் இருவரும் செல்ஃபோனில் பேசுகிறார்கள். அப்போதுதான் அவளது
 சிந்தனை பல்வேறு விதங்களில் விரிகிறது. இருவருக்கும் இடையே
பொருத்தமில்லாமல் முரண்பாடாக இருக்கும் விஷயங்களை அவள்
ஆழ்ந்து கவனிக்கிறாள். அவைகளை திருமணத்திற்கு பின்பு சரிசெய்து விடலாம்
 என்று பெண்கள் `ரிஸ்க்' எடுக்க தயார் இல்லாததால், நிச்சயதார்த்தம்
முடிந்தாலும் திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள். இது இன்று பல இடங்களி
 நடக்கும் எதார்த்தமான உண்மை.

இன்றைய பெண்கள் அவர்களே சம்பாதித்து தன் பெற்றோருக்கும் கொடுக்கும்
 நிலையில் இருப்பதால் அவளுக்கு பிடிக்கவில்லை என்றால்,
`உடனே நிறுத்திவிடுங்கள்' என்று உத்தரவிடுகிறாம். பெற்றோருக்கு
அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்றாகிவிட்டது.
முன்பெல்லாம் சமூக அந்தஸ்து, சமூக பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு,
 நல்ல துணை கிடைத்தல், சட்டரீதியான செக்ஸ் தேவை ஈடேறுதல்
 போன்றவை எல்லாம் பெண்களுக்கு திருமணத்தின் மூலம்தான் கிடைத்தது.
 இன்று அவை அனைத்தும் திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கிறது
என்று சொல்வதற்கில்லை.
பெண்கள் கல்யாணத்தை தவிர்க்க அல்லது கல்யாணத்தைப் பற்றி பயப்பட
 நிறைய காரணங்கள் இருக்கின்றன. கல்யாணம் செய்துகொண்டால் நிறைய
பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியதிருக்கும். நிறைய கடமைகள் தங்களுக்கு
வந்துவிடும் என்று நினைத்து திருமணத்தை தவிர்க்கிறார்கள். இதற்கு
`கமிட்மென்ட் ஃபோபியா' என்று பெயர்.
ஒரு சில இடங்களில் தங்களுக்கு வரதட்சணை எதுவும் தேவையில்லை
என்று சொல்லும் பையன் வீட்டார், நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு
`அது கிடைக்குமா.. இது கிடைக்குமா?' என்று பெண்வீட்டாரிடம் கேட்கத்
தொடங்குவார்கள். அதனால் வெறுப்படைந்துபோய் திருமணத்தை
 நிறுத்திவிடும் பெண்களும் உண்டு. நிச்சயதார்த்தம் நடந்த பின்பு
 திருமணம் நடக்காமல் போக, பெண்கள் மட்டும் காரணம் அல்ல.
ஆண்களும் காரணமாக இருக்கிறார்கள்.
சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டிருந்தால்- செக்ஸ்ரீதியான
கசப்புகளை சந்தித்திருந்தால்- தாம்பத்ய வாழ்க்கைக்கு தான் பொருத்தமானவள்
இல்லை என்று பெண்கள் கருதினால்- அவர்கள் திருமணத்தினை தவிர்த்துவிடுகிறார்கள்
. அத்தகைய பாதிப்புகள் அனைத்துமே சரிசெய்யக்கூடியவை'' -என்கிறார், மனோதத்துவ
ஆலோசகர் ஒருவர்.
o சம்பவம் ஒன்று: 25 வயதான அழகான அந்த பெண்ணுக்கும், 30 வயதான அழகான
இளைஞனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. விறு விறுப்பாக மணவிழா
அழைப்பிதழை வழங்கிக் கொண்டிருந்த மணமகன் வீட்டாரை, முகத்தை
தொங்கபோட்டபடி சந்திக்க வந்திருந்தார், மணப் பெண்ணின் அப்பா.
"மன்னிச்சிடுங்க..! நேற்று திடீர்னு என் மகள் `கல்யாணத்தை எப்படியாவது
 நிறுத்திடுங்கன்னு` சொன்னாள். காரணத்தைக் கேட்டோம், `உங்க பையனை கட்டிக்கிட்டா
அவளோட திருமண வாழ்க்கை தோல்வியில் முடிஞ்சிடும்ன்னு அவ உள்ளுணர்வு
சொல்லுதாம். அழுறாள்... ஆர்ப்பாட்டம் பண்றாள். அவள் எதுவும் தப்பான
 முடிவு எடுத்திடக்கூடாது. எனக்கு என் பொண்ணு முக்கியம். எப்படியாவது
கல்யாணத்தை நிறுத்திடுங்க!'' என்று அவர் தயங்கித் தயங்கி சொல்கிறார்.
 கல்யாண ஏற்பாடுகள் அப்படியே நிறுத்தப்படுகின்றன.
o சம்பவம் இரண்டு: இருவரும் சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள். பரஸ்பரம்
 இருவரும் பார்த்து பேசி `ஓ.கே' சொன்ன பிறகுதான் நிச்சயதார்த்தம் நடந்தது.
அதன் பிறகு இருவரும் செல்ஃபோனில் பேசிக்கொண்டே இருந்தனர். நேரடியாக
 சந்தித்து பழகவும் செய்தார்கள். அன்று இருவரும் ரசித்து, ருசித்து காபி
அருந்திக்கொண்டிருந்தபோது பையன், `நீ காபி பைத்தியம். உன்னை
 மாதிரி என் அம்மாவும் காபி பைத்தியம். நம்ம கல்யாணத்திற்கு பிறகு
தினமும் காலையில் என் அம்மாவுக்கு ஒரு கப் காபி போட்டுக் கொடுக்கவேண்டியது
 உன் பொறுப்பு' என்றிருக்கிறான். உடனே அவள் முகம் இறுகிவிட்டது.
மறுநாள் காலையில் தன் வருங்கால கணவருக்கு போன் செய்த அவள்,
`ப்ளீஸ் நாம கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். நீங்களும், உங்க அம்மாவும்
என்னை உங்க வீட்டு சமையல் அறையில் அடைக்கிறதுக்கு முயற்சி பண்றீங்க!
 நான் உங்க அளவுக்கே படிச்சிருந்தாலும், உங்களை விட அதிகமாக மாதம்
 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். இப்பவே என்னை சமையல் வேலை
பார்க்க சொல்றீங்களே, கல்யாணத்திற்குப் பிறகு என்னவெல்லாம் சொல்வீங்க..?
வேண்டாம்.. இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம்' என்றாள். அவர்கள்
 இருவருக்கும் செல்ஃபோனிலே வார்த்தைகள் தடிக்க அவ்வளவுதான் அந்த
கல்யாணம் அப்படியே ரத்து செய்யப்பட்டுவிட்டது.
o சம்பவம் மூன்று: சென்னையில் உம்ள `காபி டே` ஒன்றில் இரு
 குடும்பத்தாரும் சந்தித்தார்கள். பெண், மாப்பிம்ளை பையன் அருகில்
 அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். ஐந்து நிமிட பேச்சுக்கு பிறகு, `உங்கள்
குடும்பத்திற்கு எவ்வளவு சொத்து இருக்கிறது. உங்கள் பெயரில் என்னென்ன
இருக்கிறது. நமது திருமணத்திற்கு முன்பே உங்கள் பங்கு சொத்துக்களை
எல்லாம் பிரித்து வாங்கிவிடவேண்டும். திருமணத்திற்கு பின்பு நாம் வாங்கும்
சொத்துக்களை எல்லாம் என் பெயருக்குத்தான் வாங்கவேண்டும். சம்மதமா?'
 என்று கேட்க, அந்த இளைஞன் பக்கத்து டேபிளில் இருந்த தன் தாயாரிடம் இதைச்
 சொல்லத் தயங்க, அந்த தயக்கத்தைக்கூட அவளால் ஏற்றுக்கொம்ள முடியவில்லை
 அதனால் பில்லுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு எழுந்து போய்விட்டாள். அதோடு
அந்த பேச்சுவார்த்தை முடிந்தது.
தட்டிக்கழிக்க பல காரணங்கள்...
"இன்றைக்கு நல்ல வரன்களைக்கூட மிகச் சாதாரண விஷயத்திற்காக, பெண்கள் 
வேண்டாம் என்று தட்டிக்கழித்து விடுகிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு,
மாப்பிம்ளை பையன், தன் வருங்கால மனைவியிடம் `நேற்று மாலையில் எங்கே
 போயிருந்தாய்?' என்று கேட்டிருக்கிறான், அவள் ஷாப்பிங் போனதாக கூறியும்ளாள். 
`யாருடன் போனாய்?' என்று அவன் யதார்த்தமாக கேட்க, `நீங்க ரொம்ப ஓவரா பேசுறீங்க..!
இப்படி சில்லரைத்தனமா கேம்வி கேட்கிறவங்களை எல்லாம் எனக்கு பிடிக்காது. 
ரொம்ப ப்ராட்மைன்டட் பையன்தான் எனக்கு வேணும்' என்று கூறி திருமணத்தை 
நிறுத்திவிட்டாள். திருமணமாகாத பல இளம்பெண்கள், `எங்களுக்கு லைஃப்லேயே 
பிடிக்காத வார்த்தை `காம்ப்ரமைஸ்'. நாங்கள் எதுக்காகவும், யாருக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கமாட்டோம். அப்படி ஒரு வாழ்க்கை தங்களுக்கு தேவையே இல்லை' என்கிறார்கள்.
சில பெண்களின் அம்மாக்கள் சொல்வதைக் கேட்டால் இதைவிட வேடிக்கையாக
 இருக்கும். `எங்க பொண்ணுக்கு விட்டுக்கொடுத்து போகிற பழக்கம் கிடையாது.
அதனால் தனிக்குடித்தனம் போகிற மாதிரி குடும்பம் இருந்தால் சொல்லுங்கள்' 
சொல்லிடுங்க!' என்று சொல்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள் 
விதிப்பதால்

30 வயதான பின்பும் மாப்பிம்ளை அமையாத பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாம் அதிகரித்துக்கொண்டே போகிறது'' என்கிறார், ஒரு திருமண தகவல் மையம் நடத்துனர்.
என்கிறார்கள். எங்க பொண்ணு ரொம்ப `இன்டிபென்ட்டன்ட்'. யாரும் கேள்விகேட்டால்
 அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதை மறந்திடாமல் மாப்பிள்ளை வீட்டாரிடம்

"நமது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும் என்ற திடமான நம்பிக்கை
இன்றைய பெண்களிடம் இல்லை. `எப்படி அமையுமோ?', `சரிப்பட்டு வருதான்
னு பார்ப்போம்' என்பது மாதிரியான குழப்பங்களோடுதான் ஒவ்வொரு வரனையும்
அணுகுகிறார்கள்.
ஒருவழியாக ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து கல்யாணத்தை
நடத்தும்போது, இவர்களது பெற்றோர் 70 வயதைக் கடந்துவிடுகிறார்கள்.
 இதனால் சீரும், சிறப்புமாக நடக்கவேண்டிய திருமணத்தை பெற்றோரின்
வயோதிகம் அல்லது இழப்பின் காரணமாக தானே நடத்திக்கொள்ளவேண்டிய
நிலைக்கு பெண்கள் தம்ளப்படுகிறார்கள்.
இதையும் மீறி ஏகப்பட்ட செலவுடன் திருமணம் நடைபெற்றபிறகு சில்லரை
காரணங்களுக்காக ''டைவர்ஸ்'' கேட்கும் பெண்கள் அதிகரித்து வருகிறார்கள்.
* கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டிவிடுவதால் ஒரு குழந்தையை கண்ணால்
பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவ பரிசோதனை என்று
 அலைச்சல், மன உளைச்சல், பணச் செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.
posted by: DULKER ENAYAM 






வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை!



PrintE-mail




வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை!
16 வயது... பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை
 கொடுக்க கூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, 
கெட்டதும் புரியாது என்பார்கள்.. வெழுத்ததெல்லாம் 
பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து விடுகிறார்கள்.
இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில்
 விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் 
விழுந்துவாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். 
ஓரக்கண்ணால் பார்த்து… தயங்கி தயங்கி பேசி 
சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து… 
காதல் வளர்த்த காலம் போயே போச்சு.

நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை.. உங்க செல்போன் 
நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான்
 மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி 
கணக்கில் பேச்சு… 3 மாதம் கழித்து அந்த பையனுடன் ஓட்டம்.
 இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட நிலை.
 இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் 
என்பது வெளியே தெரியாத கொடுமை.
செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் 
செல்போனுக்க1 ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து 
தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். நேற்று இரவு
 டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் 
முதல் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை 
அவர்களதுபேச்சில் கலந்து மூச்சை சூடாக்குகிறது.
காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி நாமும் 
அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு 
தைரியம் வந்து விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ரன்…
கடந்த 2 மாதங்களில் மட்டும் பள்ளி மாணவிகள் காணாமல் 
போனதாக 50-க்கும் மேற்பட்ட புகார்கள் போலீசுக்கு வந்துள்ளது. 
இதில் வடபகுதிமற்ற பகுதிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் 
பிடிக்கிறது. வாரத்திற்கு குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது 
பதிவாகிறது. காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் 
ஏதாவது ஒரு பையனுடைய வீட்டில்,
 குடித்தனம் நடத்தும் "காதல்" பட காட்சிதான்.
அவர்களை அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி 
பேசும் வசனங்கள் பெற்றோரை ரணமாக்குகிறது.. வாழ்ந்தால் 
அவரோடு, இல்லையேல் மண்ணோடு… என்ற சொல்லும் அந்த 
மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்துவளர்த்து… 
வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் 
பிஞ்சு மனது கனப்பதை காணமுடிகிறது. புண்ணியத்திற்கு 
போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை எடுத்து கூறி
 நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி 
அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது,
செல்போனும், டி.வி.யில் காட்டப்படும் சினிமாவும்தான் 
சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும்
 அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற 
எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் 
சுற்றும் ஊதாரி அவளது காதலனாகிறான்.
 14 முதல் 16 வயதில் காதலனுடன் சுற்றும் நிலை ஏற்படுகிறது.
டி..வி.யில் வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை 
சொல்லுங்க என்பதும் நீங்கள் இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? 
என்பது போலவும் உரையாடி, சிசுகளின் மனதில் நஞ்சை 
ஏற்றுகின்றனர். எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, 
பணக்கார பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு 
ஓடிய காதலர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்வது.
 போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் 
அலைபாய ஆரம்பிக்கிறது…
பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை பேசியிலும் 
மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி 
அரட்டை அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் 
அவனுடன் ஓடிவிடுவது இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது. 
இதில் நல்ல குடும்பத்து பெண்கள் விதிவிலக்கு! போலீஸ்
 நிலையத்திற்கு வாரம் 15 புகார்களும், குறைந்த பட்சம் 10 
வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது.

இதை தடுக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை 
தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி செல்போன் பேச 
அனுமதிக்க கூடாது. தனியாகவோ, தோழிகளுடனோ அதிகமாக 
வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது. திடீரென புது புது ஆடைகளை 
அணிவதையும் முகத்தை பியூட்டிபார்லர் சென்று அழகு
 படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம் காதல் வலையில் 
விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்.

வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க
 அனுமதிக்காதீர்கள். டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும்
 கூடுதல் நன்மை கிடைக்கும். தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் 
நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு முறையாவது 
கண்காணியுங்கள்.படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்
 என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் 
சீரழிந்த பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது 
அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும்.
posted by : DULKER ENAYAM

அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா?



Post image for அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா?



எல்லாம் வல்ல அல்லாஹ் படைத்த உலகின் முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம்(அலை) முதல் இறுதி நபியான நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய உம்மத்துகளில் கடைசி மனிதனாகப் பிறக்கக்கூடிய அனைத்து உயிர்களையும் அல்லாஹ் கைப்பற்றிவிடுவான் என்பதில் நாஸ்திகர்களைத்தவிர மற்ற எந்த கூட்டாத்தாருக்கோ அல்லது எந்த கொள்கையுடையோருக்கோ எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது என்பது திண்ணம். ஏனென்றால் எந்த ஆத்மாவும் இறை நியதிப்படி மரணத்திலிருந்து தப்பமுடியாது. அனைத்து ஆன்மாவும் மரணத்தை சுகித்தே தீரும். இதில் எந்த ஆத்மாவும் விதிவிலக்கல்ல. ஆனால் இன்றைய மனிதன் தன் உலக இச்சைக்கு அடிமையாகி அற்ப வாழ்வில் மூழ்கி மரணத்தை மறந்தவனாக நிலையில்லா வாழ்வின் விளிம்பில் நின்று இறைக்கட்டளைக்கு மாறாக உலக தேவைகளைப் பூர்த்தி செய்ய பகிரங்க முயற்சி செய்கின்றான். 

    மனிதனுடைய இன்றைய வாழ்வின் முழு நோக்கம் காசு, பணங்கள் மட்டும்தான் உலக வாழ்க்கைக்கு முக்கிய அடிப்படை அஸ்திவாரம் என்ற தவறான ஒரு மனக்கணக்கு. இதன் கேட்டை உணராமல் இதற்காக உண்ணாமலும், உறங்காமலும் தினந்தோறும் மனிதனுடைய வாழ்வில் பெரும் போராட்டங்கள் உத்தரவாதமில்லாத தன் உயிரின் இரகசியத்தை எண்ணிப் பார்க்கக்கூட நேரமில்லாத மனித இனம்; படைத்தவன் பறிக்க நாடினால் தடுக்க வழியில்லாத உயிரின் இரகசியம் படைத்தவனுக்கே வெளிச்சம். அவனையும் மறந்து உலக வாழ்வின் ஆடம்பரத்தில் சிக்கி நிராகரிப்பின் பாதையில் தோல்வி நடைபோடும் மனித இனம். இத்தகைய நிராகரிபோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கைதான் கீழ்கண்ட அல்குர்ஆன் வசனங்கள்.
    அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்? அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல அவர்கள் (இதை) உணர்வதில்லை.[23:55,56]  
    இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா? [26:129]  
    ‘‘நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! [4:78]  
    மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள் ”எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று. இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் [8:50,51]   
    உடலில் உலவிக் கொண்டிருக்கும் ஆவி அடங்கிப்போனால் எத்தனைப் புகழோடும் வாழ்ந்தவனாகினும், கற்றறிந்த மேதையாகினும், நிபுணனாகினும், கோடிக்கணக்கான செல்வங்களுக்கு அதிபதியாகினும், அல்லது சந்ததிகளை அதிகமாக அடைந்தவனாகினும் அவன் உயிரை மலக்குகள் கைப்பற்றிச் செல்லும்போது அவனது புகழோ, மேதையோ, நிபுணத்துவமோ செல்வங்களோ, சந்ததிகளோ எந்தப்பயனும் அளிக்காது. அவன் உயிரை மீட்டுத்தரவும் முடியாது.
    அவனுடைய உடலை மூட வேண்டுமானால் கஃபன் துணி தயாராக இருக்கும். தூக்கிச் செல்ல நாற்சக்கர வண்டியோ அல்லது யாரோ நால்வர் தூக்கிச் சென்று புதைகுழியில் வைக்கத் தயாராய் இருப்பார்கள். உள்ளே வைத்தவுடம் அனைவரும் விலகி விடுவர். அங்கு மலக்குகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அவன் மட்டுமே தகுதியானவனாக இருப்பான். இறைக்கட்டளைக்கு அடிபணிந்து வாழ்ந்த உண்மை முஸ்லிம் தக்க பதிலைக்கூறி புது மாப்பிள்ளையைப்போல கியாமநாள் வரை நித்திரையில் மூழ்கியிருப்பான். இறைக்கட்டளைகளை நிராகரித்து வாழ்ந்தவனோ பதிலளிக்க முடியாதவனாக கபுரின் அதாபில் (கல்லறை வேதனை) மூழ்கி துன்பத்தை அனுபவிப்பான்.
    அதனால்தான் நபி(ஸல்) இரண்டு வஸ்துக்களுக்கு இந்த உம்மத்தார்மீது அதிகமாக பயந்தார்கள். “இச்சைக்கு வழிபடுவதும் நெடுநாள் உயிர்த்திருப்பதிலும் ஆதரவு வைப்பதுமான இந்த இரண்டு குணங்களைப் பற்றி நான் பயப்படுவதுபோல் வேறு எந்த வஸ்துவைப் பற்றியும் உங்கள் மீது நான் அவ்வளவாக பயப்படுவதில்லை” என்று கூறினார்கள்.
    நபி(ஸல்) அவர்களின் கூற்று உண்மையாக இன்று ஒவ்வொரு மனிதனுடைய இலக்கு எதை நோக்கி செல்கிறது என்று பார்த்தால் இறைவனாலும், இறைத்தூதராலும் அங்கீகரிக்கப்படாத ஹராமான எந்த வழியிலும் இன்று 1000 சம்பாதிப்பவன் நாளை 50000 சம்பாதிக்கத் துடிக்கிறான். இவ்வாறு கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்திலிருக்கும் மனிதன் வரை 2 கோடிக்கு சொந்தக்காரன் அதை 10 கோடியாக்க என்ன வழி? அதற்காக கொடுக்கல் வாங்கலில் துரோகம் செய்வதும், அடுத்தவருக்கு சொந்தமான சொத்தை அல்லது பொதுச் சொத்தை அபகரிப்பதும் அதையும் மிஞ்சி சொத்து சேர்ப்பதில் இடையூராக இருப்பவனைக் கொலை செய்யக்கூட அஞ்சாத உள்ளம். இருண்ட வாழ்க்கையின் இச்சையை நோக்கி செல்லும் மட்டரகமான அறிவு; இறைவன் அளித்ததைக் கொண்டு திருப்தியுறாத உள்ளம்; உலக இச்சையை தெய்வமாக்கிக் கொண்டது. தன்னுடைய அந்திய காலத்தில் தலை ஆடி கால் தடுமாறி சுகம் கெட்டப் பின்பும் மருத்துவரை நாடி உடல் நலம் பேண ஆசை. இதைத்தான் நபி(ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ந்து இந்த ஹதீஸை அறிவித்தார்கள்.
    மனிதனுக்கு வயது ஆகஆக அவனில் இரு செயல்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஒன்று பொருள் மீது பேராசையும், இரண்டு வயதின்மீது பேராசையும்தான் அவை. அனஸ்(ரழி) புகாரி, முஸ்லிம், திர்மிதி 
    இன்றைய முஸ்லிம்கள் உலக வாழ்வில் மூழ்கிப்போய் இஸ்லாத்தின் கடமைகளை முழுமையாக பேணாமல் கலிமாவை உறுதிப்பாடில்லாமல் வாயளவில் ஒப்புக்கொண்டு தொழுகையை சரிவர பேணாமல், வாரத்தில் ஒரு நாள் ஜும்ஆ தொழுகை தொழுதால் போதும் என்றும், நோன்பை பேனாமலும், ஜகாத்தை முறையாக கொடுக்காமலும், ஹஜ்ஜுடைய காலங்களில் வசதி வாய்ப்பையும் பெற்றும் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாதவைகளை மார்க்கமாக எண்ணி ஊரறிய செய்து வழி அறியாதவன் திசைமாறி செல்வதைப்போல் உலக வாழ்வில் மூழ்கி குஃப்ரைத் தேடிக்கொள்கின்றனர்.
    அல்லாஹ் மனிதனுடைய உண்ணும் உணவிற்கும், உடுத்தும் உடைகளுக்கும், வசிக்கும் வீட்டைப் பற்றியும் மட்டும் உங்களிடம் கேள்வி கேட்கமாட்டான். ஹராமான வழியில் ஈட்டிய பிற சொத்துகளுக்கு உங்கள் மீது விசாரணை செய்வான். அந்த நேரத்தில் கைசேதப்பட்ட மக்களில் நாமும் ஒருவராகி விட வேண்டாம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
    உதாரணமாக நம்ரூத் என்பவன் மிகப்பெரிய அளவில் தேசங்களை ஆண்டான். அவன் அல்லாஹ்விற்கு எதிராக பல சவால்களை விட்டான். மேலும் சுவனபதியின் வருணனைகளை கேள்விப்பட்டு நான் ஒரு சுவர்க்கத்தை அமைத்துக் காட்டுகிறேன் என்று நிறைய செல்வங்களை திரட்டி சொர்க்கத்தை போல ஒன்றை அமைத்தான். ஆனால் அதில் அவன் பிரவேசிக்கும்போது அவனுடைய உயிரை மலக்குகள் வந்து கைப்பற்றி சென்றனர். அவனுடைய ஆடம்பர வாழ்க்கையின் ஆணிவேர் பறிக்கப்பட்டு மாண்டு போனான்.
    அவ்வாறே மூஸா(அலை) அவர்களுடைய சமூகத்தில் காரூன் என்பவன் வாழ்ந்தான். அவன் அந்த சமூகத்தாரின் மீது அட்டூழியம் செய்தான். அல்லாஹ் அவனுக்கு ஏராளமான பொக்கிஷங்கள் அளித்ததின் காரணமாக அச்செல்வங்கள் அவன் கண்ணை மறைத்துவிட்டன. அவனுடைய கஜானா சாவியை சிரமத்துடன் சுமந்து செல்லும் அளவில் இருந்தது(28:76) அதனால் அவன் கர்வத்துடம் தனது சமூகத்தாரிடம் நடந்து கொண்டான். இன்னும் இவை அனைத்தும் என்னுடைய அறிவின் வல்லமையால் நான் சம்பாத்தித்தவை என்று கூறி கர்வமடித்தான்.
    அவனுடைய சமூகத்தார் இவனை மிகவும் பெரும் அதிஷ்டசாலி என்றும் கூறினர். ஆனால் அல்லாஹ்வின் வேதனையில் அகப்பட்டு அவனும், அவனுடைய செல்வங்களும், வீடுகளும் பாதாளத்தில் சொருகப்பட்டு மாண்டு போனான். அவனைப் பெரும் அதிஷ்டசாலி என்று கூறிய அவனுடைய சமூகத்தார் அவனுடைய பேரழிவை கண்டு அல்லாஹ்வின் கிருபை இல்லாதிருந்தால் நாமும் இவ்வாறே அழிந்திருப்போம் என்று கூறினார்கள்.
    இன்று  சில பகுதிகளில் தொழுகையப் பேணக்கூடிய முஸ்லிம்களில் சிலர் மறைமுகமாக வட்டித்தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்துகின்றனர். ஆனால் அல்லாஹ் அதை பார்த்துக் கொண்டிருக்கின்றான். வழிதவறி வந்த செல்வங்களை வழிதவறியே வெளியேற்றிவிட அல்லாஹ் வல்லமை படைத்தவனாக இருக்கின்றான். தேடியவனே அனுபவிக்க முடியாமல் செலவத்திரட்டுகள் அழிந்து போவதை நாம் கண்ணால் காணவில்லையா? அல்லது தகப்பன் தேடிய செல்வங்கள் பிள்ளைகளால் அழிவதை நாம் காணவில்லையா?
நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெªடிளியினால் ஆக்கியிருப்போம்.
    அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்). 
தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக்கொடுத்திருப்போம்) ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்ககையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வெறில்லை ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம். [43:33-35]   
    அதனால்தான் உலகவாழ்வின் மேல் மனிதன் கொண்ட உவப்பைத் தடுக்க நபி(ஸல்) அவர்கள் இப்னு உமர்(ரழி) அவர்களிடம் ஒரு அறிவுரை கூறினார்கள். “இப்னு உமரே நீர் காலையில் எழுந்திருக்கும்போது உன் மனதில் நான் மாலை வரை உயிரோடிருப்பேன் என்று எண்ணாதே. மாலையானால் நாம் காலையில் உயிரோடிருப்பேன் என்று எண்ணாதே. உயிர்வாழ்தில் மரணத்துக்கு வேண்டிய ஆவணங்களை தயார் செய்துகொள். நாளை கியாமத்தில் அல்லாஹ்விடன் உன் நிலை எப்படியிருக்குமோ உனக்குத் தெரியாது” என்று அறிவுரை கூறினார்கள்.
இந்த அறிவுரையை ம்னதில் கொண்டு ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய வழியில் பொருளீட்டி செல்வநிலை அடைந்து உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அனாதை மக்களுக்கும் உதவி புரிந்து அழிவில்லா நிலையான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக ஆக்கிக்கொள்ளவும் நம்ரூது, காரூனின் நிலையை விட்டும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை காத்து நல்லருள் புரிவானாக ஆமீன்.