மதித்திடுவீர்! மஹான் அப்துல்காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களை!! போலிகளை வீசிவிட்டு,போதனைகளை எடுத்திடுவீர்!!

(எனது சகோதரர்களே!) குர்ஆனையும், ஹதீஸையும், உங்கள் கண் முன் விரித்து வைத்துக்கொண்டு, அவற்றை ஆழ்ந்து சிந்தித்து, அவ்விரண்டினையும் ஆதாரமாகக் கொண்டே அமல் செய்யுங்கள்!
(அவ்வாறன்றி) அவர் அப்படி சொல்லியிருக்கிறார். இதில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது எனும் ஆதாரமற்ற கூற்றுக்களைக் கண்டு, மருண்டு விடாதீர்கள்? (எவர் எப்படிச் சொன்னாலும், எதிலும் எப்படி சொல்லப்பட்டிருப்பதாலும் சரி) அல்லாஹ் (தமது வேதத்தில் இப்படித் தானே) கூறுகிறான்: நமது தூதர் உங்களிடம் கொண்டு வந்தவற்றைக் கடைபிடித்து, உங்களை விட்டும் தடுத்தவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள் (59:7)

குறைபாடு, அபாயம் முதலியவற்றிலிருந்து, பாதுகாப்பான நிலை, குர்ஆன், ஹதீஸ் ஆகிய இவ்விரண்டில் மட்டுமே இருக்கிறது. இவையல்லாதவற்றில் நாசம் தானிருக்கின்றன. இவ்விரண்டினைக் கொண்டே ஓர் அடியான் இறைநேசன் எனும் உயர்பதவி அடையமுடியும். ஃபுதூஹுல்கைப் (சொற்பொழிவு – 36)

மேற்காணும் தமது போதனைக்கு சான்றான, அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள், குர்ஆனின் (59:7) திருவசனத்தை மேற்கோள்காட்டி, இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறே குர்ஆனையும், ஹதீஸையும் தமது வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டு, வாழந்து மறைந்த ஒரு நல்லடியாரை இன்று மக்கள், ஏதோ அல்லாஹ் அவர்களிடத்தில் பாதுகாப்பு இலாக்காவை பரிபூரணமாக ஒப்படைத்துவிட்டு, எவரும் பாதுகாப்புக்காக, என்னை அணுக வேண்டாம், தேவையான பாதுகாப்புகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக, அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பொறுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“ஆகவே அனைவரும் தமக்கு ஆபத்துகள் நிகழும்போது, அவர்களையே “யாமுஹ்யத்தீன்” என்று அழைத்து, அனைத்து காரியங்களையும் அவரே வைத்தே பார்த்துக் கொள்ளுங்கள், நான் ஓய்வு எடுக்கப்போகிறேன்” என்று கூறியிருப்பதுபோல், கருதிக்கொண்டு அல்லாஹ்வையும், குர்ஆனையும் அடியோடு ஒதுக்கிவிட்டு ஏன் அப்துல்காதீர் ஜீலானி(ரஹ்) அவர்களின் போதனையைக்கூட சிறிதும் மதிக்காது, அப்பட்டமான வழிகேட்டில் ஆழ்ந்து கிடக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அத்தகையோருக்கு அவர்களின் அரும்போதனைகள்:

உமக்கேற்படும், எக்கஷ்டத்தையும், அல்லாஹ்வன்றி மற்றவரிடம் முறைப்பாடு செய்ய வேண்டாம். ஏனெனில் , அல்லாஹ்(அல்குர்ஆனில்) கூறுகிறான்; அல்லாஹ் உம்மை ஒரு கஷ்டத்தில் மாட்டி வைத்துவிட்டால், அவனன்றி உம்மை அதிலிருந்து விடுவிப்போர் அறவே கிடையாது (10:107) (ஃபத்ஹுர்ரப்பானீ)

மக்களிடம், அப்துல் காதிர்ஜீலானி(ரஹ்) அவர்கள் தமது ஃபத்ஹுர் ரப்பானி எனும் அவர்களின் நூலில் திருகுர்ஆனில் ஒரு வசனத்தையும் சான்று காட்டி, கஷ்டம் ஏற்படும் போது, அல்லாஹ் ஒருவனையே அழைத்து அவனிடமே முறைப்பாடு செய்ய வேண்டும் என்றுதானே கூறியிருக்கிறார்கள் என்று உண்மை நிலையை எடுத்துச் சொன்னால், அதெல்லாம் சரி……

“ஆகாயத்திற்கு மேலிருந்து கொண்டோ, அல்லது ஆழ்கடலின் அடியிலிருந்து கொண்டோ, ஆபத்து வரும் யாரும் என்னை அழைத்தால் நான் வந்து ஆஜராகி, அவர்களைக் காப்பாற்றுவேன்” என்று ஒரு பைத்து, அவர்களே சொல்லியிருப்பதாக கிதாபுகளில் காணப்படுகிறது. என்று கதையளக்குகிறார்கள்.

இத்தகைய “கால, கீல” (அவர் அப்படி சொல்லியிருக்கின்றார் இதில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது) என்பன போன்ற ஆதாரமற்ற கூற்றுக்களைத்தான் கண்டு மருண்டு விட வேண்டாம் என்று அவர்கள் தமது போதனையில் கூறி அவற்றை ஆணித்தரமாக அடித்துத் தகர்த்திருக்கிறார்கள் என்பதை சிந்திப்பார்களாக! 

மொபைல் போன்கள் - சிறு கேமராக்கள் பெண்கள் எச்சரிக்கை

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள்,

மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய

காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக

சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக

இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல

பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர்

நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.



மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு

பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறது

என்பதை இக்கட்டுரையில் காண்போம்.



குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள்

வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக்

கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய

நிலையில் உள்ள சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன்

இருக்கவே, பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை

ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.



பொது இடங்களில் காமிராக்கள் :



பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில்

நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும்

பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து

இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்

கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல

குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில்

வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஹிஜாப்

அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும்.

பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றிய

விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக

இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.



பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :



பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின்

அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள்

எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம்

செலுத்தவும். சக மாணவர்கள் தங்களை காமிராக்களால்

படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று

சகஜமாக நடந்து வருகிறது. கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன்

இருக்கவும்.



பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள் :



பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக்

குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும்

வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு

ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள

அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும்

காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று

நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல்

தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு

பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.



மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை :



மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக

செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது.

மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும்,

ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும்

கவனமாக இருங்கள். காமிராக்கள் எதுவும் பொருத்தப்

பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள்,

மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை

உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள்

அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.



இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி

என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து

தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி

மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து,

வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை

செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான். இன்றைக்கு அந்த

குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள்

இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.



ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க

துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய

விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.



துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு

பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும் :



நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப்

போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய

கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின்

உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும்

பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு

கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப்

பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள்

களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று

பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப்

பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை

மாற்றவும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை

என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த

கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு

இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது.

கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு

வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும்.

ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த

பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக்

காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம்

மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை

மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம்

காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது

தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு

செயல்படவும்.



நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து

மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும்

கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி

வருகிறது. இதற்கு காரணம் கையடக்க காமிராக்கள்தான்

என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில்

சிக்காமல் வாழ பழகிக் கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம்

சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு

எச்சரிக்கை உணர்வை எப்பவும் ஏற்படுத்த வேண்டும். 

இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?


1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்

2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு

3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன 
அபிசேகம்

4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு

5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி

6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்

7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு

8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.

9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்

10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்

11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை

12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்

13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை

14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்

15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.

16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்

17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்

18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி

19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து

20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.

21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு

22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்.

23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை

24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில், கையில் தாவீசு

25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.

26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.

27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம்
 மாதத்தில் தீமிதி உண்டு.

28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா, கத்தம்.

29. அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,

30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்
.
31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.

32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது, யானை ஊர்வலம்.

33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.



இவை மட்டுமா? இன்னும் எத்னை எத்தனையோ?
 சடங்குகள் !

ஒரு முஸ்லிம் சகோதரிக்கு எற்பட்ட நிலை ?

சகோதரிகளின் கவனத்துக்கு

"ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனா, நீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்ல

தமிழகத்தின் முக்கியமான நகரம் ஒன்றில் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த அந்த மாணவியின் வீட்டுக்கு, ''ரக்ஷனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருக்காங்களா..?'' என்று கேட்டு வந்தான் ஓர் இளைஞன். மகளை அழைத்து, ''யாரது உன்னைத் தேடி வந்திருக்கிறது..?'' என்று அப்பா கேட்க, அவனை யாரென்றே அவளுக்குத் தெரியாததால்... ''யாருனே தெரியலயேப்பா...'' என்றாள் ரக்ஷனா. கோபமான அப்ப, அவனைக் கடுமையாகக் கண்டித்தார். உடனே பதிலுக்கு, ''ஹலோ... உங்க பொண்ணோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் நான். ஈவ்னிங் என்கூட ஒரு காபி சாப்பிடலாம் வாங்கனு அவங்கதான் கூப்பிட்டாங்க'' என்று சீறினான்.

''ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனா, நீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்ல; உங்கள நான் வீட்டுக்கு வரச் சொல்லவும் இல்ல'' என்று ரக்ஷனா படபடக்க, அவனை வீட்டை விட்டுத் துரத்தினார் ரக்ஷனாவின் அப்பா.

பிரச்னை முடியவில்லை. வாரம் ஒருவர், ''ரக்ஷனா வீடுதானே... வரச் சொன்னீங்களே...'' என்று படையெடுக்க, ஆத்திரமும் ஆற்றாமையுமாக எங்களிடம் வந்தார் ரக்ஷனாவின் அப்பா. ரக்ஷனாவிடமிருந்தே தொடங்கினோம் விசாரணையை.

''வந்தவங்க யாரும் என்னோட ஃபேஸ்புக் 'ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்’ல இல்ல. அவங்கள நான் வீட்டுக்கும் வர சொல்லல. கூடவே, முதல் ஆள் வந்தப்போவே பதறிப்போய், எதுக்கு வம்புனு என் அக்கவுன்ட்டையே டெலிட் பண்ணிட்டேன். இருந்தும் என்னைச் சுத்தி என்ன நடக்குதுனே புரியல'' என்றார் குழப்பமும், அழுகையுமாக.

அந்த வீக் எண்ட்... ''ரக்ஷனா இருக்காங்களா...'' என்று வந்தவனைப் பிடித்து நாங்கள் 'விசாரிக்க’, ''சார்... வேணும்னா பாருங்க...'' என்று அவன் தன் ஃபேஸ்புக் புரொஃபைலைத் திறந்து காட்டினான். அவனுடைய நண்பர்கள் லிஸ்ட்டில்... ரக்ஷனா! மேலும், அவனுக்கு அவள் அனுப்பியிருந்த மெஸேஜ்கள், தகவல் பரிமாற்றங்களில் எல்லாம்... காதல் சொட்டியது. 'இந்த சனிக்கிழமை எங்க வீட்டுக்கு வா. காபி குடிச்சுட்டே உங்கிட்ட என் காதலை சொல்லணும்’ என்ற மெஸேஜுடன் அவள் அனுப்பியிருந்த வீட்டு முகவரியையும் காட்டி, ''பாருங்க சார்!'' என்றான் அந்த இளைஞன் ஆதாரத்துடன்.

''சார்... இது நான் கிரியேட் பண்ணின அக்கவுன்ட்டே இல்ல. என் போட்டோ, இ-மெயில் ஐ.டி. கொடுத்து வேற யாரோ என் பெயர்ல கிரியேட் பண்ணி, இப்படி என் வாழ்க்கையில விளையாடறாங்க'' என்று அழுதாள் ரக்ஷனா. ஒரே வாரத்தில், அப்படி கேடித்தனம் செய்த கேரள இளைஞனை, அவனுடைய கணினியின் அடையாள எண்ணை வைத்து கண்டுபிடித்தோம்.

அவனுக்கு ரக்ஷனா மீது அப்படியென்ன வெறுப்பு?

''ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கலாம்னு ஃபேஸ்புக் மூலமா அவளுக்கு தகவல் அனுப்பிட்டே இருந்தேன். 'முன்ன பின்ன தெரியாதவங்கள நான் ஃப்ரெண்டா ஏத்துக்கிறதில்ல’னு ரிஜக்ட் செய்துட்டே இருந்தா. ஒரு கட்டத்துல ஆத்திரமாகி, அவளை பழிவாங்க நினைச்சேன். அவ படிக்கிற ஸ்கூல் பெயரை ஃபேஸ்புக்ல குறிப்பிட்டிருந்தா. சென்னையில இருக்கற என் ஃப்ரெண்ட்ஸ் மூலமா அந்த ஸ்கூல் ரெஜிஸ்டர்ல இருந்து அவ அட்ரஸை எடுத்தேன். ஏற்கெனவே தன்னோட புரொஃபைல்ல அவ அப்டேட் பண்ணியிருந்த போட்டோவை எடுத்து, அவ பேர்லயே புதுசா ஒரு அக்கவுன்ட் கிரியேட் பண்ணினேன். அதன் மூலமா பல பசங்ககிட்டயும் அவ பேர்லயே 'சாட்’ பண்ணி, அவ வீட்டுக்குப் போக வெச்சேன்'' என்று கக்கினான் அந்த இளைஞன். அவனைக் கண்டித்து, அந்த அக்கவுன்ட்டை டெலிட் செய்ய வைத்தோம்.

'' 'ஃபேஸ்புக்ல போட்டோ எல்லாம் போடாதே... பிரச்னைகள் வரலாம்’னு என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னதை கேட்காம விட்ட தப்புக்கு நான் கொடுத்திருக்கிற விலை அதிகம்’ என்று தவறை உணர்ந்து வருந்தினாள் ரக்ஷனா

ஆம்... புகைப்படம், மெயில் ஐ.டி, மொபைல் நம்பர், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என நம் பர்சனல் விவரங்களை சமூக வலைதளங்களில் பந்தி வைத்தால் பிரச்னைதான்... குறிப்பாக பெண்களுக்கு!



                                                            இப்படிக்கு துல்கர் இனயம்

உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்! :::)))



ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய பாதுகாப்பை தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு,மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.

நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும்.

நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான். உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும்.

பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று கடந்த டிசம்பர் 2010ல் புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. எழுத்துக்களில் abc யும், எண்களில்123456ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாகபயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.

மேலும் இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள் (Special Symbols) கலந்து அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு?

இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள், உங்கள் பாஸ்வேர்ட் எத்தகையது என்பதை முடிவு செய்யுங்கள்.


6 எழுத்துக்கள்

:

சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 10 நிமிடங்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 10மணி நேரம்+ எண்கள், குறியீடுகள் (Num & Symbols) : 18 நாட்கள்



7 எழுத்துக்கள்சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம்+ பெரிய எழுத்துடன்(Upper Case) : 23 நாட்கள்+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்

8 எழுத்துக்கள்சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள்+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்

9 எழுத்துக்கள்சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மாதங்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள்+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள்


நன்றி : துல்கர் இனயம் 



சமுதாயத்தில் நடைபெறும் மூட பழக்கவழக்கங்கள்



நமது சமுதாயத்தில் நடைபெறும் திருமணம், மரணம், புது வீடு புது வீடு மனை முகூர்த்தம், மற்றும் குடிபுகுதல், போன்ற நிகழ்ச்சிகளில் கடைபிடிக்கப்படுகின்ற சடங்கு சம்பிரதாயங்கள் காலங்காலமாக நடைபெற்று வருகிறது.! மேலும் நமது குடும்பத்தில் உள்ளவர்களாலும் இது பின்பற்றப்பட்டு வருகின்ற சூழலில் நாம் அவற்றை விட்டு எவ்வாறு தவிர்ந்துக் கொள்ள முடியும்? அந்த நிகழ்ச்சிகளை நாம் தவிர்த்தால் நம்மை அவர்கள் தவறாக நினைத்துவிடுவார்களே! என்ற பலவிதமான சிந்தனைகள் சமூகத்தில் நிலவுகிறது.

திருமணத்தின் போது
1.பாக்கு, வெற்றிலை, தேங்காய், மஞ்சள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றைக் கண்ணியப்படுத்தி ஒவ்வொரு திருமண சடங்குகளிலும் அவற்றை முன்னிலைப்படுத்துவது.
2.மாற்று மதத்தவர்களின் பழக்கமான ‘தாலி கட்டுதல்’. திருமணத்தின் போது இந்த தாலியை மணமகன் வீட்டிலிருந்து மணமகள் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்ற போது குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு மாற்றமான எண்ணிலடங்கா சகுனங்களை பார்ப்பது.
3.மணமகன் முதன் முறையாக மணப்பெண் வீட்டிற்கு செல்லும் போது நடைபெறுகின்ற அநாச்சாரங்கள். உதாரணங்கள் : ஆட்டுத்தலை, மஞ்சள் தண்ணீர், மிளகாய் போன்றவற்றை வைத்து ஆரத்தி எடுத்தல்.

மரணத்தின் போது
1.சனிக்கிழமையன்று இறந்துவிட்டால் ‘சனி போனால் தனியாக போகாது’ என்று அந்த ஜனாஸாவுடன் கோழி போன்றவற்றை அனுப்புவது.
2.நன்மை சேர்க்கிறோம் என்ற பெயரில் ஆடல், பாடலுடன் கூடிய ஹல்கா, ராத்தீபு போன்ற ஷிர்க் நிறைந்த செயல்களை செய்வது.
3.மாற்று மதத்தவர்கள் இறந்தவரின் 8, 16 ஆம் நாள் செய்கின்ற திவசங்களைப் போல் பித்அத்தான 3, 7, 40 ஆம் நாள் ஃபாத்திஹா ஓதுதல்.

புது வீடு கட்டும் போதும் குடிபுகும் போதும்
1.புது மனை முகூர்த்தம் என்ற பெயரில் மாற்றுமதத்தவர்களின் பூஜை புனஸ்காரங்களை தம் வீட்டு மனையில் செய்வது
2.புதிய வீடு கட்டி முடித்தவுடன் வீட்டில் இருக்கும் துஷ்ட தேவைகளை, ஜின்களை விரட்டுவதற்காக அவற்றுக்கு ஆடு, மாடு அல்லது கோழி போன்றவற்றை காவு கொடுத்து அதன் இரத்தத்தை வீட்டில் தெளிப்பது.

இது போன்ற ஏராளமான மூட நம்பிக்கைகளுடன் கூடிய சடங்கு சம்பிரதாயங்கள் அல்-குர்ஆன் மற்றும் ஆதாரமான ஹீஸ்களின் போதனைகளுக்கு முற்றிலும் எதிரான செயல்களாகையால் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டுள்ள முஃமின் இவற்றிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும்.

ஷிர்க் மற்றும் பித்அத் நிறைந்த இச்செயல்களைச் செய்யக் கூடியவர்கள் நெருக்கமான உறவினர்களாக இருந்தாலும், பெற்றோர்கள், சகோதர சகோதரிகளாக இருந்தாலும் அதில் நாம் பங்குபெறுவது என்பது நாமும் அத்தகைய மாபாதக செயல்களைச் செய்வதற்கு உடந்தையாக இருந்தவர் போலாவோம். (அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாகவும்).

இதுதான் சத்தியம் என்று தெரிந்த பிறகும் உறவினர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்களே என்று அவர்களுக்கு பயந்து நாம் அந்த மூடத்தனமான செயல்களில் கலந்துக் கொண்டால் இறைவனின் கட்டளைகளை விட மக்களின் கவுரவத்திற்கு முன்னுரிமை கொடுத்த குற்றம் சேரும். அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாகவும். சுவனதென்றல்.

ஸியாரத்.....


கேள்வி : மக்காவுக்கு ஹஜ் உம்ரா செய்யச் செல்லும் போது, மதீனா ஜியாரத் செய்வது அவசியமா? (இக்பால் - ரஹீமா, சவூதி அரேபியா)

ஹஜ் உம்ராவுக்குறிய செயல்கள் அத்தனையும் மக்கா மற்றும் மக்காவைச் சுற்றியுள்ள இடங்களுக்குள்ளேயே முடிந்து விடும். ஹஜ் உம்ராவுக்காக மதீனா செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஹஜ் உம்ராவுக்காக மக்கா செல்லக் கூடியவர்கள் பொதுவாக மதீனாவுக்கும் செல்வதினால் தான் அங்கே செல்வதும் ஹஜ் உம்ராவைச் சேர்ந்த செயலோ என்று எண்ணி விட்டீர்கள். ஹஜ் உம்ராவுக்கும் மதீனாவுக்கும் எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லை.

ஆனால் மக்காவுக்கு செல்லக்கூடியவர்கள் மதீனாவுக்கும் செல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலாவதாக,

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுன்னபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (எந்தப் பள்ளிக்கும்) பயணம் மேற்கொள்ளக் கூடாது.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புஹாரி - எண் 1189)

இந்த ஹதீஸின் படி மற்ற இரு பள்ளிகளைப் போன்று மஸ்ஜிதுன்னபவி (மதீனா பள்ளி) க்கு ஜியாரத் செய்யலாம் என்று தெரிகிறது.

இரண்டாவதாக,

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜித் ஹராம் மற்றும் எனது பள்ளி (மதீனா பள்ளி) யில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புஹாரி - எண் 1190)

அதிகமான நன்மைகளைப் பெற அங்கே சென்று தொழலாம் என்று தெரிகிறது.

மூன்றாவதாக,

பல ஆயிரங்களை செலவு செய்து மக்கா வரை சென்ற பிறகு மதீனா சென்று தொழுது விட்டு வருவோமே என்று மக்கள் நினைப்பதும் ஒரு காரணம்.

இந்த இடத்தில் ஒரு எச்சரிக்கையையும் விடுவது எம் மீது கடமை.

மதீனாவிற்கு செல்லக் கூடியவர்கள் மதீனாவில் அடங்கியுள்ள நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் செல்கிறார்கள். இது தவறாகும். மேலே சுட்டிக் காட்டிய ஹதீஸ்களே இக்கருத்துக்கு போதுமான சான்றாகும். மதீனாவில் தொழுவதையே நோக்கமாக கொண்டு அங்கே சென்ற பிறகு நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்தால் தவறாகாது. அவரவர்களின் எண்ணங்களுக்கேற்ப கூலி கொடுக்கப்படுவார்கள் இன்ஷா அல்லாஹ்.

நம் ஊர் மையவாடிக்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறைப்படி ஜியாரத் செய்தால் என்ன நன்மை கிடைக்குமோ அதே நன்மை தான் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்யும் போதும் கிடைக்கப் போகிறது. நமது உயிரினும் இனிய நபி (ஸல்) அவர்களின் கப்ரு என்பதற்காக அதிகமான நன்மை ஏதும் கிடைக்கப் போவதில்லை. கிடைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அங்கே செல்லக்கூடியவர்களில் ஒரு சிலர் அல்லது ஒரு பிரிவினர் தவறான புரிதலின் காரணமாக நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தராத, இஸ்லாத்திற்கு முரணான காரியங்களைச் செய்கிறார்கள், அப்போது அவர்களெல்லாம் செய்கிறார்களே! நாமும் செய்தால் என்ன என்று எண்ணி, செய்யத்துணிந்து விடுகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை தான். இருந்தாலும் அல்லாஹ்வுக்கு சமமாக அல்லது அல்லாஹ்வின் பிரத்தியேக பண்புகளுக்கு சமமாக எந்தச் சந்தர்ப்பத்திலும் நபி (ஸல்) அவர்களை ஆக்கிவிடக் கூடாது. இதை நபி (ஸல்) அவர்கள் கூட வெறுத்தார்கள்.

'யூத கிருத்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக, அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக மாற்றிவிட்டார்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அபூதாவூத் - எண் 3221)

'எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள்! உங்களது வீடுகளையும் கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள்! நீங்கள் எங்கிருந்த போதிலும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் ஸலவாத்து எனக்கு எத்தி வைக்கப்படுகிறது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : அபூதாவூத் - எண் 2037, அஹ்மத்)

வேறொரு ஹதீஸில் நாம் நபி (ஸல்) அவர்களுக்கு சொல்லும் ஸலாம் கூட அவர்களுக்கு எத்தி வைக்கப்படுகிறது. நம் ஸலாத்தை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக வானவர்கள் கூட நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

ஸலவாத்தும் ஸலாமும் எங்கிருந்து கொண்டும் நபி (ஸல்) அவர்களுக்கு சொல்ல முடியும் என்பது இதிலிருந்து தெரிகிறது.

மேற்கண்ட ஹதீஸிலிருந்து நபி (ஸல்) அவர்களின் கப்ரை பிரத்தியேகமாக ஜியாரத் செய்வதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. மாறாக நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை தான் நமக்காக காத்திருக்கிறது.

நபி (ஸல்) அவர்களின் கப்ரை நோக்கி கையேந்துவது, கப்ரை நோக்கித் தொழுவது, கப்ருக்கு அருகில் இருந்து கொண்டு யாசீன் ஓதுவது, பாத்திஹா ஓதுவது, முண்டியடித்துக் கொண்டு கப்ரை பார்க்க செல்வது போன்ற செயல்களிலிருந்து தவ்ஹீதை புரிந்து கொண்டவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

வெளிநாட்டு உழைப்பு


வெளிநாட்டுக்கு போகிறேன் என்றால் ஒரு புதுமையான சந்தோஷம் பலருக்கு,
ஆனால் அங்கே செல்லும் போது தான் உண்மையில் அங்கு என்ன வாழ்க்கை என்பதை சரியாகத் தெரிந்து கொள்வோம்.

கம்பனிக்குப் போனால் முதீர் தொல்லை, ரூமுக்கு வந்தால் மூட்டைத் தொல்லை
என்று சொல்லிச் சொல்லி பல வருடங்களை நாம் வெளிநாடுகளில் கடத்திவருவது
கவலைகுரிய விடயமாகும்.

தன் தாயை தந்தையைப் பிரிந்து, மனைவி, குழந்தைகளைப் பிரிந்து நாடு துறந்து
கடல் கடந்த ஒரு பயணம் தான் இந்த வெளிநாட்டு சம்பாத்தியம் என்பது.
ஒரு நாட்டின் இராணுவ வீரர்களை விட வெளிநாட்டில் சம்பாதிக்கும்
தொழிளாலர்களை அந்த நாட்டு அரசாங்கம் கன்னியப்படுத்தி கைளரவப்படுத்தி உரிய
வசதிகளை செய்திகொடுக்க வேண்டும்.

வெளிநாடுகளில் வெளிநாட்டு தொழிலாளிகளாக வாழும் காலங்களில் வெளிநாட்டு அரசாங்கம் சர்வதேச தொழிலாளிகள் சட்டத்திற்குற்பட்டு உரிய உரிமைகளை வழங்கி கெளரவப்படுத்த தகுதியானவர்கள் நாங்கள். ஆனால் உள்நாட்டிலும் இல்லை வெளிநாட்டிலும் இல்லை நிம்மதி என்று நாட்களை கடத்தி வருகிறோம்.

தன் வீட்டில் இருக்கும் போது தந்தை என்ற தன் குழந்தையின் அன்பான அழைப்பு,
தாய் வீட்டில் இருக்கும் போது மகன் என்று தாயின் இனிமையான அழைப்பு,
மாமனார் வீட்டில் இருக்கும் போது மருமகன் என்ற ஆரவாரமான உபசரிப்பு.
இவைகளை துறந்து வெளிநாடு சென்றால் கழுதை, குரங்கு என்ற அடை மொழிப்
பெயர்களுடன் கம்பனி முதலாளியுடைய அழைப்பு.

அடுத்த வருடம் ஊருக்குப் போகலாம், அடுத்த டிசம்பரில் போகலாம் என்று அடுத்து
அடுத்து வரும் வருடங்களை எண்ணி, எதிர்பார்த்து பல வருடங்கள்
கடந்துசெல்கின்றன.

தாயகம் திரும்பி தன் சொந்ங்களுடன், குடுமபத்துடன் சேர்ந்து வாழும் போது கூனிக் குறுகி, கம்பு ஊன்றும் வயதில் அல்லது விபத்து, நெஞ்சு வலியில் சிக்கி உயிர்
இலந்து பிணமாய் திரும்புகின்றோம்.

1. படித்து முடித்துவிட்டு அல்லது பரீட்சையில் பெயிலாகி வெளிநாட்டுக்குப் போய் இரண்டு வருடம் அல்லது மூன்று வருடம் பணம் சம்பாதித்துக்கொண்டு நாடு
திரும்பி ஏதாவது வியாபரம் செய்யலாம்,

2. வீடு கட்ட வேண்டி இரண்டு வருடம் வெளிநாட்டுக்குப் போகலாம்,

3. தன் வீட்டில் இருக்கும் வயதுப் பெண்ணை கட்டிக் கொடுக்க வேண்டும், அதற்காக
கொஞ்ச நாளைக்கு வெளிநாட்டுக்குப் போய் உழைக்கலாம்,

4. வியாபாரம் செய்து நக்ஷ்டப்பட்டு கடனாளியாகி, அதனை அடைப்பதற்காகவும்
மீண்டும் அதே வியாபாரத்தை தொடர்வதற்காக வெளிநாட்டுக்குச் சென்று இரண்டு வருடங்கள் சம்பாதிக்கலாம்

இப்படி ஏதோ ஒரு முக்கியமான காரணத்தை வைத்து குறைந்த இரண்டு வருடத்தை எல்லையாக வைத்து விமானம் ஏறுகின்றோம்.

ஆனால் அந்த இரண்டு வருடங்கள் இருவது முதல் முப்பது வருடங்களையும்
தாண்டி வெளிநாட்டில் காலம் கடத்துவது கண்ணீர் வார்த்தைகளால் சொல்லப்பட
வேண்டிய செய்திகளாகும். கடைசியில் இன்டெர்நெட்டில் குடும்பம் நடத்தும்
மனிதர்களாக மாறிவிட்டோம்..

இரண்டு வருடங்கள் என்று ஆரம்பிக்கும் போது அந்த பயணத்திற்குரிய செலவுக்காக
கடன் வாங்குகின்றோம், அந்த கடனை மொத்தமாகக் கொடுத்து,வீட்டாருக்குரிய
மாதாந்த செலவையும் கொடுத்து வரும் போது குறித்த இரண்டு வருடங்கள் முடிந்து விட்டு பார்த்தால் கை எம்டியாகி விடும், விடுமுறையில் ஊருக்குத் திரும்பி அங்கே செலவு செய்யப் பணமிருக்காது.

இன்னும் இரண்டு வருடத்திற்கு இருந்தாலாவது ஏதாவது மீதப்படுத்தலாம் என்று வெளிநாட்டு உழைப்புக் காலம் நீடிக்கப்படுகிறது.

கணவன் வெளிநாட்டில் இருக்கின்றான் என்ற தைரியத்தில் தாராள செலவு,ஆடம்பர வாழ்க்கை என்று எல்லையற்ற வீண் விரயங்கள்,

நவீன கண்டு பிடிப்புக்களாய் நாளுக்கு நாள் மார்க்கட்டுக்கு வரும் பொருட்களை
வாங்க வேண்டி அதற்காக அதிக பணம் செலவிட வேண்டும், பக்கத்து விட்டார் வாங்கிய பொருளை அல்லது அதை விட நல்லதை, விலை கூடுதலானதை வாங்க வேண்டும் என்ற பேராசையும் ஈகோவும் கணவனின் வெளிநாட்டு வாழ்க்கைக்கான காலத்தை நீடிக்கச் செய்கின்றது.
ஆனால் வெளிநாட்டுக்கு வந்து பார்ப்பவர்களுக்குத் தான் தெரியும் கணவன், மகன், நண்பன் எப்படியான தொழில் செய்கின்றான் என்பதை.

வீட்டில் இருக்கும் பெண்கள் தன் வீட்டார் ஒட்டகம் மேய்ப்பாலனா அல்லது
மந்தையர் மேய்கும் இடையனா என்பது தெரியாமல் பணத்தை மட்டும் கணக்கிட்டுப்பார்ப்பவர்களாக இருந்து வருகின்றனர்.

காலத்திற்கேற்ற தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வெளிநாட்டு வாழ்க்கைக்கான எல்லையை நீடிக்கிறது.

கணவன் வெளிநாட்டில் இருக்கிறார், உள்நாட்டில் மனைவி வேலிபாய்கிறால்,
தந்தை வெளிநாட்டில் மகன் மூக்குக் கயிறற்ற குதிரைகளாக, நினைத்தை வித்தைகளை தைரியமாக சாதித்து வருகிறார்கள்.

வெளிநாட்டு வேலைக்கு வந்து ஒரு சில வருடங்கள் கடந்ததும் கஸ்டத்திற்கு மத்தியில் கிடைக்கின்ற நிம்மதி, சொகுசுகளை அனுபவிக்க ஆரம்பிக்கும் போது மீண்டும் ஊரில் சென்று கஸ்டப்பட விருப்பமில்லாது போகின்றது.

ஒரு கூலித் தொழிலாளி வெளிநாடுகளில் வேலை செய்யும் போது இயந்திரங்கள் உதவியுடன் தனது தொழிலை முன்னெடுப்பது அதிக சுகங்களை கொடுத்து நீண்ட காலமாக வெளிநாட்டில் வாழ சந்தர்ப்பமூட்டப்படுகிறது.

இதை சிலர் கவனத்தில் கொண்டு வாழ்வின் பாதியை வெளிநாடுகளில் கடத்துவது குடும்ப, ஊர் மட்டத்தில் பாரிய நக்ஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

உண்மையில் வெளிநாடுகளில் நீண்ட நாள் பணி புரியும் ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காணும் போது ஏற்படும் உணர்ச்சி, கெட்ட எண்ணம்

வீடுகளில் தனியாக இருக்கும் மனைவிமார்களுக்கும் ஏற்படும் என்பதை மன சாட்சியுடன் ஏற்றுக்கொள்கிறவர்கள் நீண்ட நாள் வெளிநாடுகளில் தங்க விரும்பமாட்டார்கள்.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத பெண்கள் வேலிபாய்கிறார்கள்.
வெளிநாடுகளில் வாழும் ஆண்கள் எந்த பெண்ணாவது கைகளில் மாட்டமாட்டார்களா என்று வாழ்வைக் கடத்துகின்றனர். இதற்கான பயிற்சியையும் வழிகாட்டல்களையும் இன்றைய சினிமா மிக அழகாக கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலை சமூக சீரழிவுகளை உண்டுபண்ணுகிறது, குடும்ப கட்டமைப்பை தகர்க்கின்றது, தகாத நோய்களை தோற்றுவிக்கின்றது,

அல்லாஹ்விடத்தில் தீமையாளிகளாக மாற்றுகின்றது,
நெறிமுறையையற்ற எதிர்கால சந்ததியினர் வளர்க்கப்படுகின்றனர்.
இந்த நிலைமைகளை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெளிநாடுகளில் கணவன் வாழும் போது வீட்டில் மனைவி பல பிரச்சினைகளை
சந்திக்கின்றால்,

ஏற்கனவே சொன்னது போல், மனிதனுக்குரிய இயற்கையான காம உணர்ச்சியை பகிர்ந்து கொள்ள ஆல் இல்லை.

தகவல் தொழில்நுட்பம் அதிக வேக வளர்ச்சி கண்டிருப்பதை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து கொண்டு தினம் தினம் மனைவியுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொள்கின்ற கணவன் திறந்த மனம் கொண்டு பல செய்திகளை பகிர்ந்துகொள்வர்,

தொலைபேசியில் பேசும் போது எதிர்முனையில் இருப்பது என் சொந்த மனைவி தானே என்று ஆபாசமாக பேசுவது சர்வ சாதாரணம் தான்.

ஆனால் கணவனும் மனைவியும் இவ்வாறு பேசிவிட்டு தொடர்பு துண்டிக்கப்படுகின்ற போது பேசப்பட்ட காமச் செய்திகள், ஆபாசங்கள் எந்த நிலைக்கு தூண்டிவிடும் என்பதை பற்றி சிந்திப்பதில்லை. இது பாரிய தீமைகளுக்கு வித்திடும்.

தொலைபேசி உரையாடல்களை கல்லத்தனமாக செவியுறுகின்ற சமூகத் துரோகிகளும் நமது சமூகத்தில் இருந்து வருகின்றார்கள்.

அன்றாடம் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள ஒரு ஆண் வீட்டில் இல்லை.
கணவனைத் தவிர பிறருக்குச் சொல்ல முடியாத மன வேதனைகளை பகிர ஆல் இல்லாது போகிறது,

திடிரென ஏற்படும் ஆபத்து, நோய்களுக்கு உதவ கணவனில்லை.
பட்டியல் இவ்வாறு நீண்டு கொண்டு செல்கிறது.

வெளிநாடுகளில் ஆண்களும் இது போன்ற பல பிரச்சினைகளை அல்லது கஸ்டங்களை சந்திக்கின்றனர்.

சரியான உணவில்லை, சமைக்கத் தெரியாது, எத்தனை நாளைக்குத் தான் கடைகளில் உண்ணுவது என்று சொல்லிச் சொல்லியே காலம் கடத்தப்படுகிறது.

கம்பனி விடுதிகளில் சமைக்கும் போது சமைத்த உணவுக்கு என்ன பெயர் என்று தெரியாமலே வருடங்கள் கடக்கின்றன.

உண்மையில் வெளிநாட்டு உழைப்பு முற்றுப்பெறாமைக்கு சில காரணங்கள்
இருக்கின்றன:

நீண்ட காலம் வெளிநாடுகளில் கடத்துபவர்கள் எதிர்காலம் குறித்து சந்தேகம் கொள்வது,
வயது கடந்து மீண்டும் நாடு திரும்பும் போது சொந்த நாட்டில் தேவையான வேளைவாய்ப்பு இல்லாது போதல்,

வெளிநாடுகளில் பெரிய சம்பளம் எடுத்துவிட்டு சொந்த நாட்டில் சிறிய சமபளத்திற்கு வேலை செய்ய முடியாது என்ற மனோ நிலை.

கணவன் வெளிநாட்டில் சில வருடங்கள் தங்கும் போது உள் நாட்டில் மனைவி, பிள்ளைகள் கட்டுபாடற்ற வாழ்க்கையை அனுபவித்த பின் மீண்டும் கணவன் அல்லது தந்தையின் கட்டுப்பாட்டிற்கு உள்ளாகும் போது அனுபவத்திற்கு மாற்றமான நாற்களை சந்திக்க வேண்டி வருகிறது,

இதனால் மீண்டும் கணவன் அல்லது தந்தை வெளிநாட்டில் இருப்பது தான்
நல்லது என்று ஏதாவது காரனத்தைச் சொல்லி அனுப்பிவிடுவது.

வெளிநாட்டில் மாதாந்தம் பெற்றுவந்த ஊதியம் ஆடம்பர வாழ்க்கைக்கு உதவிய
நிலையில் மீண்டும் உள் நாட்டில் அதே நிலையை ஈடுகொடுக்க முடியாமை.

இப்படி ஆண் தரப்பால் அல்லது பெண் தரப்பால் சில சுய நல ரீதியான அல்லது பொது நல ரீதியான காரணங்கள் வெளிநாட்டு ஆயுளை நீடிக்கின்றது.

ஆனால் ஒவ்வொரு குடும்பத் தலைவர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற பொறுப்புக்களை உணர முன் வர வேண்டும்.

இஸ்லாம் அதனை மிக உறுதியாக போதிக்கின்றது.

நீண்ட நாற்கள் குடும்பத்தை பிரிந்து வாழ்வதை இஸ்லாம் கடுமையான எதிர்க்கின்றது, இதனால் ஏற்படும் தீமைகளே அதற்கான காரணங்களாகும்.

குடும்பங்களை துறந்து பல வருடங்கள் வெளிநாடுகளில் காலம் கடத்தும் நண்பர்களே விழித்தெழுவோம் வாருங்கள்.

நாம் சாதிக்கத் தகுதியானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வோம்,
எம்மை படைத்த இறைவன் நமக்கு உணவு தருவான் என்பதை நம்புவோம்,

‘யா அல்லாஹ் போதும் என்ற மனநிலையை கொடு’என்று அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போம்.
வெளிநாட்டில் கிடைத்த அனுபவத்தை வைத்து உள்நாட்டில் ஒரு சிறந்த வேலையை தேடுவோம்,
வெளிநாட்டில் உழைத்த பணத்தை வைத்து உள்நாட்டில் ஒரு சுய தொழிலை ஆரம்பிப்போம்,
தொழில் புரிகிற அதே இடத்தில் குடும்பத்துடன் செட்டாக முயற்சிப்போம்,

உள்நாட்டில் தொழில் வாய்ப்புக்குரிய சந்தர்ப்பம் கிடைக்கும் போது உரிய நேரத்தில் அதனை பயன்படுத்த முயற்சிப்போம்

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. குழந்தையின் மூளை ரகசியம்


இந்த அவசர உலகில் எத்தனை அவசரமான வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம். குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம். அதன் எண்ணற்ற விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள். கருவிலேயே தொடங்குகிறது இதன் கதை.
கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரோன்கள் - உருவாகின்றன. என்ன வேகத்தில்? நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்! கோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்படுத்தப் பட்டவை.
குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களின் மூளை ஏறத்தாழ ''வெறுமையானது''. அதாவது எதையுமே கற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கும். அவர்கள் வளர வளர கண்களால் காணுவதும், காதுகளால் கேட்பதும், தொடு கையினால் உணருவதும், நாக்கினாலே ருசிக்கின்றதும் அவர்களது 'புதிய' மூளையில் பதிந்து மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
நியூரோன்களின் கோர்வைகளிலே தாங்கள் புரிந்து கொண்டவற்றைச் சேமிக்கிறார்கள். குழந்தையின் மூளை கற்றுக் கொள்வதற்கு வசதியான கருவியாகும். குறுகிய காலத்தில் குழந்தை எல்லாம் கற்றுக் கொள்ளும். தவழுவதற்கு, நடப்பதற்கு, ஓடுவதற்கு என்று எல்லாவற்றையும் கற்றுக் கொண்டே போகும். எதிலும் தேடல் ஆர்வம் என கல்வி வாழ்க்கை வரை இது நீளும். நாம் எவ்வளவுக்கு குழந்தையுடன் கொஞ்சி, விளையாடுகிறோமோ அந்த அளவுக்கு நல்ல மன வளர்ச்சி இருக்கும்.
இந்த அவசர உலகில் எத்தனை அவசரமான வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம். அவர்கள் தரத்துக்கு நாம் இறங்கி வந்து விளையாட வேண்டும். சிக்கலான நடப்புகளையும், சுற்றுச் சூழலையும் குழந்தைகள், தங்கள் மனதுக்குள்ளே வாங்கிக் கொள்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர். அதே போல ஒவ்வொரு செயலுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர்.
அவர்கள்
 12-18 மாத வயதை எய்தும் போது, கண்பார்வை. திசை, புறமொழி, சைகைகள், உணர்ச்சிகள், மனநெகிழ்ச்சி போன்றவற்றையும் துல்லியமாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பார்கள். அச்சமயத்தில் அவர்கள் நாம் பார்க்கின்ற திசையைப் புரிந்து கொண்டு அதை நோக்கிப் பார்ப்பார்கள். அந்தத் திசையில், அதாவது நாம் நோக்குகின்ற திசையில், காணும் பொருளை அந்நேரத்தில் நாம் சொல்லும் வார்த்தையுடன் பொருத்தி மனதில் இருத்திக் கொள்வார்கள். அதே வேளையில் நாம் வெளிப் படுத்தும் சந்தேகங்களையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். எடுத்துக்காட்டாக, ஏதோ ஒரு புத்தகத்தைக் குழந்தையுடன் சேர்ந்து படிக்கும் போது, அங்கு படத்தில் இருக்கும் ஒரு மிருகத்தைக் காட்டி அதன் பெயரென்ன என்று குழந்தை கேட்கும் போது நாம் ஒரு பெயரைச் சொல்லி ஆனால் அது சரியானதா தெரியவில்லை என்று ஒரு சந்தேகத்தையும் சேர்த்துக் கொண்டால், அந்தச் சொல்லை அந்த மிருகத்துடன் தொடர்புபடுத்தாமல் இலகுவாக மறந்து விடும். பிள்ளைகளின் மூளை வளர்ச்சி முதல் மூன்று ஆண்டுகள் வேகமாக இருக்கும். குழந்தைகளின் மூளை உயிரணுக்களின் வளர்ச்சி அவர்கள் வளரும் சூழலையும், அனுபவங்களையும் பொறுத்து இருக்கும். பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்க வேண்டும்

international life...


கட்டிய மஞ்சள் கயிறின் வாசனை
மாறும் முன்னே -
கட்டியவளை கண்ணீரில் கரைத்து விட்டு
கடனடைத்து காடு கரை வாங்கி சேர்க்க,
கடல் கடந்து நாடு கடந்து
கட்டியவளை நினைத்து கட்டிலுக்கு முத்தமிட்டு
தலையணையை கட்டிக் கொண்டு உறங்குகிறாயே!

கோடிகோடி கட்டி தங்கங்களை கொட்டினாலும்
நீ வாழ மறந்த
வசந்தகால வாழ்க்கை கிடைக்குமா?

பணம் எனும் உணவு தேவைதான் - ஜீரணிக்கிறேன்
வாழ்க்கை எனும் உடலே இல்லையெனில்
உணவு எனும் பணம் உபயோகப்படாதே?

இளைஞனே!
திருப்பிப் பார்!
நீ அனுபவிக்க மறந்த
உன் வாழ்க்கை பாதச் சுவடுகளை



இப்படிக்கு என்றும் அன்புடன் துல்கர் இனயம்
.....

பெண்மணியே உன் வழி என்ன?


இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தில் ஆண்கள் ஓரளவு விழிிப்புணர்வுடன் குர்ஆன், ஹதீது வழியில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் சகோதரிகளே உங்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் நிலையை சற்று சிந்தித்துப்பார். இஸ்லாம் இயம்பும் முறைப்படி உன் வாழ்க்கை அமைந்துள்ளதா? அன்னை பாத்திமா(ரலி) வாழ்ந்த வாழ்க்கை வாழ்கின்றாயா? நபி(ஸல்) அவர்களின் வழியை பின்பற்றுகின்றாயா? மறுமையை நினைத்து நரகத்தை நினைத்து வருந்தினாயா? ஏதோ! இஸ்லாத்தில் பிறந்து விட்டோம் என்ற இருமாப்பில் இன்பம் கண்டுக் கொண்டு இருக்கிறாய்.
    உன் வாழ்க்கையை சற்றே குர்ஆன், ஹதீதுடன் ஒப்பிடு. மார்க்கத்தை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டு. மார்க்கக் கல்வி கற்றுக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் மீது கடமை என்று அல்லாஹ்வும் ரசூலும்(ஸல்) கூறியுள்ளதைப் பார். குர்ஆன், ஹதீதை அறிந்துகொண்டால் அனாச்சாரங்களை அழிக்க நீயே முன்வருவாய்.
    "(நபியே) அந்நாளில் பலூட்டிக் கொண்டிருந்த ஒவ்வொருத் தாயும் தான் பாலூட்டும் குழந்தையை மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பஸ்த்திரியின் கர்ப்பமும் சிதைந்து விடுவதை நீர் காண்பீர். மனிதர்களை சித்தமிழந்தவர்களாக நீர் காண்பீர். அவர்கள் (சித்தம் இழக்க காரணம்) போதையினால் அல்ல, அல்லாஹ்வுடைய வேதனையானது மிகவும் கடினமானது. (அதனைக் கண்டு திடுக்கிட்டு) அவர்கள் சித்தமிழந்து விடுவார்கள். (அல்குர்ஆன் 22:2) என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் சகோதரியே; சிந்தித்துப்பார்.
    "நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அந்த இரண்டையும் கடைபிடிக்கும் காலமெல்லாம் நீங்கள் ஒருபோதும் வழி தவறவே மாட்டீர்கள் ஒன்று அல்குர்ஆன் இரண்டு என்னுடைய சுன்னத்தான வழிமுறை" (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்:முஅத்தா
என்று நபி(ஸல்) அவர்கள் கூறி இருக்க நீ யாரைப் பின்பற்றுகிறாய்? யாருடைய பாதையை பின்பற்றி உன் வாழ்க்கைத் தேய்கிறது. பண்டிதர்கள், தலைவர்கள் என்று தன்னை பறைசாற்றிக் கொள்பவர்கள் கூறுவதையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்காமல் மார்க்கம் என்று எடுத்து நடக்கிறாய்.
    இறைவன் கூறுவதைப்பார்,  ஈமன் கொண்டவர்களே! நிச்சயமாக பண்டிதர்களிலும், குருக்களிலும் அனேகர் மக்களின் சொத்துக்களை தவறான முறையில் சாப்பிடுகின்றார்கள். மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களை தடுக்கின்றார்கள். (அல்குர்ஆன் 9:34)
    பெரியவர்கள் சொல்வதெல்லாம் சிந்தித்து விளங்காமல் மார்க்கம் என்று எண்ணினாயே? இறைமறை கூறுவதைப்பார். மேலும் (17:27, 24:51, 28:50, 20:124) ஆகிய வசனங்களையும் உற்றுநோக்கு. உன் நிலையையும் நீ எண்ணிப்பார்.
    உனக்கு ஏதாவது தேவைப்பட்டால் அவ்லியாக்களின் கப்ரை நோக்கி ஓடுகின்றாய், யார் யாருக்கோ நேர்ச்சை செய்கின்றாய்,  முரீது கொடுக்கும் முல்லாக்களின் காலில் விழுந்து தன்மானம் இழந்து நிற்கின்றாய், மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு பாடுபட்டார்களோ அத்தனை மூட நம்பிக்கைகளையும் குத்தகை எடுத்துக்கொண்டு கும்மாளம் போடுகின்றாய். இதுதான் உன் இஸ்லாத்தின் பண்பா? இதுதான் நீ இஸ்லாத்தின் மீது வைத்துள்ள அன்பா?
    அல்லாஹ்வையன்றி நீ அழைப்பவர்கள் அழிந்துவிடுபவர்கள் என்று நபி(ஸல்) அறிவுரை பகர்ந்தார்கள். ஆனால் நீ செய்வது என்ன? உன் தேவை நிறைவேற "யாமுஹய்யத்தீன்" என்று அழைக்கின்றாய். என்றோ மெளத்தாகி விட்டவர் உன் அழைப்பை கேட்கிறார் என்றால்  விந்தையாக உள்ளது. உனது கூற்று நியாயமானதா? குர்ஆனுடம் ஒப்பிடு.
    நபியே! கப்ருகளில் உள்ளவர்களைச் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை. (35:22) உன் கூற்று சரியா? அல்லது குர்ஆனின் கூற்று சரியா? சிந்தித்துபார். இணைவைக்கும் காரியத்தில் நீ உன்னை ஈடுபடுத்திக்கொள்ளாதே. அல்லாஹ்வின் தகுதிகளை அவனது அடிமைகளுக்கு தந்து உன்னை நீயே அழித்துக் கொள்ளாதே.
    எவர்கள் விசுவாசம் கொண்டு நற்கருமங்கள் செய்கின்றார்களோ அவர்கள் "பிர்தவ்ஸ்" என்னும் சுவர்க்கத்தில் உபசரிக்கப்படுவார்கள் அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (18:107,108)
    நீ இறைவன்மீது வைத்த அன்பிற்காக இறைவன் உனக்கு சுவர்க்கத்தை நிரந்தரமாக தருவதாக வாக்களிக்கின்றான் இதைவிட மாபெரும் பாக்கியம்   உனக்கு என்னவேண்டும்.
    நிராகரிப்பவர்கள் என்னையன்றி என்னுடைய அடியார்களை தம் பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ளலம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக அவர்களுக்கு நாம் நரகத்தையே தயார் செய்து வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 18:102)
    அல்லாஹ்வையன்றி அவனது அடியாளர்களை அழைப்பதை குறித்து இறைவன் எவ்வளவு கடுமையாக எச்சரிக்கிறான் என்பதை ஆராய்ந்துபார்.
    இவ்வுலக வாழ்க்கை உன்னை வீன் வழியில் அழைத்து சென்றுவிடாமல்  எச்சரிக்கையாக இரு. உனக்கு ஏதாவது ஒரு தீங்கு நேர்ந்தால் உடனே மண்ணறையை நோக்கி ஓடுகிறாய். உன் ஓட்டத்தின் முடிவு உன்னையே நரகிற்கு அனுப்பும்; அதற்கு முன் உஷாராகிவிடு உன் செயல்களை திருத்திக்கொள். கப்ரு மோகம் கொண்டு அலையும் உன் நிலையை உடன் மாற்றிக்கொள்.
    கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சாபம் உனக்கு தேவையா? யோசித்து உன்செயலைத் திருத்திக்கொள். முரீது விற்பனை முல்லாக்கள் உன்னை முடக்க முற்படுவார்கள். முடங்கிவிடாமல் தவ்ஹீதின் பாதையில் முன்னேறிச் செல்.

    அல்லாஹ்வின் குர்ஆனையும்,  நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளையும் கடைப்பிடித்துச் செல். அதுவே உன்னை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் சுந்தர வழியாகும்.
இப்படிக்கு என்றும் அன்புடன் துல்கர் இனயம்

கபுறு வணங்கிகளின் கதை கேளுங்கள் ...!





கபுறு வணங்கிகளின் கதை கேளுங்கள் ...!

  • இவங்கத்தான் சுன்னத் வல் ஜமாஅத்தாம்:

ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இபுனு அரபி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் வபாத்தான பிறகு அவர்களே தங்களது வீட்டிற்கு வந்தார்கள். தங்களது வெள்ளாட்டியைக் கண்டு அவளது சுக செய்திகளையும் நிலைமைகளையும் விசாரித்தார்கள். எல்லா விஷயங்களையும் அவள் சவிஸ்தாரமாக எடுத்துக் கூறினாள். அவர்கள் அவளிடமிருந்து விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து சென்றார்கள் என்பதாக புஸுஸுல் ஹிக்கம் உடைய ஷரஹில் இமாம் ஷைகுஜுந்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுவதாக ஸஆதத்துத் தாரைன் 402-வது பக்கத்தில் வரையப்பட்டுள்ளது.

"அவுலியாக்களுக்கு ஆண்டவனால் அருளப்பட்டிருக்கும் கறாமாத்து அதிசயத்தின் பொருட்டால் ரூஹானியத்தான சக்தியைக் கொண்டு ஹயாத்திலும் மவுத்துக்குப் பிறகும் அவர்கள் வெளிப்பட்டு உலகில் நடமாடும் சக்தியுண்டு" என்பதாக இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அல்கபருத்தால்லு அலா-வுஜுதில் குத்பி வல் அப்தால், என்ற நூலிலும், இமாம் ஸெய்யிது ஷஹாபுத்தீன் அஹ்மது ஹுஸைனீ ஹமவீ ஹனபீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் நபஹாத்துல் குர்பிவல் இத்திஸால், என்ற நூலிலும் கூறுகின்றார்கள்.

"அவுலியாக்களில் பெரும்பாலோர் வபாத்துக்குப் பிறகும் கபுருகளிலிருந்து புறப்பட்டு வெளியே போகவும் செய்கிறார்கள். திரும்பவும் கபுருக்குள் மீளவும் செய்கிறார்கள். போகவர அவர்களுக்கு எத்தகைய தடையுமில்லை" என்பதாக அல்குத்பு இமாம் ஷஃறானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் லத்தாயிபுல் மினன் 1-வது பாகம் 144-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.

"நபிகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தங்களது மவுத்தாகிப் போன ஸஹாபாக்களின் அர்வாஹுகள் சகிதம் எல்லா உலகங்களையும் சுயேச்சையாகச் சுற்றி வருவதை அவுலியாக்கள் கண்கூடாகக் கண்டிருக்கின்றார்கள்" என்பதாக இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுவதை, தப்ஸீர் ரூஹுல் பயான் பாகம் 10, பக்கம் 99ல் காணலாம்.

  • கப்ரு வணங்கிகளின் இதற்காதாரமாக வபாத்துக்குப் பிறகு நிகழ்ந்த சில சம்பவங்களைக் காண்க:

இமாம் அப்துல் வஹ்ஹாபு ஷஃரானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஸியாரத்துச் செய்வதற்காக ஸெய்யித் உமர் இபுனு பாரிலு ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடைய கபுரு ஷரீபுக்குச் சென்றபோது அங்கு அவர்களைக் காணாதபடியால் திரும்பிவிட்டார்கள். பிறகு உமர் இபுனு பாரிலு ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இமாம் ஷஃரானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு இடம் சென்று தேவையை முன்னிட்டு வெளியே சென்றிருந்ததாகத் தெரிவித்து மன்னிப்புக் கோரியதாக இமாம் ஷஃறானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களே தங்களுடைய 
நூல் : ஷலதாயிபுல் மினன்' 1-வது பாகம் 144-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.

ஸெய்யிது ஷைகு அப்பாஸ் முர்ஸீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை சனிக்கிழமை சூரியோதயத்திற்கு முன்னும், ஸெய்யிது இபுறாஹிமுல் அஃரஜ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை வெள்ளிக்கிழமை மக்ரிபுக்குப் பின்பும் ஸெய்யிது யாக்கூத்துர் அர்ஷீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைச் செவ்வாய்க்கிழமை லுஹருக்குப் பின்பும் அவரவர்களுடைய கபுருக்குச் சென்று ஸியாரத்துச் செய்யும் படியும் அவர்களெல்லோரும் குறிப்பிட்ட அந்த நேரங்களில் தான் கபுரில் ஆஜராயிருப்பார்களென்றும், இவ்வுண்மையை அகக்கண்ணை உடையவர்களைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்களாகையால், கபுருகளில் அவர்கள் இருக்கவே செய்கின்றார்கள் என்ற எண்ணத்துடன் கஷ்பில்லாதவர்கள் செய்யவேண்டுமென்றும் ஸெய்யிது அலி பதவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் உபதேசித்திருப்பதாக மேற்சொன்ன ( நூல் : லாதயிபுல் மினன் ) அதே பக்கத்தில் வரையப்பட்டுள்ளது.


ஹஜ்ரத் கிலுரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள், இமாமுல் அஃலம் அபூஹனீபா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது வஃளு மஜ்லிசுக்குத் தினந்தோறும் காலை வேளையில் ஆஜராகி ஷரீஅத்துடைய இல்முகளைக் கற்று வந்தார்கள். இமாம் அவர்கள் வபாத்தான பிறகு அந்த மஜ்லிசு நடைபெறவில்லை. கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆண்டவனது உத்தரவு பெற்று, ஹயாத்தில் நடந்தது போலவே மவுத்துக்குப் பின்பும் இமாமுல் அஃளம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது கபுரு ஷரீபுக்கு ஒவ்வொரு காலையிலும் சென்று, ஷரீஅத்துடைய இல்முகளைக் கேட்டுவந்ததாக இமாம் இபுனு ஜவ்ஸீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு 'பதாயிஉ' எனும் பிக்ஹுக் கித்தாபில் வருகிறதாக ஷைகு ஹஸனுல் அதவீ மிஸ்ரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மஷாரிக்குல் அன்வார் 69-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.

நான்கு மதுஹபுடைய இமாம்களுள் ஒருவராகிய அஹ்மது இபுனு ஹம்பலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது ஸியாரத்திற்குச் சென்ற குத்பு றப்பானீ கௌதுஸ்ஸமதானீ, முஹிய்யித்தீன் அப்துல் காதிரு ஜீலானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அன்னாருடைய கபுறு ஷரீபுக்கெதிரே, அதபுடன் நின்று, "அஸ்ஸலாமு அலைக்கும் யாஇமாமல் கிராம்" (சங்கைக்குரிய இமாம் அவர்களே) என்று அழைத்து ஸலாம் சொன்னார்கள். உடனே, கபுரு ஷரீபு இரண்டாகப் பிளந்தது. இமாம் அவர்கள் ஜோதிப் பிரகாசத்தோடு வெளியே பிரசன்னமாகி கௌதுல் அஃளம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கட்டித் தழுவி ஆலிங்கனஞ் செய்தார்கள் நூரானீயான பரிவட்டத்தைப் போர்த்தி, "ஸெய்யிது அப்துல் காதிரே, ஷரீஅத்துடைய இல்முகளும், ஹகீகத்துடைய இல்முகளும் தங்கள்பால் ஹாஜத்தாகின்றன," என்று பகர்ந்து விடைபெற்று மறைந்தார்கள். இச்சம்பவம் ஷபஹ்ஜத்துல்-அஸ்றாரு' கிரந்தத்தில் அறிவிப்பு செய்யப்பட்டிருப்பதாய் ஷதப்ரீஜுல்காத்திர்' 40-வது பக்கத்திலும், ஷபஸ்லுல் கிதாபு' 129-வது பக்கத்திலும் ஹள்ரத் ஷெய்கு அப்துல்ஹக் முஹத்திதுத் திஹ்லவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் 'ஜுப்ததுல் அஸ்றார்' நூலிலும் காணப்படுகின்றது.

குத்புஸ்ஸமான், இமாம் அப்துல் வஹ்ஹாபு ஷஃறானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்:- "நான் எனது குருநாதர் (உஸ்தாது) ஹஜ்ரத் ஸெய்யிது முஹம்மது ஷனாவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடன் அல்குத்புஷ்ஷஹீர், ஸெய்யிது அஹ்மது பதவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது தர்காவுக்கு ஸியாரத்திற்காகச் சென்றிருந்தேன். அவ்வமயம் எனது உஸ்த்தாதவர்கள் கபுரு ஷரீபை முன்னோக்கி, 'நாயகமே! இன்ன காரியத்தை முன்னிட்டு மிஸ்ருக்குப் போகப் பிரயாணமாயிருக்கிறேன். விடை கொடுத்தனுப்புங்கள்' என விண்ணப்பித்து நின்றார்கள்."அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்தவராய் போய் வருக" என்ற நல்வாக்கு கபுருக்குள்ளிருந்து வெளிவந்த சப்தத்தை எனது வெளிரங்கமான இரு காதுகளைக் கொண்டும் நன்கு கேட்டேன்" என்பதாக. இவ்வரலாற்றை இமாம் ஷஃறானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் லதாயிபுல் மினன்' 1-வது பாகம், 180-வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அமீருல் முஃமினீன், ஸெய்யிதுனா அபூபக்கர் ஸித்தீக்கு ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் வபாத்தாகும் போது, "என்னுடைய ஜனாஸாவை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முபாரக்கான அறையின் முன்னால் வையுங்கள். கதவு திறக்கப்பட்டு, அபூபக்கரை உள்ளே கொண்டு வாருங்கள் என்று உத்தரவு வந்தால் மட்டில் அவ்வறையிலேயே அடக்கம் செய்யுங்கள். இன்றேல், பொதுக்கபுருஸ்தானத்தில் அடக்கி விடுங்கள்" என்று வஸிய்யத்துச் செய்திருந்தார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பூட்டப்பட்ட அறைவாயிலின் முன்பு ஜனாஸாவை வைக்கப்பட்டபோது, வாயில் கதவு தானாகவே திறந்து கொண்டது. "தோழரைத் தோழரிடம் அனுப்பி வையுங்கள்" என்ற உத்தரவு புனிதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ரவுளா ஷரீபிலிருந்து வெளிவந்தது. அவ்விதமே அங்கு அடக்கப்பட்டார்கள். இவ்வரலாற்றை இமாம் பக்ருத்தீன் றாஜீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தப்ஸீர் கபீர், 5-வது பாகம் 685-வது பக்கத்தில் கூறுவதாய் 'தப்ரீஹுல் அத்கியா பீ-அஹ்வாலில் அன்பியா', பாகம் 2, பக்கம் 376-ல் வரையப்பட்டுள்ளது.

குத்புஷ் ஷஹீர், ஷைகு முஹம்மது இபுனு சுலைமானுல் ஜஸுலிஷ் ஷாதுலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 870-வது வருஷத்தில் வபாத்தாகி, சூயஸ்பட்டணத்தில் அடக்கப்பட்டார்கள். 77 வருஷங்களுக்குப் பிறகு ஹிஜ்ரி 947-வது வருஷம் அவர்களது கபுரைத் தோண்டப்பட்டது. அவ்வமயம் அவர்களது திரேகம் (தபன்) அடக்கம் செய்யப்பட்ட சமயம் எவ்விதமிருந்ததோ அவ்விதமே உறுப்பில் எத்தகைய சேதமும், மாறுபாடுமின்றி. கபன் துணியில் கூட மண் ஒட்டாமலிருந்தது, அந்தத் திரேகம் கஸ்தூரி வாடையுடன் கமழ்ந்துக் கொண்டிருந்ததைக் கண்ணுற்ற திரளான ஜனங்கள் பேராச்சரியப்பட்டு மயங்கி நின்றனர். ஆண்டவனுடைய பாதையில் ஷஹீதானவர்கள் இறந்தவர்கள் அல்லர். அவர்கள் ஜீவனுள்ளவர்கள். அவர்களுடைய பூத உடல்களை மண் தின்னாது. புழுப்பூச்சி, ஐவாமிருகங்கள் எதுவுமே தீண்டாது என்று அல்லாஹ்வும், றஸுலும் கூறியவாக்குகளை மெய்ப்பிக்கும் அத்தாட்சிகளாகவே அவர்கள் காணப்பட்டார்கள். மேலே குறிப்பிட்ட சம்பவத்தின் போது அக்கூட்டத்திற்கு சிலர் சோதிப்பதற்கென்றே, வசீகரத்துடன் ஜோதிப் பிரகாசமாக இலங்கிக்கொண்டிருந்த அந்த வலியுல்லாஹ் அவர்களுடைய திருமுகத்தில் விரலைவைத்து அழுத்திப் பார்த்தனர். விரல் பட்ட இடத்தைச் சூழ்ந்து செந்நிறமாக இரத்தத்தின் அறிகுறி காணப்பட்டது. விரலை எடுத்ததும் அந்த உதிரக்கட்டு உடலில் பரவி மறைந்தது. பிறகு அவர்களது பரிசுத்தத் திருமேனி ஆப்பிரிக்காவிலுள்ள மொராக்கோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது. அவர்களது கபுரு ஷரீபில் இன்று வரை ஸலவாத்தின் பரக்கத்தை முன்னிட்டு கஸ்தூரி வாடை கமழ்ந்து கொண்டிருக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் ஸியாரத்திற்காகச் சென்று, தலாயிலுல் கைறாத்தை ஓதி நற்பேறுகளைப் பெற்று வருகின்றனர்.
நூல் : ஜாமிவுல் கறாமாத் 1-வது பாகம், 165-வது பக்கத்தில் காணப்படுகிறது. 


மாற்று மதத்தார்கள் தோற்றுப்போகும் அளவிற்க்கு  இந்த கபுறு வணங்கிகளின் கட்டுக்கதைகளும், கப்சாக்கள்ளும் மிஞ்சிவிடுவதை கண்டோம்