2:186 وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ2:186.
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
6:40 قُلْ أَرَأَيْتَكُمْ إِنْ أَتَاكُمْ عَذَابُ اللَّهِ أَوْ أَتَتْكُمُ السَّاعَةُ أَغَيْرَ اللَّهِ تَدْعُونَ إِن كُنتُمْ صَادِقِينَ6:40.
(நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால், அல்லது (நீங்கள் அஞ்சும்) அந்த (விசாரணைக்) காலம் வந்துவிட்டால் (அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையாவது) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் - அழைப்பீர்களா?” என்பதை (நீங்கள் சிந்தித்துப்) பார்த்தீர்களா?
6:71 قُلْ أَنَدْعُو مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَىٰ أَعْقَابِنَا بَعْدَ إِذْ هَدَانَا اللَّهُ كَالَّذِي اسْتَهْوَتْهُ الشَّيَاطِينُ فِي الْأَرْضِ حَيْرَانَ لَهُ أَصْحَابٌ يَدْعُونَهُ إِلَى الْهُدَى ائْتِنَا ۗ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ ۖ وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعَالَمِينَ6:71.
(நபியே!) நீர் கூறும்: “நமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நமக்கு நேர் வழி காட்டிய பின்னரும் (நாம் வழிதவறி) நம் பின்புறமே திருப்பப்பட்டுவிடுவோமா? அவ்வாறாயின் ஒருவனுக்கு நண்பர்கள் இருந்து அவனை, அவர்கள் “எங்கள் இடம் வந்து விடு” என நேர்வழி காட்டி அழைத்துக் கொண்டிருக்கும் போது ஷைத்தான் அவனை வழிதவறச் செய்தால் பூமியிலே தட்டழிந்து திரிகிறானே அவனைப் போன்று ஆகிவிடுவோம்.” இன்னும் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் காட்டும் நேர்வழியே நேர் வழியாகும்; அகிலங்களின் இறைவனுக்கே வழிபடுமாறு நாங்கள் ஏவப்பட்டுள்ளோம்.”
7:193 وَإِن تَدْعُوهُمْ إِلَى الْهُدَىٰ لَا يَتَّبِعُوكُمْ ۚ سَوَاءٌ عَلَيْكُمْ أَدَعَوْتُمُوهُمْ أَمْ أَنتُمْ صَامِتُونَ7:193.
(இந்த முஷ்ரிக்குகளை) நீங்கள் நேர்வழிக்கு அழைத்தாலும், உங்களை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்; நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது (அழையாது) வாய்மூடியிருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்.
7:194 إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ ۖ فَادْعُوهُمْ فَلْيَسْتَجِيبُوا لَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ7:194.
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!
7:197 وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ لَا يَسْتَطِيعُونَ نَصْرَكُمْ وَلَا أَنفُسَهُمْ يَنصُرُونَ7:197.
அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.
10:106 وَلَا تَدْعُ مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُكَ وَلَا يَضُرُّكَ ۖ فَإِن فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِّنَ الظَّالِمِينَ10:106.
உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர்.
13:14 لَهُ دَعْوَةُ الْحَقِّ ۖ وَالَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِ لَا يَسْتَجِيبُونَ لَهُم بِشَيْءٍ إِلَّا كَبَاسِطِ كَفَّيْهِ إِلَى الْمَاءِ لِيَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَالِغِهِ ۚ وَمَا دُعَاءُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ13:14.
உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை.
16:20 وَالَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ16:20.
அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.
17:57 أُولَٰئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ ۚ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا17:57.
(அல்லாஹ்வையன்றி) இவர்கள் யாரை பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள், ஏன் அவர்களில் மிகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் கூட தங்கள் இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களை செய்து கொண்டும் அவனது அருளை எதிர்பார்த்தும் அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ளது.
17:67 وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّا إِيَّاهُ ۖ فَلَمَّا نَجَّاكُمْ إِلَى الْبَرِّ أَعْرَضْتُمْ ۚ وَكَانَ الْإِنسَانُ كَفُورًا17:67.
இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் (துன்பம்) தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் - இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.
18:14 وَرَبَطْنَا عَلَىٰ قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَن نَّدْعُوَ مِن دُونِهِ إِلَٰهًا ۖ لَّقَدْ قُلْنَا إِذًا شَطَطًا18:14.
அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.
18:52 وَيَوْمَ يَقُولُ نَادُوا شُرَكَائِيَ الَّذِينَ زَعَمْتُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيبُوا لَهُمْ وَجَعَلْنَا بَيْنَهُم مَّوْبِقًا.
“எனக்கு இணையானவர்களென எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.”
22:12 يَدْعُو مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُ وَمَا لَا يَنفَعُهُ ۚ ذَٰلِكَ هُوَ الضَّلَالُ الْبَعِيدُ22:12.
அவன், அல்லாஹ்வையன்றி, தனக்குத் தீங்கிழைக்க முடியாததையும், இன்னும் தனக்கு நன்மையும் செய்யாததையுமே பிரார்த்திக்கிறான் - இதுதான் நெடிய வழிகேடாகும்.
22:62 ذَٰلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِ هُوَ الْبَاطِلُ وَأَنَّ اللَّهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيرُ22:62.
இது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மை (இறைவன்); மற்றும் அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ - அது பொய்யாகும்; இன்னும்: நிச்சயமாக அல்லாஹ் - அவனே உயர்ந்தவன், மிகவும் பெரியவன்.
22:73 يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ ۚ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَن يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ ۖ وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ۚ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ22:73.
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.
23:117 وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ ۚ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ23:117.
மேலும், எவன் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கிறானோ அவனுக்கு அதற்காக எவ்வித ஆதாரமும் இல்லை; அவனுடைய கணக்கு அவனுடைய இறைவனிடம்தான் இருக்கிறது; நிச்சயமாக காஃபிர்கள் வெற்றி அடைய மாட்டார்கள்.
26:72 قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ26:72.
(அதற்கு இப்றாஹீம்) கூறினார்: “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?
26:213 فَلَا تَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَتَكُونَ مِنَ الْمُعَذَّبِينَ26:213.
ஆதலின் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்காதீர்; அவ்வாறு (செய்வீர்) ஆயின், வேதனை செய்யப்படுபவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடுவீர்.
27:62 أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ ۗ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ27:62.
கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.
28:64 وَقِيلَ ادْعُوا شُرَكَاءَكُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيبُوا لَهُمْ وَرَأَوُا الْعَذَابَ ۚ لَوْ أَنَّهُمْ كَانُوا يَهْتَدُونَ28:64.
“உங்கள் இணை (தெய்வங்)களை அழையுங்கள்” என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்; ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்).
2.
அல்லாஹ்வுடன் வேறு எந்த நாயனையும் அழைக்காதீர்; அவனைத்தவிர வேறு நாயன் இல்லை, அவனைத் தவிர எல்லாப் பொருட்களும் அழிந்து விடுபவையேயாகும்; அவனுக்கே எல்லா அதிகாரமும் உரியது; இன்னும் அவனிடமே நீங்கள் (யாவரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
31:30 ذَٰلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِ الْبَاطِلُ وَأَنَّ اللَّهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيرُ31:30.
எதனாலென்றால் நிச்சயமாக அல்லாஹ்வே மெய்யான (இறை)வனாவான்; அவனை அன்றி அவர்கள் பிரார்த்திப்பவையாவும் அசத்தியமானவை; மேலும் நிச்சயமாக அல்லாஹ்வே உன்னத மிக்கவன்; மகாப் பெரியவன்.
35:13 يُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَيُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُّسَمًّى ۚ ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ ۚ وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ35:13.
அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.
35:14 إِن تَدْعُوهُمْ لَا يَسْمَعُوا دُعَاءَكُمْ وَلَوْ سَمِعُوا مَا اسْتَجَابُوا لَكُمْ ۖ وَيَوْمَ الْقِيَامَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ ۚ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيرٍ35:14.
நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.
35:15 يَا أَيُّهَا النَّاسُ أَنتُمُ الْفُقَرَاءُ إِلَى اللَّهِ ۖ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ35:15.
மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.
35:16 إِن يَشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍ جَدِيدٍ35:16.
அவன் நாடினால், உங்களைப் போக்கிவிட்டு, (வேறொரு) புதியபடைப்பைக் கொண்டு வருவான்.
35:17 وَمَا ذَٰلِكَ عَلَى اللَّهِ بِعَزِيزٍ35:17.
இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.
35:18 وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۚ وَإِن تَدْعُ مُثْقَلَةٌ إِلَىٰ حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَيْءٌ وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ ۗ إِنَّمَا تُنذِرُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ وَأَقَامُوا الصَّلَاةَ ۚ وَمَن تَزَكَّىٰ فَإِنَّمَا يَتَزَكَّىٰ لِنَفْسِهِ ۚ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ35:18.
(மறுமை நாளில் தன்) சுமையைக் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அழைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்து கொள்ளப்படாது; எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்லவேண்டியுள்ளது.
35:19 وَمَا يَسْتَوِي الْأَعْمَىٰ وَالْبَصِيرُ35:19.
குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.
35:20 وَلَا الظُّلُمَاتُ وَلَا النُّورُ35:20.
(அவ்வாறே) இருளும் ஒளியும் (சமமாகா).
35:21 وَلَا الظِّلُّ وَلَا الْحَرُورُ35:21.
(அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா).
35:22 وَمَا يَسْتَوِي الْأَحْيَاءُ وَلَا الْأَمْوَاتُ ۚ إِنَّ اللَّهَ يُسْمِعُ مَن يَشَاءُ ۖ وَمَا أَنتَ بِمُسْمِعٍ مَّن فِي الْقُبُورِ35:22.
அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், மண்ணறைகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.
35:23 إِنْ أَنتَ إِلَّا نَذِيرٌ35:23.
நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்லர்.
35:24 إِنَّا أَرْسَلْنَاكَ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا ۚ وَإِن مِّنْ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٌ35:24.
நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.
35:25 وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ جَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَبِالزُّبُرِ وَبِالْكِتَابِ الْمُنِيرِ35:25.
இன்னும் அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசும் வேதத்துடனும் வந்திருந்தார்கள்.
35:26 ثُمَّ أَخَذْتُ الَّذِينَ كَفَرُوا ۖ فَكَيْفَ كَانَ نَكِيرِ35:26.
பின்னர், நிராகரித்த அவர்களை நான் பிடித்துக் கொண்டேன். ஆகவே (அவர்களுக்குரிய) எனது வேதனை எவ்வாறிருந்தது.
35:27 أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ ثَمَرَاتٍ مُّخْتَلِفًا أَلْوَانُهَا ۚ وَمِنَ الْجِبَالِ جُدَدٌ بِيضٌ وَحُمْرٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهَا وَغَرَابِيبُ سُودٌ35:27.
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள் பற்பல விதமானவையான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன.
35:28 وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ كَذَٰلِكَ ۗ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ ۗ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ35:28.
இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
35:29 إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَّن تَبُورَ35:29.
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.
35:30 لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ وَيَزِيدَهُم مِّن فَضْلِهِ ۚ إِنَّهُ غَفُورٌ شَكُورٌ35:30.
அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழுமையாகக் கொடுப்பான்; இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்.
35:31 وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ مِنَ الْكِتَابِ هُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ ۗ إِنَّ اللَّهَ بِعِبَادِهِ لَخَبِيرٌ بَصِيرٌ35:31.
(நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்தும் ஆகும்; நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்ந்தவன்; பார்த்துக் கொண்டிருப்பவன்.
35:32 ثُمَّ أَوْرَثْنَا الْكِتَابَ الَّذِينَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا ۖ فَمِنْهُمْ ظَالِمٌ لِّنَفْسِهِ وَمِنْهُم مُّقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَيْرَاتِ بِإِذْنِ اللَّهِ ۚ ذَٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيرُ35:32.
பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்; ஆனால் அவர்களிலிருந்து தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையாக நடந்து கொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும்.
35:33 جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِن ذَهَبٍ وَلُؤْلُؤًا ۖ وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ35:33.
அ(த்தகைய)வர்கள் நிலையான சுவனபதிகளில் புகுவார்கள்; அங்கே அவர்கள் பொன்னாலும், முத்தாலுமான கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அங்கு அவர்களுடைய ஆடைககள் பட்டா(லானவையா)க இருக்கும்.
35:34 وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنَّا الْحَزَنَ ۖ إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ35:34.
“எங்களை விட்டு (எல்லாக்)கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னிப்பவன்; நன்றியை ஏற்றுக் கொள்பவன்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
35:35 الَّذِي أَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِن فَضْلِهِ لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٌ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٌ35:35.
“அவன் தன்னருளிலிருந்து என்றென்றும் நிலையான வீட்டில் எங்களை இருக்கச் செய்தான்; அதில் எந்த விதமான சங்கடமும் எங்களைத் தீண்டுவதில்லை. அதில் எங்களை எந்தச் சோர்வுகளும் தீண்டுவதில்லை” (என்றும் கூறுவார்கள்).
35:36 وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ نَارُ جَهَنَّمَ لَا يُقْضَىٰ عَلَيْهِمْ فَيَمُوتُوا وَلَا يُخَفَّفُ عَنْهُم مِّنْ عَذَابِهَا ۚ كَذَٰلِكَ نَجْزِي كُلَّ كَفُورٍ35:36.
எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது; அவர்கள் மரித்துப் போகும்படியாக அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது; அன்றியும் அந்(நரகத்)திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது; இவ்வாறே காஃபிர் ஒவ்வொருவருக்கும் நாம் கூலிகொடுப்போம்.
35:37 وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ ۚ أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ ۖ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِن نَّصِيرٍ35:37.
இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்” என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) “சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்; ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை” (என்று கூறுவான்).
35:38 إِنَّ اللَّهَ عَالِمُ غَيْبِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ35:38.
நிச்சயமாக அல்லாஹ் வானங்களுடையவும், பூமியினுடையவும் இரகசியங்களை நன்கறிந்தவன்; இருதயங்களில் (மறைத்து) இருப்பவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன்.
35:39 هُوَ الَّذِي جَعَلَكُمْ خَلَائِفَ فِي الْأَرْضِ ۚ فَمَن كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهُ ۖ وَلَا يَزِيدُ الْكَافِرِينَ كُفْرُهُمْ عِندَ رَبِّهِمْ إِلَّا مَقْتًا ۖ وَلَا يَزِيدُ الْكَافِرِينَ كُفْرُهُمْ إِلَّا خَسَارًا35:39.
அவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும்; காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை; அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை.
35:40 قُلْ أَرَأَيْتُمْ شُرَكَاءَكُمُ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُوا مِنَ الْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌ فِي السَّمَاوَاتِ أَمْ آتَيْنَاهُمْ كِتَابًا فَهُمْ عَلَىٰ بَيِّنَتٍ مِّنْهُ ۚ بَلْ إِن يَعِدُ الظَّالِمُونَ بَعْضُهُم بَعْضًا إِلَّا غُرُورًا35:40.
“அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? “அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?” என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை” (என்று நபியே! நீர் கூறும்).
37:125 أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ الْخَالِقِينَ37:125.
“நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு “பஃலு” (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?
39:36 أَلَيْسَ اللَّهُ بِكَافٍ عَبْدَهُ ۖ وَيُخَوِّفُونَكَ بِالَّذِينَ مِن دُونِهِ ۚ وَمَن يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ39:36.
அல்லாஹ்வே அவனுடைய அடியாருக்குப் போதுமானவனல்லவா? இன்னும் அவனை அல்லாத (வேறு தெய்வங்களாகவுள்ள) அவர்களைக் கொண்டு அவர்கள் உம்மைப் பயமுறுத்துகின்றனர்; மேலும், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர் வழியில் நடத்துவோர் எவருமில்லை.
39:38 وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ ۚ قُلْ أَفَرَأَيْتُم مَّا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ إِنْ أَرَادَنِيَ اللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَاشِفَاتُ ضُرِّهِ أَوْ أَرَادَنِي بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَاتُ رَحْمَتِهِ ۚ قُلْ حَسْبِيَ اللَّهُ ۖ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُونَ39:38.
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்: “அல்லாஹ் தான்!” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக: “அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்: அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?” (நபியே!) மேலும் நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.”
40:20 وَاللَّهُ يَقْضِي بِالْحَقِّ ۖ وَالَّذِينَ يَدْعُونَ
பாபர் மஸ்ஜித்
1949-ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.
வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலைகளை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.
‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.
ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக்கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.
இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்.
அயோத்தியில் ராமர் பிறந்தாரா?
அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.
இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.
இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.
வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.
இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:
கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.
கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.
அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.
இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.
கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.
இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.
இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, ‘இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்’ எனக் கூறுகிறது.
அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்தி ருக்க வேண்டும்.
ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார்.
அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.
இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.
அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது.
இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்?
இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.
‘இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.
அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.
ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.
அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.
”இந்த அயோத்திதான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.
அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.
மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.
எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.
இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.
அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா?
‘பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்! என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.
இந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.
அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.
குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்.
கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர்
பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.
‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?
இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் ‘அமர கோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.
லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?
அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.
அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.
கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா?
இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.
மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.
துளசி தாசர் காலம் என்ன? எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.
இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.
இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.
200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.
உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற் றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது.
பாபர் கோவிலை இடிப்பவரா?
இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.
ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.
பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?
பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,
”மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?
பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.
கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.
பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.
பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.
பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.
கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ”உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.
அதுதான் போகட்டும்! முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.
வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்
”கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்” என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.
1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.
இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.
1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.
எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.
இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.

பாபர் மசூதி - வரலாற்றுச் சான்றுகள் :
வால்மீகி இராமாயணத்தின்படி இராமபிரான் திரேத்தாயுகத்தில் பிறந்தவர். அவருடைய ஆட்சியான இராமராஜ்யம் பாரதத்தின் பொற்காலம் எனப்படுகின்றது. (அன்று தென்னகம் பாரதத்தின் ஒரு பகுதியாக இருக்கவில்லை!) திரேத்தாயுகம் மட்டும் பன்னிரண்டு லட்சத்து தொண்ணூற்று எட்டாயிரம் ஆண்டுகளாகும் (12,98,000), இதற்குப்பின் துவாபராயுகம், எட்டுலட்சத்து அறுபத்தி நான்காயிரம் (8,64,000), இப்பொழுது நடப்பது கலியுகம், நான்கு லட்சத்து முப்பத்து இரண்டா யிரம் (4,32,000); அடுத்து வரப்போவது கிருத கயுகம். திரேத்தாயுகத்தில் பிறந்த காரணத்தினால் தான் பாஜக ஆட்சிபுரியும் மாநிலங்களில் பள்ளிப் பாடநூல்களில் “ஒன்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இராம பிரான் ராமராஜ்யத்தின் பொற்காலம் இன்றும் இந்திய மக்களின் உள்ளங்களில் பசுமையாகத் தைத்து நிற்கின்றது” என்று எழுதப் பட்டுள்ளதைக் காணலாம்.
லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இராமபிரானின் பிறந்த இடத்தை அயோத்தியில் கறாராக அடையாளம் “கண்டுபிடித்துள்ளது” பாஜக - ஆர்எஸ்எஸ்!
அயோத்தியில் பாப்ரி மசூதி 1528-ம் ஆண்டு பாபரின் ஆளுனர் மீர்பாக்கியால் கட்டப்பட்டது (பதிவு செய்யப்பட்ட வரலாறு). பாபர்தான் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார் (1526-1855). இவருடைய மகன் ஹூமாயுன் (1530-1556), 26 ஆண்டுகளும், இவருடைய மகன் மாபெரும் அக்பர் (1556 - 1605), 49 ஆண்டுகளும் ஆண்டனர். இந்த அக்பர் மாமன்னனைத்தான் இந்திய தேசியத்தை உருவாக்கிய தந்தை என்று ஜவஹர்லால் நேரு தனது வரலாற்றின் காட்சிகள் என்ற நூலில் குறிப்பிடுகிறார். பாபர் ஒரு இலக்கியவாதி. இவருடைய இந்திய குறிப்புகள் பாபர் நாமா எனப்படுகின்றன.
இவர் தனது மகன் ஹூமாயினுக்கு எழுதி வைத்துச் சென்ற உயிலில் (மரண சாசனம்) :
“எனது மகனே! இந்தியாவில் பல மதப்பிரிவுகளைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை மன்னாதி மன்னரான அல்லாஹ் உனது கரங்களில் ஒப்படைத்திருப்பதற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும். ஆதலால் உனது கடமைகளாவன.
உன்னைப் போன்றோரை மத துவேஷம் பாதித்துவிட அனுமதிக்கக்கூடாது. மக்களின் எல்லாப்பிரிவினரின் மத ஆசாரங்கள் மற்றும் உணர்வுகளை கணக்கிலெடுத்துக் கொள்வது அவசியம்.
குறிப்பாக பசுவதை செய்வதை தவிர்த்து விடு, எந்த மக்கள் பிரிவினரின் வழிபாட்டுத் தலங்களையும் அழிக்காதே, அடக்குமுறை வாளால் அல்லாமல் அன்பெனும் வாளாலும், கடமை உணர்வாலும்தான் இஸ்லாமை சிறப்பான முறையில் பரவச் செய்யலாம்.
இப்படி உயில் எழுதி வைத்துச் சென்ற மாமன்னன் பாபர்தான் அயோத்தியில் இராமர் பிறந்த இடத்திலிருந்த (ராமர் ஜென்மபூமி) இராமர் கோவிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டினார் என்று இந்துத்துவாவாதிகள் வாய்க் கூசாமல் அபாண்ட பழி சுமத்துகின்றனர்.
இம்மசூதி கட்டப்பட்ட காலத்தில் (16ம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர் துளசிதாசர். இவர்தான் 1575ம் ஆண்டு பேச்சுமொழியில் (அவதி - இந்தி) இராமசரித்திரமனாஸ் என்ற ராமாயணம் எழுதிய இராமபக்தர். புரியாத பழமை சமஸ்கிருதத்திலுள்ள வால்மீகி இராமாயணம் மக்கள் படித்ததில்லை. படிக்கவும் இயலாது. இது “தெய்வமொழி!” சாதாரண இந்துமக்கள் வடநாட்டில் துளசிதாஸ் ராமாயணத்தைப் படித்துதான் பக்தி பரவசமடைந்து இல்லங்களில் ராமசரித்திரமனாஸ் வைத்துக் கொள்கிறார்கள். துளசிதாசர் வேறுபல பக்தி இலக்கிய நூல்கள் எழுதியுள்ளார். இவர் ஒரு துறவி, மதப்போதகர், மதக்கவிஞர். இவருக்குப் பிறகுதான் ராமாயணம் பிரபல்யமானது. பாப்ரி மசூதி கட்டப்பட்ட 30, 40 ஆண்டுகளுக்குள் இவை எல்லாம் எழுதப்பட்டன.
அக்பரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். துளசிதாசருக்கு நெருங்கிய முஸ்லீம் நண்பர் ரஹீம்கான் கானா என்பவர். இவர் சமஸ்கிருதத்திலும், இந்தியிலும் (அவதி) பிரசித்திபெற்ற கவிஞர், இவர்கள் இருவரின் விருப்பப்படி அக்பர் ஆட்சியின் நிதி அமைச்சர் தோடர் மால் (இந்து) வாரணாசியில் அனுமார் கோவில் கட்டிக்கொள்ள அக்பரின் வாழ்த்துக்களுடன் நிலம் தானமாகக் கொடுத்து இன்றும் துளசி அனுமார் மந்திர் அங்கு நிமிர்ந்து நிற்கின்றது. இராமர்கோவில் இடிக்கப்பட்டிருந்தால் தனது எதிர்ப்பை, வேதனையை வெளியிட்டிருப்பார். இராமர்கோவில் அயோத்தியிலும், வாரணாசியிலும் கட்ட அக்பரிடம் இடம் கேட்டிருந்தால் அல்லது பாபரால் இடிக்கப்பட்டிருந்தால் அக்பர் நிச்சயமாக இராமர்கோவில் கட்டிக் கொடுத்திருப்பார். அயோத்தியில் இன்றும் எழில்மிகு காட்சியளிக்கும் பிரம்மாண்டமான அனுமார் மாளிகை கூட 1754-ல் நவாப் மன்சூர் அலியால் கட்டப்பட்டது. இவையாவும் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள். வரலாற்றுப் புரட்டர்கள் இவைகளையெல்லாம் இருட்டடிப்பு செய்து வருகின்றனர். பாடநூல்களில் “செக் யூலர்” கல்வியில் இடம்பெறுவதில்லையே!
சீக்கிய மதப்பிரிவு நிறுவனர் குருநானக் (1469-1538), பாப்ரி மசூதி கட்டப்பட்ட காலத்தில் வாழ்ந்த பெருமகனார். காஷ்மீர் முதல் இலங்கை வரை, சோமநாத், வாரணாசி, மதுரா, பிருந்தாவன் என விரிவான சுற்றுப்பயணம் செய்தவர். மெக்கா, மெதினாவிற்குக் கூட சென்று வந்துள்ளவர். பாப்ரி மசூதி கட்டப்பட்ட பிறகு பத்து ஆண்டுகள் வாழ்ந்த பேரறிஞர், இராமர் கோவில் இடிக்கப்பட்டிருந்தால் அமைதி காத்திருக்கமாட்டார். பிரபல வங்காள சனாதன பிராமண முனிவர் சைத்தன்யா, 1486ல் பிறந்து பாப்ரி மசூதி கட்டப்பட்ட பிறகு 35 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர். இராமர் கோவில் இடிக்கப்பட்டிருந்தால் இவர் வாய் மூடி மவுனியாக இருந்து இருக்கமாட்டார்.
இக்கட்டத்திற்குபின் தோன்றிய முனிவர்களோ, 19ஆம் நூற்றாண்டின் பிரபலமான இந்து முன்னோடிகள் ராஜாராம் மோகன்ராய் (பிரம்மசமாஜம்), தயானந்த சரஸ்வதி (ஆரிய சமாஜம்), தேவேந்திரநாத் தாகூர் போன்றவர்களோ காங்கிரசின் பிரபல இந்து தலைவர்களான மதன்மோகன் மாளவியா, லாலா லஜ பதிராய், சுவாமி ஷ்ரதானந்தா, பால கங்காதர் திலகர், காந்தி, மோதிலால் நேரு போன்றவர்கள் எவருமே இராமர் கோவில் இடிக்கப்பட்டதாக ஏன் அறிந்திருக்கவில்லை? பாஜகவின் பதில் என்ன?
முதல் சர்ச்சை - பிரிட்டிஷ் விஷமம்!
அலகாபாத் பல்கலைக் கழகத்தின் “மத்திய நவீனகால வரலாற்றுத்துறை முதல்வர்பேராசிரியர் டாக்டர் சுஷில் மஹிவத்சவா 1985 ஜனவரி ப்ரோப் என்ற மாத இதழில் பாப்ரி மசூதி சர்ச்சை பற்றி கூறுவதாவது;-
ஃபைசாபாத்தில் சிப்பாய் கலகம் வெடித்தபொழுது அயோத்தி மகந்த்கள் (மடா திபதிகள்) பிரிட்டிஷாரை பகிரங்கமாக ஆதரித்தனர். பிரிட்டிஷ் ராணுவத்திற்கு தங்கும் இடமும் உணவுப் பொருள்களும் கொடுத்து உதவினர்.சிப்பாய் கலகம் அடக்கப்பட்டபின் மகந்த்களுக்கு சன்மானமாக பாப்ரி சொத்துரிமையுடன் வழங்கப்பட்டது. இராமர் பிறந்ததை குறிக்கும் வகையில் மேடை அமைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது.பாப்ரி மசூதியையும் இந்த மேடையையும் பிரித்துக்காட்டும் வேலியும் இவைகளுக்கிடையில் அமைக்கப்பட்டது என்று ஃபைசாபாத் மாவட்ட கெஜெட்டை ஆய்வுசெய்து எழுதியுள்ளார். இராமர் பிறந்த இடம் மசூதி வளாகத்தில்தான் உள்ளது என்று உரிமை கொண்டாட இந்துக்களை பிரிட்டிஷார் ஊக்குவித்தனர் என்றும் ஸ்ரீவத்சவா எழுதுகின்றார்.
இந்தப்பிரச்சனை 1853ஆம்ஆண்டு முதல் முதலில் சிலரால் எழுப்பிவிடப்பட்ட பொழுது இந்துக்களும் முஸ்லிம்களும் ஊர் பஞ்சாயத்துப்பேசி 1855ல் ஒரு உடன்பாடு கண்டனர். பிரச்சனை தலை தூக்காமல் நான்கு ஆண்டுகள் அமைதி நிலவியது. 1859ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மாவட்ட ஆட்சியர் வடக்கு நுழைவாயிலின் மூலம் மட்டும்தான் முஸ்லிம் நுழைய வேண்டும் என உத்தரவு போட்டார். ஊர்மக்கள் ஆட்சேபம் கிளப்பி பஞ்சாயத்து முடிவை மாற்றக்கூடாது எனக்குரல் எழுப்பினர். ஆனால் பிரிட்டிஷ் மாவட்ட ஆட்சியர் உடனே தலையிட்டு பஞ்சாயத்து உடன் பாட்டில் கையொப்பமிட்ட இந்து-முஸ்லிம் பெரியவர்களை ஃபைசாபாத் சாலையோரமுள்ள பெரிய ஆலமரத்தில் தூக்கிலிட்டார்.
ஆனால் இந்து முஸ்லிம் மக்கள் இந்த ஆலமரத்தை புனித வழிபாட்டு நினைவுச் சின்னமாக்கிவிட்டனர். ஆதலால் பிரிட்டிஷ் கமிஷனர் தலையிட்டு 1860-ஆம் ஆண்டு அந்த மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்து புனித உடன்பாட்டுத் தடயங்களை அழித்தனர்.
இதற்குப்பின் 1949 வரை (89 ஆண்டுகள்) மக்கள் அமைதிகாத்து முஸ்லிம் மக்கள் வடக்கு வாயில் வழியாகவே சென்று தொழுகை நடத்தி வந்தனர். நாடு விடுதலைபெற்றபின் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி நள்ளிரவில் 50, 60 பேர் கொண்ட ஒரு ஆர்.எஸ்.எஸ் அணி மசூதி வாயிலை உடைத்து நுழைந்து அதன் மத்திய மண்டபத்தில் குழந்தை இராமர், சீதா பிராட்டியார் ஆகியோர் சிலைகளை நட்டுவைத்து இவர்களின் திரு உருவங்களை சுவர்களில் காவி மஞ்சள் நிறத்தில் வரைந்து வைத்தார்கள். இராமர் தோன்றி விட்டதாக புரளியை மறுநாள் காலை கிளப்பி விட்டனர். காவல்துறை கான்ஸ்டபிள் ஹன்ஸ் ராஜ் இதைத் தடுக்க முயன்றும் பயனில்லை.
மறுநாள் (1949 டிசம்பர் 22) காலை காவலர் மாதாபிரசாத் இதுபற்றி புகார் செய்து முதல் தகவல் அறிக்கை எழுதினார். இவ்வறிக்கையில் ஆர்எஸ்எஸ்காரர்களான ராம்தாஸ், ராம் சுக்லாதாஸ், சுதர்சனதாஸ் ஆகியோர் 50, 60 பேர் கும்பலாக வந்து இதைச் செய்ததாக எழுதப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டை பாப்ரிமசூதிக்குள் வைக்க திட்டமிட்டதே அன்றைய மாவட்ட ஆட்சியர் கே.கே.நய்யார்தான். இவர் ஆர்எஸ் எஸ் பிரமுகர், தனது திட்டத்தை நிறைவேற்றி பிறகு சிறிது காலத்திலேயே வேலையை ராஜினாமா செய்து ஜனசங் (முன்னாள் பாஜக) கட்சியில் பகிரங்கமாக சேர்ந்து பணியாற்றி நாடாளுமன்றத்தில் ஜனசங் எம்.பி.யாக (1967-70) உயர்த்தப்பட்டார். இறுதியில் 1992ல் மசூதியே இடிக்கப்பட்டது.

Subscribe to:
Comments (Atom)